விதிக‌ள்

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download
விதி 1. எப்பொருளும் பாகம் பாகமாகப் பகுபடும்.
விதி 2. எப்பொருளில் இருப்பதும் ஏனைய எதிலேனும் இருக்கும்.
விதி 3. எப்பொருளும் ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கும்.
விதி 4. எப்பொருளும் ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டையும். அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கும்.
விதி 5. எப்பொருளும் ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொடரும்.
விதி 6. எப்பொருளுக்கும் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கும்.
விதி 7. எப்பொருளுக்கும் பயன் இருக்கும்.

 1. எப்பொருளும் பாகம் பாகமாகப் பகுபடக்கூடியது’ என்பது விதி. பகுக்கமுடியாத பொருள் என்று எதுவும் இல்லை. பகுக்கமுடியாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.

 2. எப்பொருளில் இருப்பதும் மற்ற ஏதாவது ஒரு பொருளில் இருக்கும்’ என்பது விதி. இணையற்ற பொருள் என்று எதுவும் இல்லை. இப் பிரபஞ்சத்திலிருக்கும் கூறுகளைக் கொண்டே பொருட்கள் படைக்கப்படுவதால், ஒரு பொருளில் இருப்பது மற்ற ஏதாவது ஒரு பொருளிலும் இருக்கும். இணையற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.

 3. எப்பொருளும் மற்ற பொருட்களுடன் தொடர்பிலிருக்கும்’ என்பது விதி. எதனோடும் தொடர்பில்லாத பொருள் என்று எதுவும் இல்லை. உன் மனதால் தொடர்புகொள்ள முடியாத பொருளை உன்னால் எண்ணமுடியாது. எதனோடும் தொடர்பு இல்லாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.

 4. எப்பொருளும் மற்ற பொருட்களால் பாதிக்கப்படும்’ என்பது விதி. எதனாலும் பாதிக்கப்படாத பொருள் என்று எதுவும் இல்லை. எதனாலும் பாதிக்கப்படாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.

 5. எப்பொருளும் ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து’ என்பது விதி. ஒரே ஒரு உருவில் மட்டுமே இருக்கும் பொருள் என்று எதுவும் இல்லை. ஒரே ஒரு உருவில் மட்டுமே இருக்கும் பொருளை மனிதனால் படைக்க முடியாது. அதாவது, எப்பொருளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உருக்கள் இருக்கும்.  உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் உன்னால் அசைய முடியாது. நீ அசையும்போது, நீ ஒரு உருவில் இருந்து மற்றொரு உருவிற்கு மாறுகிறாய். உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் மாற்றம் என்பதை ஒருபோதும் உன்னில் காணமுடியாது.

 6. எப்பொருளுக்கும் மாற்றுப்பொருட்கள் இருக்கும்’ என்பது விதி. மாற்றற்ற பொருள் என்று எதுவும் இல்லை. ஒரு பொருள் மறையும்போது மற்றொரு பொருள் தோன்றியே ஆக வேண்டும். மாற்றற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.

 7. எப்பொருளுக்கும் பயன் உண்டு’ என்பது விதி. பயனற்ற பொருள் என்று எதுவும் இல்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

‘விதியை ம‌தியால் வெல்ல‌ முடியும்’ என‌க்கூவும் அறிவிலிக‌ளே, இவ்விதிக‌ளை உங்க‌ளால் அழிக்க முடியுமா? அறிவிருந்தால் அழித்துக் காட்டுங்க‌ள்!

4 + 2 = 6
நாலுட‌ன் இர‌ண்டைக் கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து ஆறு.

6 + 2 = 8.
ஆறுட‌ன் இர‌ண்டைக்கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து எட்டு.

6 + 6 = 12.
ஆறுட‌ன் ஆறைக்கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து ப‌ன்னிரெண்டு.

எதை எப்படிச் செய்தால் எது வரும், எது வராது என்பதை நிர்ணயிப்பது விதி. விதியைக் காண்பதுதான் மதி (அறிவு). எது வருகிறதோ அது கதி.


அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.


ஆவது = வருவது. அதாவது, விதியை அறியாதவன் அறிவில்லாதன். விதியை அறியாதவனால் வருவதைச் சரியாகக் கணிக்க முடியாது. அறிவியலின் அனைத்துப் பிரிவுகளும் விதியைத்தான் முன்னிறுத்துகின்றன. எது வரும்? எது வராது? What would be the outcome? What will happen? What will not happen? [விதியை வகுத்தது யார்? விதியை வகுத்தவன் கடவுள் என்கின்றன மதக் கோட்பாடுகள்.]

4 + 2 = 6
நாலுடன் இரண்டைக் கூட்டினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது கணிதம்.
What would be the outcome if four is added to two?

H2O + CO2 → H2CO3
நீருடன் கார்பன் டைஆக்ஸைடு கூடினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது வேதியியல்.
What would be the outcome if water reacts carbon dioxide?

ஆண் + பெண் → ஆணா/பெண்ணா?
ஆணுடன் பெண் கூடினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது உயிரியல்.

உனக்கு நாளை விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது ஜோதிடம்.

இதே ரீதியில்,
உன்னை நோய்க்கிருமிகள் தாக்கினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது pathology.

எருமைச்சாணியையும் கழுதை மூத்திரத்தையும் கலந்து வைத்தால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது biotechnology. இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.


பொருளுக்குப் பொருள் விதி மாறுமா?


விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.

பொருளுக்குப் பொருள் விதி மாறாது. நேரத்திற்கு நேரம் விதி மாறக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் விதி மாறக்கூடிதல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்ற பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.

பொருளுக்குப் பொருள் நியூட்டன் விதி மாறக்கூடியதல்ல. பொருளுக்குப் பொருள் கூலூம் விதி மாறக்கூடியதல்ல. பொருளுக்குப் பொருள் வெப்பவியலின் விதிகள் மாறக்கூடியதல்ல. விதி பற்றி அறியாத மூதேவிகள் தான் தங்களால் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூவுகின்ற‌ன‌. பல மேடைகளில் நமது மேதகு முட்டாள் துணைவேந்தர்கள் கூறும் அறிவுரைகளில் ஒன்று: நம்மால் எதையும் மாற்ற முடியும். அரசியல்வாதிகள் தான் ஏதோ அறியாமல் உளறுகிறார்கள் என்றால், இந்த மூதேவிகளுக்கு அறிவிருக்கிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் அறிவு இந்த நிலை என்றால், இந்த முட்டாள்களுக்கு கீழுள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்களின் மற்றும் அவர்களிடம் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. இத்தகைய முட்டாள் மூதேவிகள் எப்படிப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமனம் பெறுகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.

