திருச்சி மலைக்கோட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

Rock_Fort_12

 

திருச்சி மலைக்கோட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் திருச்சி மலைக்கோட்டை பற்றி அறிவேதுமில்லாதவன்.

[எப்பொருளையும் பற்றி நீ அறியக்கூடியதெவை? Download For Offline Use]

திருச்சி மலைக்கோட்டை ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

திருச்சி மலைக்கோட்டை பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

Advertisements

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to திருச்சி மலைக்கோட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

 1. திருச்சி says:

  திருச்சிராபள்ளி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. திரு என்பது தமிழில் மரியாதையை குறிக்கும் சொல். சிரா என்பது ஜைன துறவியின் பெயராகும். இதனால் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், மூன்று தலை கொண்ட திரிசிரா (ராவணனின் மகன்) சிவனை வழிபட்டு தன் பாவத்தை போக்கிய தலம் என்பதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. திரு செவ்வந்திபுரம் என்ற பெயர் நாளடைவில் மருவி திருச்சி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

  23.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சி நகரம், 1991-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 7 லட்சம் மக்களைக் கொண்டது. ஆண்டு முழுவதும் சராசரியான வெப்ப நிலையைக் கொண்டதாக திருச்சி உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 83.5 சென்டிமீட்டர் மழை பதிவாகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

  பரப்பளவு : 146.9 சதுர கிலோமீட்டர்
  உயரம் : கடல் மட்டத்தில் இருந்து 78 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  மழை அளவு : 83.5 செமீ
  பேசப்படும் மொழிகள் : தமிழ், ஆங்கிலம்

  திருச்சி வரலாறு:

  இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள்.

  வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, செழுமை, இயற்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் உடையது தமிழகம். இத்தகைய பெருமைமிகு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மாநிலத்தில் மத்தியில் உள்ள திருச்சி மாவட்டம் என்றால் அதுமிகையாகாது. திருச்சி மாவட்டம் சுற்றுலாச் சிறப்புகள் பெற்ற தனிப்பெருமை கொண்டதாகும். தமிழகத்தின் சுற்றுலா பெருமைகளில் தனித்தன்மை வாய்ந்த திருச்சி மாவட்டம் புனிதநதி காவிரிக்கரையில் அமைந்த தொன்மையான நகரம். பல்லவ மற்றும்சோழ மன்னர்கள் திருச்சியை ஆட்சிபுரிந்துள்ளனர். இங்கு கோயில் கட்டிடக்கலையும், எழில் நிறைந்த கோபுரங்களும், சிற்பங்களும், இயற்கை வனப்பும் நிறைந்துள்ளது.

  கி.மு. 300ம் ஆண்டு முதல் உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. உறையூர், தற்போதைய திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். கி.பி. 300 முதல் 575 வரை உறையூர் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கி.பி. 590ம் ஆண்டில் உறையூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முதலாம் மகேந்திர வர்ம பல்லவரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. கி.பி. 880ம் ஆண்டு வரை உறையூர் பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் கையில் இருந்தது. கி.பி. 880க்கு பின் ஆதித்ய சோழர் பல்லவர்களை வீழ்த்தி உறையூரை மீட்டார்.

  அதன் பின்னர் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற பகுதிகளும் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1225ல் இந்த பகுதி மீண்டும் ஹொய்சாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்ந்து முகலாயர் வருகை வரை பாண்டியர்கள் வசம் இருந்தது.

  திருச்சிராபள்ளி சிலகாலம் முகலாயர்கள் வசமும் இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசர்கள் வசம் மாறியது. கி.பி.1736 வரை விஜயநகர பேரரசின் பாதுகாவலர்களான நாயக்கர்கள் இந்த பகுதியை ஆண்டனர். தற்போது திருச்சியில் உள்ள தெப்பகுளம் மற்றும் கோட்டை விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர்களின் உதவியோடு முஸ்லிம்கள் திருச்சியில் ஆட்சி செலுத்தினர். சந்தா சாகிப், முகமது அலி ஆகியோர் சில காலம் திருச்சியை ஆண்டனர். இறுதியில் திருச்சி முழுமையாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. சுமார் 150 ஆண்டுகள் அதாவது சுதந்திரம் கிடைக்கும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி செலுத்தினர்.

