பைபிள் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

 

bible

பைபிள் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் பைபிள் பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

பைபிள் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

பைபிள் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

Advertisements

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to பைபிள் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

 1. Jothi says:

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

  பழைய ஏற்பாடு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  பழைய ஏற்பாடு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

  புதிய ஏற்பாடு ப‌ற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  புதிய ஏற்பாடு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

 2. Samuvel says:

  மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
  36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
  37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
  லூக்கா 12:15 (Luke 12:15)
  15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
  ரோமர் 3:10-12,23 (Romans 3:10-12,23)
  10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
  11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
  12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை
  23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
  சங்கீதம் 53:1 (Psalms 53:1)
  1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
  மாற்கு 7:20-23 (Mark 7:20-23)
  20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
  21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
  22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துாஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
  23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
  கலாத்தியர் 5:19-21 (Galatians 5:19-21)
  19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
  20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
  21. பொறாமைகள், கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8)
  21. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
  சங்கீதம் 10:4 (Psalms 10:4)
  4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
  யாத்திராகமம் 20:3-5 (Exodus 20:3-5)
  3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
  4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழத் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
  5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
  ஏசாயா 44:6,9-20 (Isaiah 44:6,9-20)
  6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரதேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
  9. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
  10. ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
  11. இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்;தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.
  12. கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
  13. தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
  14. அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
  15. மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு உக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
  16. அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
  17. அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
  18. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
  19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியானதுண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
  20. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
  சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
  3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
  4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
  5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
  6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
  7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
  8. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்
  ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
  1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
  2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
  3. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.
  4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
  நீதிமொழிகள் 28:13,9 (Proverbs 28:13,9)
  13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
  9. வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
  சங்கீதம் 32:1,2 (Psalms 32:1,2)
  1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
  2.எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
  ரோமர் 6:23 (Romans 6:23)
  23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.
  யோவான் 17:3 (John 17:3)
  3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
  எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
  23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  1 தீமோத்தேயு 1:15 (1 Timo 1:15)
  15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
  1 கொரிந்தியர் 3:16,17 (1 Corinthians 3:16, 17)
  16. நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
  17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
  எபிரெயர் 9:27 (Hebrews 9:27)
  27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
  1 யோவான் 1:7-10 (1 John 1:7-10)
  7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
  8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
  9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
  10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
  ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6)
  4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
  5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
  6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
  யோவான் 3:16-18 (John 3:16-18)
  16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
  17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
  18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
  ரோமர் 5:8 (Romans 5:8)
  8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
  அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31)
  30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
  31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்
  மத்தேயு 11:28 (Matt 11:28)
  28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
  வெளிப்படுத்தல் 3:20 (Rev 3:20)
  20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
  யோவான் 10:9 (John 10:9)
  9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
  யோவான் 14:6 (John 14:6)
  6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
  அப்போஸ்தலர் 4:12 (Acts 4:12)
  12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றா
  1 தீமோத்தேயு 2:5 (1 Timothy 2:5)
  5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
  ஏசாயா 43:11 (Isaiah 43:11)
  11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
  ரோமர் 10:9,10 (Romans 10:9,10)
  9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
  10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
  அப்போஸ்தலர் 16:31 (Acts 16:31)
  31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
  யோவான் 1:12 (John 1:12)
  12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
  1 யோவான் 5:12,13 (1 John 5:12,13)
  12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
  13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், அவருடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவனுடைய குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்
  யோவான் 3:36 (John 3:36)
  36. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்
  நீதிமொழிகள் 27:1 (Proverbs 27:1)
  1. நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
  நீதிமொழிகள் 29:1 (Proverbs 29:1)
  1. அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். நீதிமொழிகள் 1:23-33 (Proverbs 1:23-33)
  23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
  24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
  25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
  26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
  27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
  28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
  29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
  30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
  31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
  32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
  33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
  1 யோவான் 2:22 (1 John 2:22)
  22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
  1 யோவான் 4:3 (1 John 4:3)
  3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும்தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
  வெளி 1:7,8 (Rev 1:7,8)
  7. இதோ, மேகங்களுடனே வருகிறார்;கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
  8. இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