1. ‘எந்த ஒரு பொருளும் பகுதிகளைக் கொண்டது’ என்பது விதி.

பகுதிகளாகப் பிரிக்க முடியாத எந்த ஒரு பொருளையும் மனிதன் படைக்க முடியாது. பகுதிகளாகப் பிரிக்க முடியாத பொருள் எது? எந்தப் பொருளையும் பகுதிகளாகப் பிரிக்க முடியாத பட்சத்தில் எந்த செயலையும் ஒருவனால் செய்ய முடியாது. எந்தப் பொருளையும் பகுதிகளாகப் பிரிக்க முடியாத பட்சத்தில் உண்ண முடியாது, சுவாசிக்க முடியாது. பகுதிகளாகப் பிரியக்கூடிய பொருளைத்தான் உண்ண முடியும். நீ சுவாசிக்கும் காற்றும் அதன் பகுதிகளாகப் பிரியவில்லையெனில் நீ உயிர் வாழ முடியாது.

2. ‘எந்த ஒரு பொருளில் இருப்பதும் மற்ற ஏதாவது ஒரு பொருளிலும் இருக்கும்’ என்பது விதி.

இணையற்ற பொருளை எவனாலும் படைக்க முடியாது. படைக்கப்படும் பொருட்களின் கூறுகள் இவ்வுலகத்திலிருந்தே எடுக்கப்படுவதால், எந்த ஒரு பொருளில் உள்ளதும் மற்ற ஏதாவது ஒரு பொருளில் இருக்கும்.

3. ‘எந்த ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுடன் தொடர்பு இருக்கும்’ என்பது விதி.

உன் மனதால் தொடர்பு கொள்ள முடியாத எந்த ஒரு பொருளையும் உன்னால் எண்ண முடியாது.

4. ‘எந்த ஒரு பொருளும் மற்ற பொருட்களால் பாதிக்கப்படும்’ என்பது விதி.

எவ்வொரு பொருளும் மற்ற பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதே ரீதியில், எவ்வொரு பொருளும் மற்ற பொருட்களால் பாதிப்பிற்கு உள்ளாகும்.

5. ‘எந்த ஒரு பொருளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உருக்கள் இருக்கும்’ என்பது விதி.

‘ஒரே ஒரு உருவத்தில் மட்டுமே அது இருக்கும்’ என இருக்கும் பொருளுக்கு உருமாற்றம் என்பது கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை உனக்கு பல உருக்கள். குழந்தையாக, வாலிபனாக, முதியவனாக… உனக்கு ஒரே ஒரு உருவம்தான் எனில், நீ என்றும் குழந்தையாகவே இருந்திருப்பாய். நீ என்றும் வாலிபனாக ஆகவே முடியாது.

6. ‘எந்த ஒரு பொருளுக்கும் மாற்றுப் பொருள் இருக்கும்’ என்பது விதி.

தோன்றிய எதுவும் மறைந்தே ஆக வேண்டும். தோன்றிய எதுவும் மறையவில்லையெனில், மாற்றம் என்ற ஒன்று இருக்காது. ஒரு பொருள் மறையும்போது அப்பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருள் தோன்றியே ஆக வேண்டும்.

7. ‘எந்த ஒரு பொருளுக்கும் பயன் இருக்கும்’ என்பது விதி.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.          (குறள் எண் : 423)


மெய்ப்பொருள் = அழியாப்பொருள் = விதி. விதியைக் காண்பதுதான் அறிவு.
அறிவுடையார் ஆவது அறிவார். [ஆவது = விதிப்படி வருவது] விதியைக் காணும் முறைதான் அறிவியல்.

The laws of nature let you to expand your knowledge about anything. You cannot expand your knowledge if the laws of nature do not let you to expand it.

• Divisibility lets you know the parts of that which is under study. Anything which has no divisibility will never let you to know what it has in it. What is that which has nothing in it? What will you do if nothing has divisibility? What would your knowledge be if nothing has divisibility?

• Comparability lets you compare and find the abundance of that which is under study. Do you have that which I have? How many of them have that? How many times it is? How frequent it is? How often it is? No quantification can be done without a unit of comparison. The multiplicity, numerosity, relative distribution or the relative abundance of a thing cannot be found in the absence of comparability.

• Connectivity lets you know those which are connected to that which is under study. Anything which has no connections has no bounds.

• Sensitivity lets you know those which can affect that which is under study. Sensitivity allows you to know the cause of an effect and the effect of a cause. No cause can have an effect on that which has no sensitivity.

• Transformability lets you know the forms of that which is under study. You can never transform that which can exist only in one form.

• Substitutability lets you know ‘what can’ instead of ‘that which is under study’.

• Satisfiability lets you to know the conditions that can be satisfied by that which is under study.
The laws of nature which constitute and let you expand your knowledge are discoverable in anything and everything.

அழிவ‌து பொருள். அழியாத‌து விதி. அழியா விதியை வ‌குத்த‌வ‌ன் க‌ட‌வுள். There is a difference between a thing and its properties. The failure to distinguish the difference between a thing and its properties is the prime cause of many human confusions.


You will discover the same laws of nature in anything and everything!


2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!

The Expected Knowledge
The Knowledge Expansion Manual


 

Advertisements

11 Responses to விதிக‌ள்

 1. Anonymous says:

  விதியை மதியால் வெல்ல முடியுமா?
  வியாச முனிவரிடம் ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செவ்வனே செய்து வந்தான். அவனது பணிவிடைகளால் வியாசரும் மிகவும் மகிழ்ந்து போனார்.

