மீன் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

fish

மீன்  ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் மீன் பற்றி அறிவேதுமில்லாதவன்.

[எப்பொருளையும் பற்றி நீ அறியக்கூடியதெவை? Download For Offline Use]

மீன் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

மீன் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

Advertisements

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

17 Responses to மீன் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

 1. மீன் நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு ஆகும். மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என வரையறை செய்யலாம். மிகப்பெரும்பாலாவை உடலில் செதிள் கொண்டவை. மீன்களின் உடல் வெப்பநிலையானது தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து இருக்கும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை சூழ்வெப்பநிலை விலங்குகள் என்று சொல்வர். இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினம். பல் வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உலகில் உள்ளன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபடுவன. சில தட்டையாகவும் சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும். பிலிப்பைன்சு நாட்டில் உள்ள நீர்நிலைகளில் வாழும் குட்டிக் கோபி என்னும் சிறு மீன் வகை சுமார் 13 மில்லி மீட்டர் நீளம் தான் கொண்டிருக்கும், ஆனால் திமிங்கிலச்சுறாமீன் என்னும் மீன் சுமார் 18 மீட்டர் (60 அடி) நீளம் கொண்டிருக்கும். திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்). சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில பல நிறக் கோலங்களும், கோடுகளும் தீட்டுகளும் கொண்டவையாகவும் இருக்கும். சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில வகைகள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்பவை. சில வெப்ப மண்டல நாடுகளின் நீர்நிலைகளிலும், சில மீன் இனங்கள் கடுங்குளிர்ப்பகுதியான ஆர்ட்டிக பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றன.
  ஆழ்கடலில் வாழும் கூன்முதுகு மீன்

  மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன:

  * வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்),
  * குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) ,
  * குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்)
  * செதிள் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு, ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்)

  மீன்கள் உலகில் வாழும் மில்லியன் கணக்கான மாந்தர்களுக்கும், கரடி முதலான விலங்குகளுக்கும் உணவாகப் பயன் படுவன.

 2. * அறுக்குளா
  * அவுரி – CHANNA MARULIUS
  * அம்புட்டன் வாழ – CHITALA CHITALA
  * அனுவ மீன் – DIPLOPRION BIFASCIATUM
  * அத்வாணி திருக்‍கை – GYMNURA POECILURA
  * அடுக்குப்பல் சுறா – HEMIPRISTIS ELONGATA
  * அவிலி (அவீலீ) – LIZA
  * அமட்டீகாட்டீ – MENE MACULATA
  * அம்பட்டண் கத்தி – NOTOPTERUS NOTOPTERUS
  * அதவாழன் திருக்‍கை – PISTANACHUS SEPHEN
  * அகலை – RASTRALLIGER KANAGURTA
  * அமீனீ உளுவை – RHICODON TYPUS
  * அடுப்பு பொறுவா – THRYSSA MALABARICA

  [தொகு] ஆ

  * ஆட்கான்டி – BARILLIUS GATENSIS

  [தொகு] இ

  * இருங்கெளுத்தி – PLOTOSUS CANIUS

  [தொகு] ஒ

  * ஒட்டி

  [தொகு] ஓ

  * ஓரா

  [தொகு] க

  * கட்லா – Catla, இந்தியப் பெருங்கெண்டை இன மீன்களில் ஒன்று.
  * கயல்
  * கருமுறைச்செல்வி
  * கருந்திரளி
  * கலவாய்
  * காரல் மீன்
  * காரப்பொடி
  * கிழக்கன்
  * கீச்சான் – TERAPON JARBUA
  * கீச்சான் -TIGERFISH
  * கிளி மீன்
  * கீரி மீன்- AMBLYGASTER CLUPEOIDES
  * கீளி மீன்
  * குஞ்சுப்பாரை
  * குதிப்பு – False trevally (Lactarius spp.). வட தமிழகத்தில் சுதும்பு என வழங்கப்படுகிறது.
  * கும்புளா
  * கும்டுல் – SCOPLOPSIS TAENIOPTERUS
  * கூந்தா
  * கூரல்
  * கெலவல்லா
  * கெழுத்தி – Catfish (பொதுப் பெயர்)
  * கெளிறு
  * கெண்டை – Carp (பொதுப் பெயர்)
  * கொடுவா – Asian seabass, called as barramundi in Australia.
  * கொண்டை – salmon
  * கொய்
  * கோலா மீன் – COROMANDEL FLYING FISH
  * கோரோவா – BLOTCHED CROAKER, NIBEA MACULATA
  * கோர சுறா – BROADFIN SHARK, LAMIOPSIS TEMMINCKII
  * கோலா -HIRUNDICHTHYS COROMANDELENSIS