 3. Samuvel says:

  அன்பான சகோதரர்களே
  இறைவேதம் என்பது அனைவரும் படித்து அதன்படி ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும் .பைபிள் கர்த்தரால் அருளப்பட்டதாக நீங்கள்நம்புகிறீர்கள் பைபிளை படிக்குமாறு உங்கள் பிரச்சார சபையினர் கூறுகின்றனர்.புனிதமானது என்றும் உயர்வானது என்றும் பிரச்சாரம் செய்கிறார்கல் பைபிளை படித்து பார்த்தால் அதில் ஏராளமான ஆபாசமான கதைகளும் நம்ப முடியாத கதைகளும் மலிந்து உள்ளன.சில உதாரணங்கள் மட்டும் இங்கு தரு கிறோம்.இதை படித்தாவது பைபிள் முழுவதும் இறைவாக்கல்ல என்று நம்புவீர்கள்

  1 தந்தையும் ஹுமாரத்திகளும்
  பின்பு லோத்து சோவாரியே குடியிருக்கப் பயந்து சோவரை விட்டு போய் அவனும் அவனோடே கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள்.அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியுருந்தார்கள்.
  அப்போது மூத்தவள் இளையவளைப் பார்த்து:நம்முடைய தகப்பன் முதிர் வயதானார்:பூமியெங்கும் நடக்கிற முறையின்படி நம்மோட சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை .
  நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும் படிக்கு அவருக்கு மதுவை குடிக்க கொடுப்போம்&அவரோடு சயனிபோம் வா என்றால்.
  அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவை குடிக்க கொடுத்தார்கள் .மூத்தவள் தன் தகப்பனோடே சயனித்தார்கள்.அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
  மறு நாளிலே மூத்தவள் இளையவளை பார்த்து :னேற்று ராத்திரி நான் தகப்பனோடு சயனித்தேன் :இன்று ராத்திரியும் மதுவை கிடிக்கக் கொடுப்போம்,நம்முடைய தகப்பனார் சந்ததி உண்டாகும் படி நீ போய் அவரோடு சயனி என்றாள்.
  அப்படியே அன்று ராத்திரியும் தங்கள் தகப்பனுக்கு மதுவை குடிக்க கொடுத்தார்கள். அப்போது இளையவள் எழுந்து போய் அவனோடே சயனித்தால்:அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
  இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே இருவரும் கர்பவதியானார்கள்
  ஆதியாகமம் (19:31)
  லோத்து என்பவர் இறைவனின் தீர்க்கதரிசியாவார் அவர் கர்த்தருக்கு நெருக்கமானவராக இருந்தபடியால் அவரையும் அவர் மகள்களையும் தன்னுடைய தண்டனையி­ருந்து தபப்புவித்தர். அப்படிபட்டவர் மது அருந்த கூடாது என்று கர்த்தர் கட்டளை இட்டிருக்க அருந்திருப்பாரா(உங்களைப் போல் இயேசுவின் இரத்தம் என்று கூறிக்கொண்டு கர்த்தரின் கட்டளையை மீறி மதுவைக் குடிப்பதை போல் நிச்சயம் அவர் குடித்திருக்க மாட்டார்)
  நல்லவர் ஒருவருடைய மகள்கள் விபச்சாரம் செய்திருப்பார்களா?நமக்கும் மகள்கள் இருக்கிறார் என்பதை ஒரு கனம் சிந்தித்து பார்க்க வேண்டும்.அப்படியே அவர்கள் விபச்சாரம் செய்திருந்தாலும் லோத்து தீர்க்கதரிசிக்கு தெரியாமல் செய்ய முடியுமா?நான் உங்களிடம் கேட்பது என்ன வென்றால் ஒரு ஆண் மகனுக்கு தெரியாமல் கற்பழிக்க முடியுமா?சற்று சிந்தித்து பாருங்கள்.