  ஒரு நாள் ஆசிரமத்திற்குத் தேவையான விறகுகளைச் சேகரிப்பதற்காக அந்த சீடன் காட்டிற்குள் சென்ற போது ஒரு முனிவரை சந்திக்கிறான். முக்காலமும் அறிந்த முனிவரான அவர், அவனை முன்னே செல்ல விட்டு ‘இவன் எவ்வளவு பணிவிடைகள் செய்தாலும் அவனது குருவினாலேயே (வியாசர்) அவனுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென்பது விதி என்று கூறிச் செல்கிறார்.

  அதைக் கேட்டுவிட்ட அந்த சீடனுக்கு அன்றிலிருந்து மனசே சரி இல்லாமல் முக வாட்டத்துடனேயே திரிந்தான் . ஆனால் அவன் குருவிற்கு செய்ய வேண்டியவைகளை எப்போதும் போல செய்து வந்தான். அவனது முகவாட்டத்தைக் கண்ட வியாசர் அவனிடம் அதற்கான காரணத்தை வினவினார். முதலில் கூற மறுத்த சீடன் பிறகு குருவின் கட்டளையின் பேரில் காட்டில் நடந்தவைகளைக் கூறினான்.

  அதைக்கேட்டு விட்டு பலமாகச் சிரித்த வியாசர், இதற்காகவா இவ்வளவு வருத்தம், நீ ஒன்றும் கவலைப்படாதே , நான் அந்த விதியை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறி அவனை சமாதனம் செய்தார். பிறகு நேராக எமலோகம் சென்று எமதர்மனிடம் ஆயுள் நிர்ணயம் செய்து வைக்கும் சுவடியைக் கேட்டார். அவனும் மறுக்காமல் சுவடியை சித்திரகுப்தனிடம் இருந்து எடுத்துக் கொடுக்க அதில் உள்ள பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்க, அவர் சீடனின் பக்கம் வந்ததும் அதில் உள்ளவைகளைப் படித்தார். அதில் பின்வருமாறு எழுதி இருந்தது,

  ” என்றைக்கு வியாச முனிவரானவர் பூலோகத்தில் இருந்து எமலோகம் வந்து எமதர்மனிடம் சுவடியை வாங்கி இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்க்கிறாரோ , அன்று இவனுக்கு மரணம் சம்பவிக்கும்”

  (நடக்க இருப்பதை ஒரு போதும் தடுத்து விட முடியாது.)

 2. Anonymous says:

  581.நேர உறவு நெத்தியிலே கண்ணாம்.
  582.ஆச்சானுக்கு பீச்சான் மதினிக்கு ஒடப்பொறந்தான்.
  583.கத்தி முனையினும் பேனா முனைக்கு கூர்மை அதிகம்.
  584.நுனிமரத்திலேறி அடிமரத்தை வெட்டினானாம்.
  585.விதியை மதியால் வெல்ல முடியுமா?
  586.ரிஷி மூலம் நதி மூலம் ஆராயக் கூடாது.
  587.ஆடி அழைத்து வரும் தை துடைத்து வரும்.
  588.அடீ என்றழைக்க அவளைக் காணோம் அஷ்டபுத்திராள் எத்தனை பேர் என்றானாம்.
  589.மாமியாராத்து சுகம் எப்படி இருக்கிறதென்றால் முழங்கையில் இடித்தது போல் இருக்கிறதென்றாளாம்.
  590.ஆடை வாய்க்கிறதும் ஆம்படையான் வாய்க்கிறதும் அதிர்ஷ்ட்டத்தைப் பொறுத்தது. .
  621. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையும் தங்கமாகும்.
  622. ராமர் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி.
  623.ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைத்தானாம்.
  624.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம்.
  625.கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்.
  626.காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  627.காய்த்த மரம்தான் கல்லடி படும்.
  628.காரியம் ஆகும்வரை காலை பிடிப்பார், காரியம் ஆனதும் கழுத்தைப் பிடிப்பார்.
  629.சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

  621. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையும் தங்கமாகும்.
  622. ராமர் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி.
  623.ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைத்தானாம்.
  624.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம்.
  625.கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்.
  626.காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  627.காய்த்த மரம்தான் கல்லடி படும்.
  628.காரியம் ஆகும்வரை காலை பிடிப்பார், காரியம் ஆனதும் கழுத்தைப் பிடிப்பார்.
  629.சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
  630.சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். .
  601.பெண் ஒருத்தி பிறக்கு முன்னே அவளுக்குப் புருஷனும் பிறந்திருப்பான்.
  602.அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
  603.ஏழாவது பெண் எரப்பெல்லாம் தங்கம்.
  531.இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்க நினைத்தானாம்.
  532.ஐந்தடுப்பு மூட்டி இஞ்சிப் பச்சடி பண்ணினாளாம்.
  533.ஐந்து பெண்ணைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
  534.நெய்யில்லா உண்டி பாழ் நீறில்லா நெற்றி பாழ்.
  535.மட்டைக்கு இரண்டு கீற்று தான்.
  536.மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினானாம்.
  537.மூட்டைப் பூச்சிக்குப் பயந்து விட்டைக் கொளுத்தினானாம்.
  538.இரண்டு கை தட்டினால் தான் ஓசை.
  539.கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
  511.கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
  512.குப்பையில் கிடந்தாலும் குன்றிமணியின் நிறம் மாறுமா?
  513.குளிக்கப் போய் சேறு பூசிக்கொள்ளலாமா?
  514.கெண்டையைப் போட்டு வராலை இழு.
  515.கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே.
  516.கேட்டதை எல்லாம் நம்பாதே நம்பினதை எல்லாம் சொல்லாதே.
  517.சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
  518.தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
  519.தன் கையே தன் கண்ணைக் குத்தினாலும் கலங்காமல் இருக்குமா?
  501.ஈர நாவிற்கு எலும்பில்லை.
  502.உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
  503.உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
  504.ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
  505.எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
  506.எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  507.காகிதப் பூவிற்கு மணமேது?
  508.கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
  509.கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
  510.காலம் போகும் வார்த்தை நிக்கும்.
  491.சனிப் பிணம் தனிப் போகாது.
  492.அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்.
  493.கமலையில் பிறக்க முக்தி காஞ்சியில் வாழ முக்தி காசியில் இறக்க முக்தி.
  494.அகமுடையான் அடித்தாலும் அடித்தான் கண் புளிச்சை விட்டது.
  495.துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு ரெட்டைப் படியாம்.
  496.கல் என்றால் கல் கடவுளென்று நம்பினால் கடவுள்.
  497.பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்.
  498.காலுக்கு உதவாததைக் கழட்டி எறி.