  திருச்சி நகரம் சோழர்களின் அரணாக விளங்கியது. திருச்சி பல்லவர்கள் கையில் இருந்த போது அதை தக்க வைக்க கடும் முயற்சி செய்தனர். இருந்தும் பாண்டியர்கள் பலமுறை திருச்சியை கைப்பற்றினர். இறுதியில் 10ம் நூற்றாண்டில் திருச்சி சோழர்கள் வசம் வந்தது. விஜயநகர பேரரசிற்கு பின் திருச்சி, மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து மராட்டியர்கள், கர்நாடக நவாப்கள், பிரெஞ்ச் ஆதிக்கம், மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் நாயக்கர்கள் ஆட்சியின் போது திருச்சி நல்ல முன்னேற்றம் அடைந்தது. திருச்சி மாநகரம் மலை கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. மலை கோட்டையை தவிர சர்ச்கள், கல்லூரிகள், மற்றும் சமுதாய நல அமைப்புகள் பல 1760ம் ஆண்டுகளிலேயே அமைப்பட்டுள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட நகரமான திருச்சி தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது.

  திருச்சி நகரம் காவிரி கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாக திருச்சி விளங்குகிறது. திருச்சி தமிழகத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது. திருச்சி மாநகராட்சி திருச்சி நகரை மையமாக கொண்டு செயல்படுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் இங்கு தான் உள்ளது. திருவானைக்காவல் நீருக்கான ஸ்தலமாகும். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் திருவானைக்காவலில் தான் பிறந்தார். அவருடைய வீடு அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  திருச்சியில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் உள்ளன. கரிகால சோழ மன்னனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றும் சோழர்களின் பெருமையை பறைசாற்றி கொண்டிருக்கிறது. திருச்சியின் முக்கிய இடமாக மலை கோட்டை கருதப்படுகிறது. 83 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இதனால் திருச்சி மலை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மீது உச்சி பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் நாயக்கமன்னர்களின் ராணுவ அரணாகவும் விளங்கியது. பல்லவர்கள் ஆட்சியின் போது இந்த மலையை குடைந்து குகை கோயில்களை அமைத்தனர். இந்த மலைகோயில் தற்போது சத்திரம் என அழைக்கப்படும் பரபரப்பான வர்த்தக இடமாக மாறிவிட்டது. இந்தியாவிலேயே திருச்சியில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்கள் உள்ளன. ஹோலி ரீடீமெர்ஸ் சர்ச், லூர்து சர்ச், தி கதீட்ரல் சர்ச் ஆகியவை மிக முக்கியமானதாகும்.

  பெயர் காரணம்:

  திருச்சிராபள்ளி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. திரு என்பது தமிழில் மரியாதையை குறிக்கும் சொல். சிரா என்பது ஜைன துறவியின் பெயராகும். இதனால் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், மூன்று தலை கொண்ட திரிசிரா (ராவணனின் மகன்) சிவனை வழிபட்டு தன் பாவத்தை போக்கிய தலம் என்பதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. திரு செவ்வந்திபுரம் என்ற பெயர் நாளடைவில் மருவி திருச்சி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

  மலைகோட்டை கோயில்
  திருச்சியின் மிக முக்கிய சுற்றுலா தலமாக மலைக்கோட்டை கோயில் விளங்குகிறது. மலை மீது ஏறி செல்லும் வழியில் தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நூற்று கால் மண்டபம் உள்ளது. கோயிலின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மலைகோட்டையின் தெற்கு பக்கத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குகை கோயில்கள் உள்ளன.

  ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்
  புகழ் பெற்ற வைணவ தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

  ஸ்ரீ ரங்கம் கோயில் விமானமானது திருப்பாற்கடலின்று தோன்றியது. இதை நெடுங்காலமாக பூசித்து வந்த பிரம்மதேவன் திருவரங்கநாதருக்கு நித்திய பூசை புரிந்து வரும்படிசூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான இராமபிரான் அயோத்தியில் வழிபட்டு வருகிறார். தனது முடிசூட்டு விழாவினைக் காண வந்த விபீஷணனுக்கு தான் பூஜித்து வந்த இவ்விமானத்தை அளித்தார்.

  அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் விபீஷணன் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை. அது கண்டு கலங்கிய விபீஷணனை அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர் தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதி அளித்தார்.பின்னர் தர்மவர்ம சோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போக தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயி�ல் சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

  கோயிலின் வடக்கு பகுதி தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கோயில் காவிரி நதியின் நடுவே 2.5 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. உலகின் பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலில் 7 சுற்று பிரகாரங்களும், 21 கோபுரங்களும் உள்ளன. இந்த கோயிலின் உயரமான கோபுரம் 1987ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதன் உயரம் 73 மீட்டர் ஆகும். மேலும் இந்த கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவிலேயே மிக பெரியதாகும். ஸ்ரீரங்கம், திருச்சி நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் சந்நதி மட்டுமல்லாமல் பல்வேறு கடவுள்களின் சந்நதிகளும் இந்த கோயிலில் உள்ளது.

  முக்கிய திருவிழாக்கள்

  வைகுண்ட ஏகாதசி – மார்கழி மாதம் அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும்.பகல்பத்து ராப்பத்து எனும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிரத்த திவ்ய பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும் பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர்

  அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக் கணக்கான பக்தர்கள் திரள்வர்.

  மாசி மாச தெப்பத்திருவிழா – 10 நாள் விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக் கோலம் பூண்டிருக்கும்.

  தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருட பிறப்பின் போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்

  தொலைபேசி – 0431-2432246
  தாயுமானசுவாமி கோயில்
  தாயுமான சுவாமி கோயில் மலைமீது ஏறும் வழியில் அமைந்துள்ளது.
  இப்பகுதியில் வாழ்ந்த இரத்தினாவதி என்ற பெண்மணி தாயாகும் பேறு பெற்றாள். காவேரி ஆற்றின் அந்தப் பக்க கரையில் இருக்கும் தன் தாய்க்கு செய்தி சொல்லி விட்டு காத்திருக்கிறாள். ஆற்றில் வெள்ள பெருக்கு இருந்ததால் தாய் வர முடியவில்லை. பிரசவ வேதனை அதிகமாக இம்மலையில் இருக்கும் செவ்வந்திநாதனை வேண்டினாள்.ஈசனே தாய் வேடத்தில் அங்கு வந்து அவளுக்கு சுகப்பிரசவம் அடைய உதவினார்.நிஜ தாய் வந்த பின்பு இறைவனே வந்து பிரசவத்திற்கு உதவியது புரிந்தது.மட்டுவார் குழலம்மையுடன் இறைவன் அனைவருக்கும் காட்சி தந்தார். எனவே இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகிறார்.

  குடைவரைக்கோயில்
  மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மலையைக் குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மேல்நிலையில் ஒரு குடைவரைக் கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப் பெற்றுள்ளன.அவைகளில் காணப்பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன.

  பிற கோயில்கள் :
  வயலூர் சுப்பிரமணியர் கோயில், அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில், திருவல்லாரை விஷ்ணுகோயில், உறையூர் நாச்சியார் கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், குணசீலம் விஷ்ணுகோயில், திருப்பாட்டூர் பிரம்மா கோயில் ஆகியவை.

  அருங்காட்சியகம்
  திருச்சியில் ராணி மங்கம்மாள் அரண்மனையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் வெள்ளி கிழமை தவிர எல்லா நாட்களும் திறந்திருக்கும்.

  குடைவரைக்கோயில் :
  மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மலையைக் குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மேல்நிலையில் ஒரு குடைவரைக் கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப் பெற்றுள்ளன.அவைகளில் காணப் பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன.

  குணசீலம்:
  திருச்சி, நாமக்கல் மெயின்ரோட்டில் 25 கிலோமீட்டரில் அமைந்துள்ள குணசீலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஷ பெருமாள் கோயில் மிகவும் புகழ்வாய்ந்தது. மனநோயாளிகளுக்கு இறைவழிபாடு மூலம் நிவர்த்தி செய்யும் பணியை கோயில் நிர்வாகம் பல ஆண்டுகளாக செய்து வருகிறது.

  திருப்பட்டூர்:
  திருச்சியிலிருந்து, சென்னை செல்லும் சாலையில் சிறுகனூரை அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமணம் நாள் மற்றும் பிறந்தநாட்களில் இங்குள்ள பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு அபிஷேகம் செய்வதன் மூலம் பக்தர்களின் தலையெழுத்து மாறுவதாக பழைமையான ஐதீகம் உண்டு.

  உறையூர்:
  திருச்சி மாநகரின் மையத்தில் அமைந்துள்ள வெக்காளியம்மன் ஆலயம் கூரையே இல்லாத கோயில் என்ற சிறப்பை பெற்றது. திருச்சிக்கு காவல்தெய்வமாக இக்கோயில் அம்மன் விளங்கியதாக வரலாறு உண்டு.