  2 தாவீதும் அடுத்தவர் மனைவியும்……………?
  ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையி­ருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரியை உப்பிரிகையின் மேல் இருந்து கண்டான் :அந்த ஸ்திரி வெகு சௌந்தரவாதியாயிருந்தாள்.
  அப்போது தாவீது அந்த ஸ்திரி யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினாள்:அவள் எலீயாமின் குமாரத்திகளும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பச்சேபாள் என்றார்கள்.
  அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான். அவள் அவனிடத்தில் வந்த போது அவளோடு சயனித்தான்.பிற்பாடு அவள் தீட்டு நீங்கும் படி சுத்திகரித்து கொண்டு தன் வீட்டுக்குப் போனால்.அந்த ஸ்திரி கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கர அறிவிக்கும் படி ஆள் அனுப்பினான்.
  (சாமுவேல் 11:12 18)
  மக்களை நல் வழி காட்ட வந்த தீர்க்க தரிசி அடுத்தவர் மனைவி என்று தெரிந்தும் அவளை நெறிங்கியிருப்பாரா?நிச்சயமாக நெறிங்கியிருக்க மாட்டார் என்று உறுதியாக கூறலாம்.நம்முடன் இருக்கும் போ­ குருமார்களைப் போல் (குருமார்களின் தில்லுமுல்லுகள் இப்போது தான் வெட்ட வெளிச்சமாக தெரிகிறதே)இருப்பவர் என்று நினைத்து தீர்க்க தரிசிகள் மேல் அவதுறு கூறுவது மிகப் பெரும் பாவமாகும்

 4. Samuvel says:

  பிப்ளியா (biblia) என்ற கிரேக்க மற்றும் லத்தீன் மூலப் பதத்திலிருந்து உருவானது பைபிள் (bible) என்ற வார்த்தை. புத்தகங்கள் என்பது இதன் பொருளாகும். புராதன் பிரெஞ்சு மொழியிலிருந்து இது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பிப்ளியா என்பது பன்மை வார்த்தையாகும். இதன் ஒருமை பிப்ளியோன் (biblion) என்பதாகும்.

  புத்தகங்கள் என்று மட்டும் பொருள் கொண்ட பைபிளுக்கு கிறித்தவ வேத புத்தகம் என்ற அடிப்படைப் பெயரை வழங்கியவர் அன்றைய கான்ஸ்டான்டிநோபிளின் மதத் தலைவராக இருந்த ஜாண் கிரிஸோஸ்டமான் (392-404) என்பவர் என்று நம்பப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரே முதன் முதலில் பைபிள் என்ற பெயரை வழங்கியவர் என்ற கருத்தும் நிலவுகிறது.

  பல்வேறு காலகட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட பல புத்தகங்களின் கோர்வையே பைபிள். அதாவது பைபிள் ஒரு புத்தகம் என்பதை விட பல புத்தகங்களின் கோர்வை எனலாம்.

  தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பிற்கால எழுத்தர்களால் எழுதப்பட்டு பெரியதொரு தொகுப்பாகக் காணப்படும் பைபிளை கிறித்தவர்கள் இறைவேதம் என்று நமபுகின்றனர். எனினும் அது முழுக்க முழுக்க இறைவனால் அருளப்பட்டது என்ற கிறித்தவர்களின் வாதம் பல்வேறு காரணங்களால் ஏற்கப்பட முடியாததாக உள்ளது.

  பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்ப்டட புத்தகங்களின் ஒரு கோர்வைக்கு பைபிள் என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது என்பதே ஆய்வுகள் வழங்கும் சான்று .

  ஆனால் இதற்கு மாறாக அருளப்ப்டட காலத்திலிருந்து இன்று வரை மாறாமல் நிலை நிற்கும் குர்ஆன் அப்பெயரைத் தன்னகத்தே கொள்வதுடன் அது இறைவேதம் என்றும் பிரகடனம் செய்கிறது. சில வசனங்கள்:

  ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டி யாகவும், இன்னும் நேர்வழியிலிருந்தும், (சத்தியத்தையும் – அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்தும் தெளிவாக்கக்கூடிய சான்றுகளைக் கொண்ட துமான (ஃபுர்கான் என்னும்) குர்ஆன், இறக்கியருளப்பட்டது. (2:185)

  இந்தக் குர்ஆனை அவர்கள் ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இருந்திருக்கு மாயின் இதில் பல கருத்து வேறுபாடுகளை அவர்கள் கண்டிருப்பர். (4:82)

  மேலும், இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களால் கற்பனை செய்யப் பட்டதல்ல; அன்றியும், (இதற்கு) முன் (அருளப்பட்டு) உள்ளதை உண்மைப் படுத்துவதாகவும், (முந்திய) வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே,) அகிலத்தாரின் ரப்பிடமிருந்துள்ள இதில் எந்த சந்தேகமும் இல்லை. (10:37)

  நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி (மொழி)யிலான குர்ஆனாக, நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (12:2)

  அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகும். (15:1)
  நிச்சயமாக இந்தக் குர்ஆன், (மனிதர்களுக்கு) எது மிகமிக நேர்மையானதோ அதன்பால் நேர்வழி காட்டுகிறது. அன்றியும், நற்செயல்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது (17:9)

  தாஸீன்; இவை குர்ஆனுடைய, இன்னும் தெளிவான வேதத்தினுடைய வசனங் களாகும். (27:1)

  முற்றிலும் ஞானமுள்ள (இக்)குர்ஆனின் மீது சத்தியமாக! (36:2)

  மேலும், திட்டமாக நாம், குர்ஆனை நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே எளிதாக்கி வைத்துள்ளோம். ஆகவே (இதன் மூலம்) படிப்பினை பெறுவோர் உண்டா? (54:17)

  அளவற்ற அருளாளன், இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். (55: 1,2)

  அல்லாஹ் நாடினால் தொடரும்

 5. Samuvel says:

  குழந்தைக் கொலைகள் பைபிளில்!

  பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம் நிச்சயமாக கடவுளின் உபதேசமாக இருக்க முடியாது. இனவெறி கொண்ட புரோகிதர்களின் கைச்சரக்காகவே இதனைக் கருத முடியும்.

  மோசே என்னும் தீர்க்கதரிசிக்கு கர்த்தர் கட்டளையிட்டதாக பைபிளில் இடம் பெற்றுள்ள வன்முறைகளை இத்தொடரில் காண்போம்.

  மிதியான் என்ற நகரத்து மக்களைப் பழிவாங்குமாறு மோசேயிடம் கர்த்தர் கூறினாராம். அதைத் தொடர்ந்து நடை பெற்ற நடவடிக்கைகளாக பைபிள் கூறுவதாவது:

 6. Samuvel says:

  பஞ்சம் எகிப்தில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலுமிருந்தது. ஜோசப்பின் தந்தை இஸ்ராயேலின் கானான் நாட்டிலும் கடும் பஞ்சம் வந்தது.

  இஸ்ராயேல் தன் மகன்களை அழைத்து,” எகிப்தில் தானியங்கள் கிடைக்கின்றன, போய் வாங்கி வாருங்கள்.” என்றார். ஜோசப் இறந்ததாக நினைத்திருந்ததால் தன் கடைசி மகன் பெஞ்சமினை யாக்கோபு(இஸ்ராயேல்) மிகவும் விரும்பினார், மற்ற மகன்களோடு அவனை எகிப்துக்கு அனுப்பவில்லை.

  நெடுநாள் கடந்து ஜொசப்பின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்தனர். ஆளுனான ஜோசப்பிடம் போய் தலை வணங்கி நின்றனர்.

  ஆளுனரான ஜோசப் எகிப்து மன்னன் தனக்கு வைத்த எகிப்திய பேரில் அறியப்பட்டதாலும், 20 வருடங்கள் கழிந்திருந்ததாலும், தங்கள் சகோதரன் ஜோசப்தான் ஆளுநன் என அவர்களால் அறியமுடியவில்லை.

  ஜோசப் தன் சகோதரர்களை கண்டுகொண்டான். ஆனால் அவர்கள் பழையபடி கொடுமைக்காரர்களாயிர்ப்பார்களோ என பயந்தான். அவர்களை சோதிக்கும்படி,”நீங்கள் எகிப்தை வேவு பார்க்க வந்திருக்கும் உளவாளிகள் எனக்கூறி சிறையிலடைத்தான்”. அவர்கள் ஜோசப்பிடம்,”நாங்கள் இஸ்ராயேலின் மக்கள். தானியம் வாங்கத்தான் வந்திருக்கிறோம் எங்களுக்கு இன்னுமொரு தம்பி இருக்கிறான் அவன் எங்கள் தந்தையோடு இருக்கிறான்”, என்றனர்.

  ஜோசப் உடனே”அப்படியானால் போய் உன் தம்பியை அழைத்து வாருங்கள் நீங்கள் வரும்வரை இரண்டாமவன் யூதா சிறையிலிருப்பான்” என்றான். தன் வேலையாட்களை அழைத்து,”இவர்களுக்கு தானியங்கள் வழங்குங்கள். அவர்கள் தரும் காசை திரும்ப பைகளில் போட்டுவிடுங்கள்” என்றான்.