  604.ராஜா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டாட்டி தான்.
  605.தாயில்லாத பிள்ளை தறுதலை.
  606.தாயைத் தண்ணிர்த்துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க அவசியமில்லை.
  607.தாய்க்குப் பின் தாரம்.
  608.எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக்கொண்டு சீப்பு கண்ட இடத்தில் தலைசீவிக் கொண்டாளாம்.
  581.நேர உறவு நெத்தியிலே கண்ணாம்.
  582.ஆச்சானுக்கு பீச்சான் மதினிக்கு ஒடப்பொறந்தான்.
  583.கத்தி முனையினும் பேனா முனைக்கு கூர்மை அதிகம்.
  584.நுனிமரத்திலேறி அடிமரத்தை வெட்டினானாம்.
  585.விதியை மதியால் வெல்ல முடியுமா?
  586.ரிஷி மூலம் நதி மூலம் ஆராயக் கூடாது.
  587.ஆடி அழைத்து வரும் தை துடைத்து வரும்.
  588.அடீ என்றழைக்க அவளைக் காணோம் அஷ்டபுத்திராள் எத்தனை பேர் என்றானாம்.
  571.உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகணும்.
  572.மகள் பிறக்குமுன் பூட்டிக்கோ மருமகள் வருமுன் சாப்பிட்டுக்கோ.
  573.உதட்டிலே புன்னகை உள்ளத்திலே விஷம்.
  574.அடியேன் குலத்துக்கு ஆகிவந்த காரியம்.
  575.வைக்கோல் போரிலே ஊசியைத் தேடினானாம்.
  576.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  577.மனம் காவலா மதில் காவலா??
  578.காக்கை ஏறவும் பனம்பழம் விழவும்.
  579.கொண்டு குலம் பேசாதே.
  580.தாலி பெண்ணிற்கு வேலி.
  561.போகாத ஊருக்கு வழி சொன்னானாம்.
  562.ஆகாதத்திற்கு அண்ணாத்தையைக் கேளு.
  563.நீ தடுக்கில் நுழைந்தால் நான் கோலத்தில் நுழைவேன்.
  564.குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை.
  565. அரியும் சிவ்னும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு.
  566.கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்த்தானாம்.
  567.தலைச்சன் பிள்ளைத்தாச்சி இடைச்சன் பிள்ளைத்தாச்சிக்கு மருத்துவம் சொன்னாளாம்.
  568.பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ.
  551.கெட்டிக்காரன் புளுகு எட்டே நாளில் அம்பலமாம்.
  552.முன்னே பின்னே செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும்!
  553.ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
  554.ஆயிரம் வராகன் கொடுத்து ஆனை வாங்கியவனுக்கு அரை வராகன் கொடுத்து அங்குசம் வாங்க முடியலையாம்.
  555.கலகம் பிறந்தால் தான் நன்மை பிறக்கும்.
  556.நாராயணன் கோயிலுக்கு நாலு பக்கமும் வாசல்.
  557.வீரனுக்கு ஒரு முறை தான் சாவு கோழைக்கோ தினம் தினம் சாவு.
  558.காரியம் பெரிதா வீரியம் பெரிதா?
  541.கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரிகடன் வாங்கியும் பட்டினி.
  542.எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் ஆதாயம்.
  543.புலி பதுங்குவது பாய்வதற்கு தான்.
  544.பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
  545.இந்தப் பூனையும் அந்தப் பாலைக் குடிக்குமா?
  546.ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியில் சோறு நான்கு பிள்ளை பெற்றவளுக்கு நடு வீதியில் சோறு.
  547.மூத்தது மோழை இளையது காளை.
  548.களவும் கற்று மற.
  549.கொடிக்குக் காய் பாரமாகுமா?
  550.வாழைப் பழத்தில் ஊசி ஏற்றியது போல.