  [தொகு] ச

  * சங்கரா
  * சாம்பல் மீன் – Grey mullet
  * சாளை – Sardines
  * சிறையா
  * சுறா- Shark
  * சுதும்பு- False trevally (Lactarius spp.) தென் தமிழகத்தில் குதிப்பு என்று அழைக்கப்படுகிறது
  * சூரைமீன் – Tuna
  * சூடை – Sardines
  * சூடைவலை
  * செவ்விளை – Red snapper
  * சீலா – தென் தமிழகத்தில் Seer fish, வட தமிழகத்தில் Barracuda; தென் தமிழகத்தில் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  * சாதா கெண்டை – Common carp
  * செம்மீன் – Shrimp or prawn, இறால் அல்லது எரா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. முதுகெலும்பில்லா க்ரஸ்டீசியா வகையைச் சேர்ந்தது. மீன் அல்ல.
  * சிலேபி(ஜிலேபி) – Tilapia

  [தொகு] ட

  * டொல்பின் இது பாலூட்டி. மீன் அல்ல.

  [தொகு] த

  * திருக்கை – Skates and Rays
  * திரளி
  * திமிங்கலம்- whale (பாலூட்டி. மீன் வகையல்ல)
  * திலாப்பியா – tilapia
  * தளபொத்து

  [தொகு] ந

  * நவரை
  * நெத்திலி – Anchovy

  [தொகு] ப

  * பாரை மீன்
  * பாலை மீன்
  * பால் மீன்
  * பளயா
  * புல் கெண்டை – Grass carp
  * பன்னா மீன்

  [தொகு] ம

  * மணலை
  * முரல்
  * மண்ணா
  * மிர்கால், மிருகால் – Mrigal, இந்தியப் பெரும் கெண்டைகளில் ஒன்று
  * மத்தி மீன்
  * முண்டான்

  [தொகு] ர

  * ரோகு – Rohu, இந்தியப் பெருங் கெண்டைகளில் ஒன்று.

  [தொகு] ல

  * லோகு

  [தொகு] வ

  * வஞ்சிரம் மீன் – Seer fish or Spanish mackerel. தென் தமிழகத்தில் சீலா என்றும் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  * வவ்வால் மீன் – Pomfret, தென் தமிழகத்தில் வாவல் என்று வழங்கப்படுகிறது
  * வளையாமீன்
  * வாளை மீன் – Belt fish or Ribbon fish.
  * விளை – Emperor fish
  * விரால் மீன் – நன்னீரில் வாழும் Murrel அல்லது Snakehead மீன்; உவர் நீரில் வாழும் Cobia
  * விலாங்கு – Eel
  * வெள்ளிக் கொண்டை – Silver carp, சீனப் பெருங் கெண்டை மீன்களில் ஒன்று
  * வெள்ளைக்கிழங்கா
  * வெள்ளை அரிஞ்சான் – CIRRHINUS CIRRHOSUS
  * வெள்ளி அரிஞ்சான் – ENCHELIOPHIS HOMEI
  * வாளை மீன் – SWORD-FISH

 3. நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.

  ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
  இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது’ என்றனர்.

  தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.

  இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

  தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

  மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

  மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் எந்த நோய் பற்றியும்

  கவலைப் பட வேண்டாம்

  மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.

  ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

  மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள “ஓமேகா 3′ என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, “ஒமேகா 3′ கிடைக்கிறது.

  அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

  ஆண்களின் ஆயுளுக்கு மீன் துணைபுரியுமா?

  ஜப்பானில் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் 1980 முதல் 1999 வரை 30 முதல் 64 வயது வரையாந 4070 ஆண்களையும் 5182 பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தினார். 20 ஆண்டுகளாக கண்காணித்த பின் ஆய்வறிக்கை தயாரித்தார். ஆண் ஒருவர் நாள்தோறும் ஒரு முறை மீன் உட்கொண்டால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விதிதத்தை 30 விழுக்காடு வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை மீன் உட்கொண்டால் உடம்புக்குத் தேவைப்படும் சத்து போதிய அளவு கிடைக்கலாம்.