  யூதா தவிர மற்ற சகோதரர்கள் பயந்தபடியே கானானுக்கு வந்தனர். தங்கள் தானியப் பைகளில் தாங்கள் கொடுத்த காசு கிடப்பதைப் பார்த்து மேலும் பயந்தனர். தந்தையிடம் நடந்ததைக் கூறி பெஞ்சமினை கூட்டிச்சென்றால் யூதாவை திரும்பப் பெறலாம் என்றனர்.

  எற்கனவே ஜோசப்பை இழந்ததால் பெஞ்சமினை அனுப்ப இஸ்ராயேல் பயந்தார். இருப்பினும் தானியங்கள் எல்லாம் தீர்ந்து போனதும் மீண்டும், பெஞ்சமினுடன், தன் மகன்களை அனுப்பி வைத்தார்.

  இந்தமுறை ஜோசப் அவர்களை தன் அரண்மனைக்கு அழைத்து விருந்து வைத்தான். ஆனால் தான் ஜோசப் என்பதை அவர்களுக்குச் சொல்லவில்லை.

  மீண்டும் தானியங்களோடு அவர்களை அனுப்பினான் ஆனால் இந்த முறை பெஞ்சமினின் பைக்குள் தன் ரசக் கோப்பையை போட்டு வைக்கச்சொன்னான். தன் சகோதரர்கள் எகிப்தின் எல்லையை எட்டுமுன் அவர்களை நிறுத்தி தன் கோப்பையை திருடிவிட்டார்கள் என அவர்களை பிடித்து வரச் செய்தான்.

  தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என சகோதரர்கள் சொல்ல, பைகளை சோதனையிட்டான். “இதோ பெஞ்சமினின் பையில் என் கோப்பை உள்ளது இவனை மட்டும் நான் கைது செய்கிறேன்”என்றான் ஜோசப்.

  தன் தந்தைக்கு பெஞ்சமினை பாதுகாப்பாக கொண்டுவருவோம் என வாக்களித்திருந்த சகோதரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். “இவன் அண்ணன் ஜோசப் இறந்து விட்டான், இவனே எங்கள் தந்தைக்குச் செல்ல மகன், இவன் எங்களோடு வரவில்லையென்றால் அவர் இறந்து போவார். எங்களால் அதை தாங்க முடியயது.” என்றனர்.

  ஜோசப் இத்தனை சோதனைகளுக்குள் தன் சகோதரர்கள் திருந்தியிருப்பதை உணர்ந்து தான் ஜோசப் என்பதை அவர்களுக்குச் சொன்னான்.

  பின்னர் அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் கொடுத்து போய் நம் தந்தையையும் உறவினர்களையும் அழைத்துவாருங்கள் என்றான். அவர்களும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் தந்தைக்குச்சொல்லி அவரை எகிப்துக்கு அழைத்து வந்தனர்.

  பாரோ ஜோசப்பின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் எனவே அவன குடும்பத்தை வரவேற்று எல்லா வசதிகளும் கொடுத்து வாழவைத்தான்.

  தன் சகோதரர்களுக்கு மேலாய் உயர்வான் என்கிற ஜோசப்பின் கனவு நனவானது.

 7. Samuvel says:

  பைபிள் – பழைய ஏற்பாடு -ஓர் அறிமுகம்

  பைபிள் என்றால் புத்தகம் என்று பொருள்,. இதில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன எபிரெயர்களின் புராணக் கதைகள் உள்ள செய்திகளை சொல்லுவது பழைய ஏற்பாடு என வழங்கப்படுகிறது.

  பழைய ஏற்பாடு -39/46 (முப்பத்து ஒன்பது/நாற்பத்து ஆறு) புத்தகங்கள் உள்ளன கிறிஸ்துவுக்குப் பின் எழுதப்பட்ட புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன, இதில்27(இருபத்தேழு) புத்தகங்கள் உள்ளன.

  எபிரெயர்களின் புராணக் கதைகள் கொண்டது, பொ.கா.மு.2000-400 வரை நிகழ்ந்த சம்பங்களைக் கொண்டும் புழக்கத்தில் இருந்த சில கதைகளை வாசகரை வசப்படுத்தும்படி பழைய ஏற்பாடு எழுதப் பட்டவை. இது மூன்று பிரிவாக ஆகும்.