 3. Anonymous says:

  471.வெள்ளம் வந்தபின் அணை போட முடியுமா?
  472.வெளுத்ததெல்லாம் பாலுமல்ல கறுத்ததெல்லாம் நீருமல்ல.
  473.வெறுங்கை முழம் போடுமா?
  474.வெறும் வாயை மெல்பவனுக்கு ஒரு பிடி அவல் கிடைத்தார்ப் போல.
  475.வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
  476.வேலிக்கு ஓணான் சாட்சி.
  477.வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
  478.வேலை இல்லாத அம்பட்டன் பூனையைப் பிடித்து சிரைத்தானாம்.
  479.வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
  431.மைனங்கி மைனங்கி பூவை எங்கே வைத்தாய் என்றால் வாடாமல் வதங்காமல் கொடி அடுப்பில் வைத்தேன் என்றாளாம்.
  432.மொட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தானாம்.
  433.மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்ப் போல.
  434.யாதும் ஊரே யாவரும் கேளிர்.
  435.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  436.யானையைக் கட்டித் தீனி போட்டார்ப் போல.
  437.யானைப் பசிக்கு சோளப் பொறி.
  438.யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
  411.மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  412.மனமிருந்தால் மார்க்கமுண்டு..
  413.மாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் பொன்கலம்.
  414.மாவுக்கேற்ற மணம் கூழுக்கேற்ற குணம்.
  415.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.
  416.மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
  417.மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கலையாம்.
  418.மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கணுமா?
  419.முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
  420.முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
  391.பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
  392.பெற்றதெல்லாம் பிள்ளையுமல்ல கற்றதெல்லாம் கல்வியுமல்ல.
  393.பேய்க்குக் கள் வார்த்தது போல.
  394.பேயானாலும் தாய்.
  395.பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகணும்.
  396.பொன்கோடி கிடைத்தாலும் புதன் கோடி கிடைக்காது.
  397.பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தார்ப் போல.
  398.பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.
  399.பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது.
  371.பாம்பென்றால் படையும் நடுங்கும்.
  372.பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும்.
  373.பாடப் பாட ராகம் மூடமூட ரோகம்.
  374.பாத்திரமறிந்து பிச்சையிடு கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு.
  375.பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
  376.பிச்சைக் குடுமியில் சன்யாசம் புகுந்ததாம்.
  .377.பிச்சை எடுத்தாராம் பெருமாள் அத்தைப் பிடுங்கினாராம் அனுமார்.
  378.பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளிக் குதித்தானாம் கிழவன்.
  379.பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.
  351.பணக்காரன் பின்னால் பத்துபேர் பைத்தியக்காரன் பின்னால் பத்துபேர்.
  352.பணம் இல்லாதவன் பிணம்.
  353.பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்.
  354.பணம் பத்தும் செய்யும்.
  355.பணம் பந்தியிலே குலம்/குணம் குப்பையிலே.
  356.பணம் பாதாளம் வரை பாயும்.
  357.பதறிய காரியம் சிதறும்.
  358.பந்தியிலேயே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்றானாம்.
  359.பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்.
  360.பருத்தி புடவையாகக் காய்த்தது போல
  361.பருப்பில்லாமல் கல்யாணமா?
  331.நெருப்பென்று சொன்னால் வாய் வெந்துவிடுமா?
  332. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே.
  333.நெய்க்கு தொன்னை ஆதாரமா தொன்னைக்கு நெய் ஆதாரமா?
  334.நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு.
  335.நொறுங்கத் தின்பவன் நூறு வயது வாழ்வான்.
  336.நோகாமல் நோன்பு நூற்றாளாம்.
  337.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  338.பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுவும் பேசாதே.
  339.பகலிலே பசுமாடு தெரியாதவனுக்கு இரவிலே எருமை மாடு தெரியுமா?
  311.தோளுக்கு மிஞ்சினால் தோழன்.
  312.நத்தை வயிற்றில் முத்து பிறந்தார்ப் போல.
  313.ந்தி மூலம் ரிஷி மூலம் ஆராயக்கூடாது.
  314.நம்பி வந்தவரை நட்டாற்றில் கை விட்டானாம்.
  315.நரிக்குக் கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  316.நரி வலம் போனாலென்ன இடம் போனாலென்ன மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி.
  317.நல்ல மாட்டுக்கு ஒரு அடி நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்.
  318.நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமல் போனானாம்.
  319.நாடறிந்த பார்ப்பனனுக்குப் பூணூல் எதற்கு?
  291.தான் திருடி அசலை நம்பான் கூத்திக் கள்ளன் பெண்டாட்டியை நம்பான்.
  292.தானம் வாங்கிய மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்.
  293.தானாகக் கனியாததைத் தடி கொண்டா அடிக்க முடியும்?
  294.தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்.
  295. தீ இல்லாமல் புகை கிளம்புமா?
  296.தீட்டிய மரத்தையே பதம் பார்த்தானாம்.
  297.துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலமாம்.
  298.தும்பை விட்டு வாலைப் பிடித்தானாம்.
  299.துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை.
  300.துஷ்டரைக் கண்டால் தூர விலகு.

 4. Anonymous says:

  271.சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
  272.தங்கச்சி பிள்ளை தன் பிள்ளையானால் தவத்துக்குப் போவானேன்?
  273.தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்.
  274.தடி எடுத்தவன் தண்டல்காரன்.
  275.தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  276.தர்மம் தலை காக்கும்.
  277.தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.
  278.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
  279.தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
  280.தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்க மாட்டார்.

  251.சித்தம் போக்கு சிவன் போக்கு.
  252.சிரிப்பும் புளிப்பும் சில காலம்.
  253.சிவ பூஜையில் கரடி புகுந்தார்ப் போல.
  254.சிறுகக்கட்டி பெருக வாழ்.
  255.சிறு துரும்பும் பல் குத்த உத்வும்.
  256.சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை சுப்ரமண்யத்திற்கு மிஞ்சின தெய்வமில்லை.
  257.சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்.
  258.சுண்ணாம்பிலே உள்ளது சூட்சம்.
  259.சும்மாயிருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்.

  231.கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
  232.கோபமுள்ள இடத்தில் தான் குணமிருக்கும்.
  233.கோபுரத்தை பொம்மையா தாங்குகிறது?
  234.கோலெடுத்தால் குரங்காடும்.
  235.கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது.
  235A. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தானாம்.
  236.சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
  237.சந்தை அன்றைக்குப் பஞ்சு நூற்றானாம்.
  238.சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்திற்குப் போனால் ஏச்சுமில்லை பேச்சுமில்லை.

  1.இலை தின்னி காயறியான்.
  72.இளங்கன்று பயமறியாது.
  73.இறைக்கிற கிணறே சுரக்கும்.
  191.கிட்டப் போனால் முட்டப் பகை.
  192.கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
  193.கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது.
  194.கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல.
  195.கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்தார்ப் போல.
  196.குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
  197.குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.
  198.குடிப்பது கூழ் கொப்புளிப்பது பன்னீர்.
  199.குந்தி உண்டால் குன்றும் கரையும்.
  200.குப்புற விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்றானாம்
  171.கல்யாணப் பெண்ணோடு தான் போவேன் இல்லாவிட்டால் கல்லால் அடிப்பேன் என்றானாம்.
  172. கல்லெறி பட்டாலும் கண்ணெறி படக் கூடாது.
  173.கல்லைக் குத்துவானேன் கையை நோவானேன்?
  174.கழுத்தே சுகமாயிரு மேலை வருஷம் தாலி கட்டுகிறேன் என்றானாம்.
  175.கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
  176.கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.
  177.கழுதை மேய்த்தாலும் காஞ்சி வாசம் செய்.
  178.கற்ற வித்தையை பெற்ற தாயாரிடம் காட்டினானாம்.
  179.கறுப்பே அழகு காந்தலே ருசி.