  பெண்களிடையே உயிரிழப்பு விகிதம் குறைவு என்பதால் அவர்கள் மீன் உட்கொள்வதன் விளைவு சரியாகத் தெரியவில்லை. மீன் இறைச்சி ரத்தக் கட்டியைத் தடுக்கலாம். இருதய நோய் மூளையில் ரத்தம் உறைவது முதலானவற்றைத் தடுக்கலாம்.

  தடுக்கப்படும் நோய்கள்

  ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

  கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள “ஒமேகா 3′ ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

  கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், “ஒமேகா 3′ யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

  இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

  மீ……..ன் பிரியாணி
  எப்போ பார்த்தாலும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று ஒரே மாதிரி தான் நாம் செய்கிறோம் FOR CHANGE மீன் பிரியாணி செய்து பாருங்க அதன் சுவையோ தனி தான்

  தேவையான பொருட்கள்

  மீன் – 1 KG

  பாசுமதி அரிசி – 1 KG

  தக்காளி – 1/2 KG

  பெ..வெங்கயம் – 1/4 KG

  தயிர் – 1/2 CUP

  ப-மிளகாய் – 5

  நெய் – 1/4 CUP

  எண்ணெய் – 1 CUP
  எலுமிச்சம்பழம் – 2

  கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்

  மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

  மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

  மல்லித்தூள் – 2 டீஸ்பூன்

  இஞ்சி,பூண்டு,பட்டை,விழுது – 5 ஸ்பூன்

  பிரிஞ்சி இலை – சிறிது

  சோம்பு,கசகசா – 3 ஸ்பூன்

  ஜாதிக்காய்,ஜாதிரம்,ஜாதிபத்ரி – 10 gm

  முந்திரி,திராட்சை – 20 gm

  ஏலக்காய் – 5

  உப்பு – தேவைக்கு
  கறிவேப்பிலை,புதினா,மல்லிதழை – தலா 1 கைப்பிடி

  செய்முறை:-

  மீன் தயாரிக்க

  முதலில் மீனை சுத்தம் செய்து துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்து முள் நீக்கி பிசிறி வைக்கவும்.

  நெய் சாதம் தயாரிக்க

  பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு.பட்டை,கிராம்பு,ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.(குக்கரிலும் வைக்கலாம்)

  அரைக்க வேண்டியவை

  இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும்.

  சோம்பு, கசகசா இரண்டையும் அரைக்கவும்.

  ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

  நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.,

  மசாலா தயாரிக்க

  வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி.

  அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.

  அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி

  தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.

  முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.

  பிரியாணி கலக்க

  குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.

  அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.

  இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.

  பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.

  சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.

  அல்லது

  சாதம் தனி மசாலா தனி என இரு வேறு பாத்திரத்தில் எடுத்து பரிமாறலாம்.

 4. தேவையானவை

  மீன் – 1/4 கிலோ
  தக்காளி – 2
  வெங்காயம் – 2
  புளி – எலுமிச்சையளவு
  மிளகாய்த் தூள் – 4 தே‌க்கர‌ண்டி
  மஞ்சள் தூள் – 1/2 தே‌க்கர‌ண்டி
  கடுகு – 1/2 தே‌க்கர‌ண்டி
  எண்ணெய் – கா‌ல் க‌ப்
  க‌றிவே‌ப்‌பிலை – ‌சி‌றிது

  செய்முறை :

  ‌மீனை சு‌த்த‌ம் செ‌ய்யவு‌ம்.

  தக்காளி, வெங்காய‌‌த்தை நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

  பு‌ளியை‌க் கரை‌த்து அ‌தி‌ல் உ‌ப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சே‌ர்‌‌க்கவு‌ம்.

  அடுப்பில் குழ‌ம்பு பாத்திரத்தை வைத்து தா‌ளி‌த்து, வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள்.

  வத‌ங்‌கியது‌ம் புளி‌க் கரைசலை ஊ‌ற்‌றி‌க் கொதிக்க விடுங்கள்.

  குழம்பு சு‌ண்டி வரு‌ம் போது, கழுவிய மீனைப் போட்டு 10 ‌நி‌மிட‌ம் ‌மிதமான ‌தீ‌யி‌ல் குழ‌ம்பை வை‌த்து இறக்குங்கள்.