  தொங்கு பாலம்:
  திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 25வது கிலோமீட்டரில் உள்ள கீரனூர் கிராமத்தின் அருகில் அமைந்துள்ள ரயில்வே தொங்குபாலம், தென்னிந்தியாவின் முதல் தொங்குபாலமாக உள்ளது. மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது இதன் சிறப்பு அம்சமாகும். பாலத்துக்கு நடுவில் தண்ணீர் செல்லும் வசதியும், அதற்கு மேல் வாகனங்கள் செல்லும் வசதியும் கொண்ட மூன்றடுக்கு வடிவம் கொண்டது.

  திருநெடுங்காலநாதர் கோயில்
  திருநெடுங்காலநாதர் கோயில், பெல் நிறுவனத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் சோழர்களின் கட்டடகலைக்கு சிறந்த சான்றாகும். ஆழ்வார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் பாடிய தலமாகும்.

  மலைகோட்டை:
  இந்த மலை மூன்று உச்சிகள் கொண்டது.தாயுமானவர் திருக்கோயில், மட்டுவார் குழலம்மை திருக்கோயில், உச்சி விநாயகர் திருக்கோயில் என்ற 3 மலையுச்சிகளைக் கொண்டதால் முத்தலைமலை என்று பெயர் பெற்றது.

  திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர கோயில்
  சிவபெருமானின் சிறப்பான 5 பஞ்ச பூத தலங்களில் இது நீர் (அப்பு) தலம் ஆகும்.
  வெண்நாவல் மரத்திற்கு கீழ் இருந்த லிங்கத்திற்கு தினந்தோறும் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பூஜை செய்து வந்தது. மரத்தின் மீது இருந்து சிலந்தியும் சிவதொண்டு செய்ய விரும்பி தன் வாய் நூல் கொண்டு பெருமானுக்கு அழகிய பந்தலமைத்து குப்பைகள் விழாது அமைத்து காத்து வந்தது. இதை ஒருநாள் கண்டு விட்ட யானை கோபத்தால் கொண்டு சிலந்தி வலையை பிய்த்து எறிந்தது.இதைக் கண்ட சிலந்தி யானையின் துதிக்கை துவாரத்தின் வழியாகப் புகுந்து தலையின் உச்சியில் போய்க் கடித்தது.யானையும் இறந்தது.

  துதிக்கையிலிருந்து வெளியே வர முடியாமல் சிலந்தியும் இறந்தது.சிவபெருமான் நாவல் மரத்தடியிலிருந்த சிவலிங்கத்திலிருந்து உமையொரு பாகனாக விடை மீதேறி வந்து யானையைச் சிவலோகம் சென்று தமது பூதகணத்தலைமையை ஏற்று வாழ வரமளித்தார்.பின்னர் சிலந்தியைச் சோழ மன்னனாகப் பிறக்கத் திருவருள் செய்தார்.அன்று தொட்டு நாவற்கா ஆனைக்கா எனப் பெயர் பெற வைத்தார்.
  ஸ்ரீரங்கத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது. கோயிலில் 5 பிரகாரங்களும் 7 கோபுரங்களும் உள்ளன. மழை காலத்தில் லிங்கம் தண்ணீரில் மூழ்கி விடும்.

  சமயபுரம் மாரியம்மன் கோயில்
  திருச்சி பஸ் நிலையத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.சக்தி ஸ்தலங்களில் தலை சிறந்து விளங்கும் தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். படிப்படியாக வளர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக மிக பிரமாண்டமான அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள வருகின்றனர்.சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முதுமொழிக்கேற்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் இங்கு வீற்றிருக்கும் அம்பாள்.
  பக்தர்கள் தாங்கள் எங்கிருந்தாலும் எந்த நாட்டிலிருந்தாலும் அங்கிருந்தபடியே சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனை வேண்டிக்கொண்டால் அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருபவள் சமயபுரம் மாரியம்மனே. நீண்ட நாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் இக்கோயில் வளாகத்திலேயே நோய் குணமாகும் வரை தங்கியிருந்து அம்மனின் அருளால் பூரண குணம் அடைந்து தங்கள் நேர்த்திகடனாக மாவிளக்கு வைத்து வழிபட்டு தங்களின் அன்பை அம்மனுக்கு தெரிவித்து பிரியாவிடை பெற்றச் செல்கின்றனர் முக்கிய விழாக்கள் : சித்திரைத்தேர் திருவிழா -ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத்த தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வர். பூச்சொரிதல் – மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர். பஞ்சப்பிரகாரம் – வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.