  151.கட்டின வீட்டுக்குப் பணிக்கை சொன்னானாம்..
  152.கடப்பாறையை விழுங்கி சுக்குக் கஷாயம் சாப்பிட்டானாம்.
  153. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
  154.கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  155.கடுகு போன இடம் கணக்கு பார்ப்பார் பூசணிக்காய் போன இடம் தெரியாது.
  156.கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
  157.கண்டதே காட்சி கொண்டதே கோலம். 157.அ.கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியலாமா?
  131.ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  132.ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
  133.ஏறினால் குற்றம் இறங்கினால் அபராதம்.
  134.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
  135.ஐயர் வரும் வரையில் அமாவாசை காத்திருக்குமா?
  136.ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாப்பாள் என்றாளாம்.
  137. ஒண்ணுந் தெரியாத பாப்பா கதவைப் போட்டாளாம் தாப்பாள்.
  138.ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஓட்டிற்றாம்.
  139.ஒரு கலக் கந்தை கொண்டு காணப் போனால் இருகலக் கந்தை கொண்டு எதிரே வந்தாளாம்.
  111.எண்ணெயிலிட்ட அப்பம் போல குதித்தானாம்
  112.எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்.
  113.எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?
  114.எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?
  115.எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தார்ப் போல.
  116.எருதின் வலி காக்கைக்குத் தெரியுமா?
  117.எருமை மாட்டின் முதுகில் மழை பெய்தார்ப் போல.
  118.எருமை வாங்குமுன் நெய் விலை பேசாதே பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
  119.எய்தவன் இருக்க அம்பைப் பழிப்பானேன்?

 5. Anonymous says:

  கிரகங்களால் நற்பலனா ? கிரகங்களுக்கே நற்பலன் இல்லாமல் போனதால் என்னவே புளூட்டோ கிரகம் சூரியனின் ஞான ஒளி எனக்கு வேண்டாம் என்று கோவித்துக் கொண்டு சூரிய குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றதா ? மற்ற உயர்ந்த கிரகங்களால் தள்ளி வைக்கப்பட்டதா என்றே தனியாக தத்துவ ஆராய்ச்சியே நடத்தலாம்.

  “இந்த கலர் கல்லுல மோதிரம் செஞ்சிப் போட்டுக் கொள்ளுங்கள்” – ஒரு பக்கம் இராசிக் கற்களால் பிழைப்பு நடத்துபவன்

  “உங்க வீட்டு கக்கூசு சூரியனைப் பார்த்தபடி இருக்கு, ஆகாதுங்க…மாத்துங்க” – வாஸ்து பெயரில் மோசடி கும்பல்கள்

  “பேரை மாத்திட்டிங்கன்னா… நீங்கதான் தேர்த்தல் நடத்தாமலேயே செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி ஆவிங்க….” அள்ளிவிடும் பெயர் சோதிடக்காரர்கள்.

  “நாடி ஜோதிடம் பார்த்திங்கன்ன…நடந்தது நடக்கப் போறது எல்லாம் தெரிஞ்சிக்கலாம்…” நாடி சோதிடன் ஒருபக்கம் பனையோலையை மண்ணில் புதைத்து எடுத்து வண்ணம் பூசி பழைய ஓலைச்சுவடியாக காட்டி அதில் அவர்களே எழுதிய பொய்யுளை (!) வைத்து சோதிடம் நாடி ஜோதிடம்

  “கிளிக்கு இறக்க முளைச்சுடுத்து… ஒடச்சி கூண்டில அடைச்சிட்டேன்….மினாட்சி… தம்பி பேருக்கு ஒரு சீட்டெடுத்துப் போடு’ பறவை வதை செய்யும் கிளி சோசியன்

  “கை ரேகையிலதான் உங்க தலையெழுத்தே அடங்கி இருக்கு, ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் காட்டுங்க…” கைரேகை சோசியன்

  இன்னும் மச்ச சோதிடன், மயிர் சோதிடன் ( இது ஒரு படத்தில் வரும்.. தியாகராஜன் ஸ்ரீதேவியின் கூந்தல் மயிரை வைத்து அவருக்கு தொடையில் மச்சம் இருப்பதைச் சொல்லுவார்), குறிகாரன், குடுகுடுப்பை, பில்லி சூனியம் வைக்கிறவன் என பல ரகங்களில் சோதிடம். சாமியாடிகள் தனி ரகம்.

  இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் கொண்டு அதில் பிழைப்பையே நடத்துவார்கள். சோதிடம் பார்க்கச் செல்லும் எவருக்குமே, உங்கள் வாழ்கை இனி நன்றாகவே இருக்கும் என்று சொல்வதே இல்லை. உனக்கு தோஷம், பித்தம், வயிற்றுப் போக்கு, வாந்தி இன்னும் என்னன்னவோ சொல்லி, இதுக்கெல்லாம் பரிகாரம் செய்தால் சரியாப்போய்விடும் என்றே ஜோதிடம் கேட்க வந்தவர்களை மன அளவில் மிரட்டுவார்கள்.

  சோதிடம் பார்க்காவிட்டால் இந்தியர்கள் செத்துவிடுவார்களா ? உலகில் எங்கும் முன்னேறிய சமூகம் எதிலுமே தன்னம்பிக்கையை மூட நம்பிக்கை இரையாக்கிவிட்டு ஏமாந்து நிற்பது இல்லை. கிரகம் பாதிக்கும் என்று நம்புவார்கள், பரிகாரத்தினால் கிரகத்துக்கு அல்வா கொடுக்க முடியும் என்றும் நம்புவார்கள். இதெல்லாம் என்ன வகையான நம்பிக்கை என்றே தெரியவில்லை.

  இறை நம்பிக்கை உடையவர்களை கிரக பலன்கள் என்ன செய்துவிட முடியும் ? இறை சக்தியை விட கிரகங்களின் சக்தியே பெரிது சமயத்தில் சனியனுக்கு பயந்து கொண்டு புங்கை காய்க்குள் பதுங்கி கொண்டான் சிவபெருமான் என்ற கதையெலாம் கூடச் சொல்வார்கள். இறைவனே கிரகங்களுக்கு பயப்படுவான் என்றால் இறைவன் பேராற்றல் மிக்கவன் என்று சொல்வதும் கூட பொய்யாகிவிடுகிறது.