  தோரா- சட்டங்கள்

  நபியம் – தீர்க்கர்கள்

  கேதுபிம்- எழுத்துக்கள் என்ற மூன்று பிரிவுகளின் முதற் பெயர் கொண்டு தநாக் எனப்படும்.

  தோரா- சட்டங்கள்

  புராணங்களின் அடிப்படை- இஸ்ரேல் நாடு, அரேபிய பாலைவனப் பகுதிகளின் ஒன்று, இங்கு மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தி வந்தேறிகளான எபிரேயர்கள், தங்கள் ஆக்கிரமிப்பை, கடவுளின் தேர்ந்தெடுப்பு என, பாபிலோனின் அதாவது இன்றைய ஈராக்கினரான ஆபிரஹாமை இஸ்ரேல் நாட்டின் ஆட்சி-அரசியல் உரிமையைத் தந்ததாக புனைந்த கதைகளே ஆகும்.

  இவை பெரும்பாலும் பொ.கா.மு.250- 300 வாக்கில் இன்றைய வடிவில் புனையப் பட்டன. இப்பிரிவில் பாபிலோனியர்-மற்றும் பாரசிக மதங்களின் கருத்துக்களும், கிரேக்கப் புராணப் புனையல்களும் மிகுந்துள்ளன. இப்பிரிவில் உள்ள நூல்கள்

  1. ஆதியாகமம்

  2. யாத்திராகமம்

  3. லேவியராகமம்

  4. எண்ணாகமம்

  5. உபாகமம் இந்த 5 நூல்கள் பென்டாடச் என அதாவது முதலைந்து நூல்கள் என்று பெயர் படும்.

  மோசே என்ற மோசஸ் எழுதியது என்ற புனைக்கதை சில இடங்களில் பரப்பப்படுகிறது. கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசுவும் அவ்வாறு கூறியதாக புதிய ஏற்பாட்டில் வருகிறது, ஆனால் அவர் மரணத்திற்கு 1000 வருடங்களுக்குப் பின்பே இவை பெரும்பாலும் புனையப்பட்டன என பைபிள் உள்ளேயே ஆதாரங்கள் உள்ளன.

  நபியம் – தீர்க்கர்கள்

  பெரும்பாலும் அடிமைப்பட்டே வாழ்ந்து வந்தனர் எபிரேயர்- பழைய ஏற்பாடு காலத்தில், அவ்வொப்பொழுது அவர்களும் எழுந்து எபிரேயர்கட்கு வெற்றி வாய்ப்புண்டு என நம்பிக்கையும் எபிரேயர் ஒற்றுமைக்காக இஸ்ரேலின் எல்லையின் சிறு தெய்வம் யவ எனப்படும் கர்த்தர் பெயரில் சொன்னதாக உள்ளவை.

  தீர்க்கர்கள் கூறியவை எல்லாம் அவர்கள் காலத்தில் நடக்கும் என்றவையே தான், மேலும் பெரும்பாலும், இவையும் பொ.கா.மு. 450-100 இடையே புனையப்பட்டவை, அதாவது இறந்தவர் பெயரில் யாரோ பிற்காலத்தில் புனைந்தவை. இப்பிரிவில் உள்ள நூல்கள்

  முதல் தீர்க்கர்கள்

  1. யோசுவா

  2. நியாயாதிபதிகள்

  3. 1 சாமுவேல்

  4. 2 சாமுவேல்

  5. 1 இராஜாக்கள்

  6. 2 இராஜாக்கள்

  பெரிய தீர்க்கர்கள்

  7. ஏசாயா

  8. எரேமியா

  9. எசேக்கியேல்

  சிறிய தீர்க்கர்கள்

  10. ஓசியா

  11. யோவேல்

  12. ஆமோஸ்

  13. ஒபதியா

  14. யோனா

  15. மீகா

  16. நாகூம்

  17. ஆபகூக்

  18. செப்பனியா

  19. ஆகாய்

  20. சகரியா

  21. மல்கியா. பொ.கா.29-30 வாக்கில் ரோம் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு மரணதண்டனையில் இறந்த்தான ஏசு, பழைய ஏற்பாட்டை மோசே சட்டங்களும் தீர்க்கர்களும் என அழைப்பார்.