  உச்சி பிள்ளையார் கோயில்
  விபீஷ்ணன் இராமரிடம் பெற்று வந்த அரங்கநாதர் விக்ரகத்தை விநாயகரிடம் அந்தண சிறுவன் வடிவிலிருந்த விநாயகரிடம் கொடுத்ததும் அதை அவர் பூமியில் வைத்து விட்டு மலை உச்சிக்கு ஓடி வந்து உட்கார்ந்து கொண்டாராம்.

  சிறிது இளைப்பாறிய பின்பு திரும்பிய விபீஷ்ணன் விக்ரகத்தை எடுத்துப் பார்த்து முடியாமற் போகவே கோபம் கொண்டு சிறுவனை தேடிப் பார்த்தும் கிடைக்காமற் போகவே விநாயகர் தலையில் ஓங்கி குட்டியதாகவும், அரங்கநாதன் திருவரங்கத்திலேயே தங்கி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.உச்சி விநாயகரின் தலையில் குட்டு விழுந்ததற்கான பள்ளம் இன்றும் உள்ளது வியப்புக்குரியது.

  இந்த கோயில் 273 அடி உயரத்தில் 417 படிகட்டுகள் கொண்டதாக கோயில் உள்ளது.

  கல்லணை
  காவிரியின் குறுக்கே உள்ள பழங்கால அணை கல்லணை ஆகும். முதலாம் நூற்றாண்டில் கரிகாலசோழனால் கட்டப்பட்டது. நகரின் நீர்பாசனத்திற்கு இந்த அணை மிகவும் உதவிகரமாக உள்ளது. திருச்சி நகரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இந்த அணை உள்ளது.

  முக்கொம்பு
  காவிரி நதி, காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. கிளை நதியாக கொள்ளிடம் பிரியும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு இடம் முக்கொம்பு ஆகும். திருச்சி நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இந்த இடம் உள்ளது.

  புளியஞ்சோலை
  திருச்சியில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள மிக பசுமையான, குளிர்ச்சியான வனப்பகுதி புளியஞ்சோலை ஆகும். இங்குள்ள இயற்கை காட்சிகள், மற்றும் அருவி சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பனவாக அமைந்துள்ளது.

  பச்சை மலை
  திருச்சி நகரில் உள்ள சிறிய மலைப்பகுதி பச்சை மலை ஆகும். மிக குறைந்த உயரமே கொண்ட இந்த மலைப்பகுதியில் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. பிற மலைவாசஸ்தங்களை விட இதற்கு குறைந்த முக்கியத்துவமே உள்ளது.

  சித்தன்ன வாசல்
  திருச்சியில் இருந்து 58 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் உள்ளது. இங்குள்ள குகைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 9ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் வரைப்பட்டதாக கூறப்படுகிறது.

  இந்த குகையில் விலங்குகள், பறவைகள், பூக்கள் போன்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. அர்த்தமண்டபத்தில் 7வது நூற்றாண்டில் வரையப்பட்ட மேற்கூரை ஓவியங்கள் உள்ளன.

  நதிர்ஷா தர்கா
  திருச்சியில் உள்ள முஸ்லிம் மக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இந்த தர்கா விளங்குகிறது. இந்த தர்கா 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.

  கோளரங்கம்
  திருச்சியில் இருந்து 5 கி.மீ தொலைவில் புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது அண்ணா கோளரங்கம். கோளரங்கத்தல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழில் காலை 10.30, பிற்பகல் 1.00, 3.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆங்கிலத்தில் காலை 11.45, பிற்பகல் 2.15, மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. தொலைபேசி – 0431 – 2331921.

 2. திருச்சி கல்வி நிறுவனங்கள் says:

  செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
  பொன்மலைபட்டி, திருச்சி.

  செயின்ட் ஜோசப்ஸ் மேல்நிலை பள்ளி
  பொன்மலைபட்டி, திருச்சி – 04.
  0431- 2491613.

  செயின்ட் ஜோசப்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி
  கான்வென்ட் சாலை, திருச்சி – 01.
  0431 – 2414170.

  செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலை பள்ளி
  ரெனால்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி – 01.
  0431- 2460893.

  செயின்ட் ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி
  கன்டோன்மென்ட், திருச்சி – 01.
  0431 – 2410317.

  பிஷப் ஹேபர் மேல் நிலை பள்ளி
  புதூர், திருச்சி – 17,
  0431 – 2775277.

  யு.டி.வி. மேல்நிலை பள்ளி
  டவுன் ஸ்டேஷன், திருச்சி,
  0431-2703378.

  செயின்ட் பிலோமினா மேல்நிலை பள்ளி
  மேலபுதூர், திருச்சி- 01.
  0431 -2411522.

  செயின்ட் ஆனிஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி
  கான்வென்ட் சாலை, திருச்சி – 01.
  0431-2418403

  செவன்த் டே அட்வென்டைஸ்ட் பள்ளி,
  பீமாநகர், திருச்சி – 01.
  0431 – 2416209.

  சேவாசங்கம் பெண்கள் மேல்நிலை பள்ளி,
  வில்லியம்ஸ் சாலை, திருச்சி – 01.
  0431 – 2460253.

  சாவித்ரி வித்யாலயா,
  சங்கரன் பிள்ளை சாலை, திருச்சி – 620002.
  0431 – 2701849.

  புனித இருதய மேல்நிலை பள்ளி,
  பொன்மலைபட்டி, திருச்சி – 620004.
  0431 -2491386.

  ரோட்டரி வித்யா ஆஷ்ரம்,
  அண்ணாநகர், தென்னூர், திருச்சி – 620017.

  0431 – 2792630
  ராக்போர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி,

  52 சாலை ரோடு, உறையூர், திருச்சி -03.
  0431-2762181.

  ஆர்.சி. ஆசிரியர் பயிற்சி பள்ளி,
  பாரதியார் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி – 01.
  0431- 2416730.

  ஆர்.சி. உயர் நிலை பள்ளி ,
  பாரதியார் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி – 01.
  0431-2410832.

  ராஜாஜி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி,
  தென்னூர் ஹை ரோடு, திருச்சி -17.
  0431-2791399.

  பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை பள்ளி,
  கே.கே. நகர், திருச்சி – 21.
  0431- 2459522

  நேரு மெட்ரிக் பள்ளி,
  65-ஏ, 11ஏ, கிராஸ், தில்லை நகர், திருச்சி -18.
  0431-2721533.

  நேஷனல் மேல் நிலை பள்ளி,
  தெப்பக்குளம், திருச்சி – 08.
  0431-2702553.

  மன்னார் மெமோரியல் மெட்ரிக் பள்ளி,
  கலெக்டர் அலுவலக சாலை, திருச்சி -01.
  0431-2410514.

  மகாத்மா காந்தி மேல்நிலை பள்ளி,
  தென்னூர் ஹை ரோடு, தென்னூர், திருச்சி – 17.
  0431- 2792666.

  மகாத்மா காந்தி மேல்நிலை பள்ளி,
  வில்லியம்ஸ் சாலை, திருச்சி – 01.
  0431- 2461376.

  காமகோடி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி,
  தபால் பெட்டி எண்,- 349, சங்கரன் பிள்ளை சாலை, சத்திரம் பஸ் நிலையம், திருச்சி -02.
  0431-2471925.

  காஜாமியான் மேல்நிலை பள்ளி,
  காஜா நகர், சுப்பிரமணியபுரம், திருச்சி – 20.
  0431- 2420043.

  கே.ஏ.பி.வி. மேல்நிலை பள்ளி,
  5வது கிராஸ், தில்லைநகர், திருச்சி – 18.
  0431-2760812.

  ஜெசி மெட்ரிக் மேல்நிலை பள்ளி,
  புதூர், திருச்சி -17.
  0431-2760197.

  ஹோலி ரிடீமெர் பள்ளி,
  பாலக்கரை, திருச்சி – 8.
  0431-2715181.

  ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி,
  கோல்டன் ராக், திருச்சி – 4.
  0431-2490825.

  இ.ஆர். உயர்நிலை பள்ளி,
  கிழக்கு சிந்தாமணி, திருச்சி, 620002.
  0431-2703096

  டாலர் காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் பள்ளி,
  கொட்டப்பட்டு, திருச்சி,
  0431- 2491336.

  சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி,
  அருணா நகர், ஸ்ரீரங்கம், திருச்சி – 6.
  0431- 2433485.

  சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி,
  உறையூர், திருச்சி -3.
  0431- 2275207.

  ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி,
  கருமண்டபம், திருச்சி – 1,
  0431- 2482859.

  ஆல்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி,
  ஆல்பா காம்ளெக்ஸ், கே.கே. நகர், திருச்சி – 21.
  0431-2456222.

  அரசு சயீத் மூர்துஷா உயர்நிலை பள்ளி,
  திருச்சி

  அரசு பார்வையற்றோர் உயர்நிலை பள்ளி,
  புதூர், திருச்சி.

  அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி
  ஸ்ரீரங்கம், திருச்சி – 6.
  0431 – 2432239.

  ஸ்ரீ அங்காளஅம்மன் பொறியியல் கல்லூரி
  ரமணன் நகர், சிறுகானூர், திருச்சி – 6250105.
  0431-2650336, 37, 38.
  info@saacet.net
  http://www.saacet.net

  ஸ்கூல் ஆப் பொறியியல் கல்லூரி
  பாரதிதாசன் பல்கலைகழகம், தெற்கு வளாகம், பல்கலைபேரூர், திருச்சி – 620024.
  0431 – 2407222.

  ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி
  பிரட்டியூர், திருச்சி – 9,
  0431-2403450, 2403651.

  எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி
  திருச்சி

  எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி
  சென்னை டிரங்க் ரோடு, சிறுகானூர், திருச்சி – 621105.
  2650377, 2650549.

  குறிஞ்சி பொறியியல் கல்லூரி
  மலையாடிபட்டி, மணப்பாறை, திருச்சி – 621307.
  0431 – 260488.
  kurinjiengineering@yhoo.co.in
  http://www.kurinjicet.org

  கிங்ஸ் பொறியியல் கல்லூரி
  புனக்குளம், கந்தர்வகோட்டை தாலுகா, புதுக்கோட்டை – 613303.
  04362 – 282474, 282676.
  contact@kingsindia.net
  http://www.kingsindia.net

  ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
  கரட்டாம்பட்டி, பகலவாடி, திருச்சி – 6.
  0431-230270.
  contact@kingsindia.net

  ஜே.ஜே. பொறியியல் கல்லூரி
  அம்மாபேட்டை, பூலாங்குளத்துப்பட்டி, திருச்சி – 620009.
  0431- 2695607, 08.

  சாராநாதன் பொறியியல் கல்லூரி
  குண்டூர், திருச்சி.
  0431- 2473286.

  ஜோசப்ஸ் கண்மருத்துவமனை
  திருச்சி.

  திருச்சி காலேஜ் ஆப் பார்மசி
  திருச்சி.

  கமலம் விஸ்வநாதன் பிசியோதெரபி கல்லூரி
  46, சிங்காரதோப்பு, திருச்சி – 620008.
  0431-2230658

  அரசு பிசியோதெரபி கல்லூரி
  பெரியமிளகுபாறை, திருச்சி – 620001.
  0431- 2462282.

  டாக்டர். ஜி. சகுந்தலா நர்சிங் கல்லூரி
  சாக்-சீட் கிராமம், ஆய்குடி, திருச்சி – 621112.
  0431-2230658

  ஸ்ரீ சங்கரா ஆயுர்வேத கல்லூரி
  பூலான்குளத்துபட்டி, திருச்சி – 620009.
  0431-2695555, 69.

  கே.ஏ.பி.வி. அரசு மருத்துவ கல்லூரி
  திருச்சி – 620017.
  0431 – 2401011.

  பத்மபூஷண் ஸ்ரீ என். ராமசாமி ஐயர் நினைவு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி
  தபால் பெட்டி எண். 349, திருச்சி – 620002.

  எம்.ஐ.இ.டி. பாலிடெக்னிக் கல்லூரி
  திருச்சி – புதுக்கோட்டை சாலை, குண்டூர், திருச்சி – 620007.

  லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி
  ஆங்கரை கிராமம், லால்குடி, திருச்சி – 621601.

  குழந்தை ஏசு பாலிடெக்னிக் கல்லூரி
  கே. கள்ளிகுடி, ராம்ஜி நகர், திருச்சி – 620009

  அரசு பாலிடெக்னிக் கல்லூரி
  திருச்சி – 620002.

 3. Pathetic deduction about the Rockfort!

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s