  ஜோதிடம் ஆன்மிக வளர்ச்சிக்கு எப்போதாவது நன்மை அளித்திருக்கிறதா என்றால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, அட நெய்விளக்கு வியாபாரம் வளர்ச்சி பெற்று இருக்கிறதா ? பெரிய அளவில். நாம கொளுத்தி வச்சிட்டு அந்த பக்கம் சென்றவுடனே அணைத்து எடுத்துக் கொண்டு மறுவிற்பனைக்கு ஆயத்தம் செய்துவிடுவார்கள். ஜோதிடத்தினால் ஆன்மீகம் வீழ்ச்சி அடைந்தே இருக்கிறது, மூட நம்பிக்கையை வளர்த்ததில் போலி சாமியார்களுக்கு உரிய பங்கு ஜோதிடர்களுக்கும் உண்டு.

  விதியை மதியால் வெல்ல முடியுமா ? காற்றில் ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு பொருள் உங்கள் மண்டையை பதம் பார்க்கும் முன் ‘ஆடுவதால் நிச்சயம் விழுந்துவிடும்’ என்பதை மதியால் உணர்ந்து அதனை அகற்றவேண்டும், ‘விழுந்தாலும் அடிபாடாது’ என்று நினைத்து அதற்குக் கீழே நின்றால் ஈர்ப்பு விசை என்னும் விதி அங்கே வேலைசெய்தாலும் செய்துவிடும் அல்லவா ?

  எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் கிரகங்களுக்கு எள்ளுப்பூ மாலை அணிவித்து, குளிர்விக்க நெய்விளக்கும் ஏற்றுவது கேயாஸ் தியரியின் தத்துவமா ? இங்கே செய்வது அங்கே சென்று பாதங்களின் வீரியத்தைக் குறைத்து நற்பலனாக மாறிவிடுமா ?

 6. கடவுளும் மரணமும் says:

  எப்பொழுதும் என்னை சூழ்ந்து இருக்கிறது மரணம்.
  காலையிலும், மாலையிலும்,
  பாதையிலும் , படுக்கை அறையினிலும்,
  மரணம் வராத நேரம் என்று எதுவும் இல்லை,
  மரணம் புகாத இடம் என்றும் எதுவும் இல்லை.
  கடவுளும் அப்படித்தானோ?

  ஏழு வயதில் நான் பார்த்த மரணம்
  தினமும் தூங்கும் முன் திருநீறு இட வைத்தது.
  மரணபயத்திற்கு பின்புதான்
  கடவுள் நம்பிக்கை வந்ததென்று நினைக்கிறேன்.

  “கடவுளுக்கு மரணம் இல்லையா?”
  என்று கேட்டு இருக்கிறேன்.
  “மரணத்திற்கு என்றே ஒரு கடவுளும் உண்டு”
  என்றும் நம்பி இருக்கிறேன்.

  வாழ்க்கை என்பது உண்மையை தேடும் பயணம் என்றால்
  இங்கு மரணம் மட்டுமே உண்மை.

  எத்தனையோ தேடுகின்றேன்..
  எதை அடைவேன், எதை விடுவேன்..
  எனக்கே தெரியாது..
  ஒன்றை மட்டும் உறுதியாய் நான் அடைவேன்.
  அது மரணம் என்று சொல்லவும் வேண்டுமோ!

  அது வரும் ஒரு கணத்திற்கு முன்
  என் தேடுதலை எல்லாம் நிறுத்தி
  வணங்க வரம் கிடைத்தால்
  நானும் கடவுளாவேன்.

 7. Anonymous says:

  விதியை மதியால் வெல்ல முடியுமா?

  வெல்ல முடியாது!

  இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்
  ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.

  அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே
  அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

  வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று
  உயிருடன் இருந்திக்க வேண்டும்!

  அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக்
  கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
  அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

  அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.”விதியை விட வலியது எதுவும்
  கிடையாது”

  Nothing is stronger than destiny!

  மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள்
  அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
  அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

  ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின்
  முடிவில் உள்ள அதிகாரம்

  திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

  கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி
  அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

  ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

  முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே
  சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

  அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

  “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
  தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!”
  —குறள் எண் 377

  அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில்
  பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும்
  பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
  அனுபவிக்க முடியாது.

  சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே
  பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே
  சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
  கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ
  ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
  விதி அங்கேதான் வேறு படுகிறது.

  ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

  “ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
  சுழினும் தான்முந்நுறும்”
  …குறள் எண். 380

  ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன?
  அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
  வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும்
  வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

  What is stronger than fate (destiny)? If we think of an expedient
  to avert it, It will itself be with us (before the thought)

  “பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
  ஆகலூழ் உற்றக் கடை”
  …குறள் எண்.372

  பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ்
  வரும்போது – ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும்
  அது அவனைப் பேதமைப் படுத்தும் – அதாவது முட்டாளாக்கி விடும்.
  இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது
  – ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
  அது அவனைப் பேரறிஞனாக்கும்!

  An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
  knowledge.

  இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை
  எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
  ஊழ்வினையை வைத்தார்.

  அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு
  இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
  அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து
  முடித்தார்.

  மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப்
  படிதான் நடக்கும்!

  அவ்வளவு பெரிய மேதைக்கு – ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா
  என்ன?

  சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

  ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
  The Almighty will give standing power!
  தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
  அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண
  குருவின் சரித்திரம் (அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
  —————————————————————————————————–
  1
  விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய
  மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று
  சொல்லட்டும் பார்க்கலாம்.

  முடியாது!

  2
  விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த
  உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

  முடியாது!

  ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து,
  வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின் துகள்களைத்
  தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில்
  உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது எப்படி இயங்குகிறது?
  உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம்
  இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன் அதைச் செய்யவில்லை?

  விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

  அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை
  விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?

  ஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்!

  அதைப் படியுங்கள்!