  எழுத்துக்கள்:

  பக்கத்து நாட்டு இறை இலக்கியங்களையும் நாட்டின் சம்பவங்களையும் மக்களிடை போர்-அரசியல் ஒற்றுமைக்காக சட்டங்கள், தீர்க்கர்கள் எனத் தொகுத்த பின் மீதி பிற்கால நூல்கள் எல்லாம் எழுத்துக்கள் என்ற பெயரில் பொ.கா. 135 வாக்கில் அதாவது கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசு இறந்து 100 ஆண்டுகட்குப் பின் இன்றைய வடிவில் புனையல் பெற்றது.

  இப்பிரிவில் உள்ள நூல்கள்

  1. 1 நாளாகமம்

  2. 2 நாளாகமம்

  3. எஸ்றா

  4. நெகேமியா

  5. எஸ்தர்

  6. யோபு

  7. தானியேல்

  8. சங்கீதம்

  9. நீதிமொழிகள்

  10. உன்னதப்பாட்டு

  11. புலம்பல்

  12. ரூத்

  13. பிரசங்கி

  தள்ளுபடி புத்தகங்கள்

  பொ.கா. 135 வாக்கில் அதாவது கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசு இறந்து 100 ஆண்டுகட்குப் பின் இன்றைய வடிவில் புனையல் பெற்றது எபிரேய பழைய ஏற்பாடு, ரோமினால் மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட, கிரேக்கர்களை வென்றதான மக்கபே, மற்றும் உலகம் முடிவு காலம் நெருங்குகிறது, கடைசி காலத்தில் கிறிஸ்து பிறந்து எபிரேய யூதர்களை ஒற்றுமைப்படுத்தி போர் வெற்றியோடு விண்ணுலகம் செல்லுதல் எனும்படி மூட நம்பிக்கை கதைநூல்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மூலங்கள் அழிக்கப்பட்டன. ரோம் சர்ச்சினால் கிரேக்கப் படிகள் மூலம் இவை இப்போது ரோமன் கத்தோலிகர்களால் தள்ளுபடி இணைப்புகள் என சேர்த்து கத்தோலிக பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் தரப்படுகின்றன.

  இவை எபிரேயர்களால் நிராகரிக்கப்பட்டதால் மறுப்பணி சர்ச்சுகள் இவற்றை தங்கள் பதிப்புகளில் சேர்ப்பதில்லை.

  இப்பிரிவில் உள்ள நூல்கள்

  1. தொபியாசு

  2. யூதித்

  3. ஞானம்

  4. சீராக்

  5. பாரூக்

  6. I மக்கபே

  7. II மக்கபே

  பைபிளை நடுநிலை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் காண்பவர்கள் முழு பைபிளும் அரசியல் ஆட்சியுரிமையை பிரதானமாக போற்றும் புத்தகங்களே அன்றி இறையியல் நூல்களோ வரலாற்றுத் தன்மை முழுமையாக கொள்ளவில்லை என ஏற்கின்றனர்.

  குறிப்பு-

  பொ.கா.- பொது காலம்- C.E. –Common Era அதாவது வரலாற்று அறிஞர்களால் கைவிடப்பட்ட பழைய கி.பி. A.D..

  பொ.கா.மு.- பொது காலத்துக்கு முன் – B.C.E.- Before Common Era அதாவது வரலாற்று அறிஞர்களால் கைவிடப்பட்ட பழைய கி.மு. -B.C
  http://devapriyas.indiainteracts.com/2009/04/28/bible-0ld-testament/

 8. Samuvel says:

  பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையா? பாவங்களின் ப‌ல‌னா? வேதம் – பைபிள் வேதமும் பைபிளும் கூறுவதென்ன ?வேதம் — அவள் தீட்டு, அவளை, அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது.பைபிள் – மாதவிடாய் பெண்களை- தொட்டாலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ?–பெண்களுக்கு மாதவிடாய் உடற்கூறு இயற்கையா? மாத‌விடாய் பாவங்களின் ப‌ல‌னா?பைபிள்Thanks to source:http://www.tamil-bible.com/lookup.php?Book=Leviticus&Chapter=15&Verse=19-31&Kjv=2BIBLE லேவியராகமம் 15 அதிகாரம்19. சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம்(மாதவிடாய் காரணமாக‌) ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.And if a woman have an issue, and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever toucheth her shall be unclean until the even.20. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம்…

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s