  என்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு
  முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்

  ஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்
  கொள்கிறேன்
  ——————————————————————————————————
  இளைஞன் ஒருவன் ஆலமரத்தடியில் படுத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

  அந்த வழியே சென்ற ஞானி ஒருவர் அவனைப் பார்த்தவுடன் நின்று விட்டார்

  இப்படிப் பகல் நேரத்தில் சுகமாகப் படுத்துத் தூங்கினால், அவன் கெட்டுச்
  சீரழிந்து விடுவானே என்று நினைத்தவர், அவனைத் தட்டி எழுப்பினார்.

  எழுந்தவன், கேட்டான்,”யோவ் பெரிசு, எதுக்கு எழுப்பினே?”

  “பகலில் உறங்குவது நல்லதல்ல!”

  “சும்மா உக்காந்திருப்பதும் நல்லதல்ல! அதனால்தான் தூங்குகிறேன்”

  “ஏன் வேலைக்குச் செல்லலாமே?”

  “ஒரு வேலையும் கிடைக்கவில்லை!”

  “வேலை அதுவாகக் கிடைக்காது. நீயாகத்தான் தேடிப்பிடிக்க வேண்டும்”

  “தேடிப்பிடித்துச் செய்தால்?”

  “நான்கு காசு கிடைக்கும். அதுவே சில ஆண்டுகளில் நான்காயிரம்
  காசுகளாகும்”

  “அதை வைத்து என்ன செய்வது?”

  “சொந்தமாகத் தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டலாம்”

  “ஈட்டி….?”

  “வீடு வாசல் என்று சொந்தமாகக் கட்டிக்கொள்ளலாம்”

  “சொந்தமாகக் கட்டி…?”

  “சுகமாக வாழலாம்!”

  “இப்போது, அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என்னை அறுக்காமல்
  நீர் உம் ஜோலியைப் பாரும்!” என்று கத்திச் சொன்னவன், மீண்டும் படுத்து
  உறங்க ஆரம்பித்துவிட்டான்.

  இந்த மாதிரிப் பிறவிகளுக்குச் சொன்ன மொழிகள் ஏராளம்.

  “சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
  சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்”
  என்று பட்டுக்கோட்டையார் சொன்னது மறக்க முடியாத ஒன்றாகும்
  ——————————————————————————
  மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப்
  பட்டிருந்தால் – எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
  எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது
  முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

  அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.
  எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே வாழ்ந்த
  அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் – எத்தனை இலட்சம் தமிழ்
  உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச் சென்ற கவிதைகளை
  எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக்
  கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எப்படி எடுத்துக்
  கொள்ள முடியும்? அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின
  உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய வைத்தன!

  இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும்
  என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்

  விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
  —————————————————————————————-
  ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

  “அழகு ஏன் மயக்குகிறது?”

  அவர் பதில் சொன்னார்.

  “அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?”

  “சரி, அழகானது – அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

  “அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் – நீ எங்கே
  அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.
  வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப்
  படும்!”

  “உண்மையான அழகிற்கும் – பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?”

  “பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு
  காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக இருக்கும்!”

  “உதாரணம் சொல்லுங்கள்”

  “மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்”

  “அவைகள் தெய்வங்களின் உறைவிடம் – அதனால் அழகாகத்தோன்றலாம்.
  வேறு இடங்களைச் சொல்லுங்கள்”

  “எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த
  இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
  சொல்கிறேன் பார்.
  திருவாரூர் தேரழகு
  மன்னார்குடி மதில் அழகு
  வேதாரண்யம் விளக்கழகு
  கண்ணதாசன் பாட்டழகு
  காளையார்கோவில் குளம் அழகு
  சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்.”

  அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

  அதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே
  செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்?
  உழைப்பின் அருமை எப்படித் தெரியும்? பணத்தின் அருமை எப்படித்
  தெரியும்?
  ————————————————————————————————–
  The Road to Success is not straight:

  There is a curve called failure, a loop called confusion, speed bumps
  called friends, caution lights called family, and you will have flats
  called jobs.

  But, if you have a spare called determination, an engine called
  perseverance, insurance called faith, and a driver called God,
  you will make it to a place called success!

  Do good, and leave behind you a monument of virtue that the
  storms of time can never destroy.
  ———————————————————————————————
  “வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா?
  ஆசைப்படக்கூடாதா?!”

  “நியாயமான ஆசைகளில் தவறில்லை!”

  “எது நியாயமான ஆசை?”

  “சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது
  நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா?”

  “நியாயமில்லாத ஆசை எது?”

  “குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல
  பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு
  அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும்.
  ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது
  நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது!
  காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா? குயில் மயிலுக்கு ஆசைப்படலாமா?
  அது நியாயமில்லாத ஆசை!”
  ——————————————————————————————–
  புதிய கீதை

  எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
  எது கிடைக்கவில்லையோ
  அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
  எது கிடைக்க வேண்டுமோ
  அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

  எதை நீ கேட்காமலிருந்தாய்?
  உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
  எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
  அது நியாமாகக் கிடைப்பதற்கு?

  எது இன்று கிடைத்ததோ
  அது நாளையே உனக்கு அலுத்து விடும்
  அடுத்த நாள் உனக்கு
  அது வெறுத்து விடும்!

  கிடைப்பதன் அருமை
  அது கிடைக்கும் நொடி வரைதான்
  அடுத்த நொடி
  நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

  ஆகவே கேட்காமல் இரு!
  இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

  இதுவே கிடைப்பதின் நியதியும்
  பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

  சம்பவாமி யுகே! யுகே!

 8. kk.rajah says:

  What is Life..
  What is life? Does this sound like a strange question to you? Of course we all know what is meant by the word “life”, but how would you define it?

 9. Life is the universal force which drives you.
  You cannot limit a universal with a definition.
  But, no particular can be without the universals.

 10. Anonymous says:

  nice ,and fantastic, you touching the point of god willing, thanx 4 god

 11. lwzelshgt says:

  twkmtxiup bsqgu ehraemo wglp gnybhycuymclmuw

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s