  இ‌ந்த குழ‌ம்‌பி‌ல் இரு‌ந்து ‌மீனை எடு‌த்து தவா‌வி‌ல் போ‌ட்டு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்று‌ங்க‌ள். ‌மீ‌ன் ‌மீது ‌சி‌றிது குழ‌ம்பையு‌ம் ஊ‌ற்‌றி ‌திரு‌ப்‌பி‌ப் போ‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் குழ‌ம்பையு‌ம், எ‌ண்ணெயு‌ம் ஊ‌ற்‌றி வறு‌த்தெடு‌ங்க‌ள்.

  பு‌ளி‌க் கரைச‌லி‌ல் வெ‌ந்த ‌மீ‌னி‌ன் வறுவ‌ல் சுவை அருமையாக இரு‌க்கு‌ம்.

 5. இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் சுவையான மீன் குழம்பு வகை இது. நாகை, நாகூர் பகுதிகளில் இதனை மீன் சம்பால் என்றும் சொல்லுகின்றனர். இதன் செய்முறையை நமக்காக வழங்கியவர் திருமதி. கமர் நிஷா.

  * மீன் – 4
  * தக்காளி – 5
  * பெரிய வெங்காயம் – 5
  * பூண்டு – 10 பல்
  * மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  * மிளகாய் வற்றல் – 5
  * மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
  * தேங்காய் பால் – கால் கப்
  * எலுமிச்சை பழம் – அரை மூடி
  * உப்பு – ஒன்றரைத் தேக்கரண்டி
  * எண்ணெய் – கால் கப்

  மீனின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி, சுத்தம் செய்து நடுப்பகுதியில் கத்தியால் கீறி விடவும். மிகவும் பெரிய அளவிலான மீன்கள் இதற்கு நன்றாக இருக்காது. கொஞ்சம் பெரிய மீன்களை மூன்று அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயத்தை எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  மீன் துண்டங்களை மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து பிரட்டி வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும்.

  ஊற வைத்த மிளகாயுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  மீதமுள்ள மூன்று வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மீதமுள்ள மூன்று தக்காளிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கவும்.

  வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய்த்தூளில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

  மீன் துண்டங்கள் அனைத்தையும் பொரித்து எடுத்தப் பிறகு அதே வாணலியை சுத்தம் செய்து அல்லது மற்றறொரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நீளவாக்கில் நறுக்கின வெங்காயம், அரைத்த மிளகாய் விழுது போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

  வெங்காயம் விழுது ஒன்றாய் சேர்ந்து நன்கு வதங்கிய பிறகு நறுக்கின தக்காளி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

  பிறகு அதனுடன் தேங்காய் பால் ஊற்றி பிரட்டி விட்டு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு லேசாகப் பிரட்டி விடவும்.

  வாணலியை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு சுமார் ஒரு நிமிடம் வேகவிடவும். தீயின் அளவு மிதமாகவும், சீராகவும் இருக்க வேண்டும்.

  ஒரு நிமிடம் கழித்து திறந்து எலுமிச்சை பழம் பிழிந்து விட்டு மேலும் மூன்று நிமிடம் மூடி வைக்கவும்.

  அதன்பிறகு திறந்து, மீன் உடைந்துவிடாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கி விடவும். இதனை சூடான சாதத்துடன் பரிமாறவும்.

  ஒருமுறை செய்து பார்த்துவிட்டு அடுத்த முறை செய்யும் போது காரம், உப்பு அளவுகளைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளவும்.

 6. காரைக்குடி முறையில் மீன் குழம்பு செய்வதற்கான எளிய குறிப்பு.

  தேவையான பொருட்கள்

  * மீன் – 1 /2 கிலோ
  * புளி – எலுமிச்சை அளவு
  * பூண்டு – 15 பல்
  * சின்ன வெங்காயம் – 10
  * தக்காளி – 1
  * மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  * மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி
  * மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
  * உப்பு – தேவையான அளவு

  அரைக்க

  * தேங்காய் துருவியது – 1 /4 கப்
  * மிளகு – 10 – 15
  * சீரகம் – 2 தேக்கரண்டி
  * கருவேப்பிலை – 2 கொத்து

  தாளிக்க

  * சீரகம் – 1 /2 தேக்கரண்டி
  * மிளகு – 1 /2 தேக்கரண்டி
  * வெந்தயம் – 10
  * கருவேப்பிலை – ஒரு கொத்து
  * நல்லெண்ணெய் – 1 /4 கப்

  செய்முறை

  1. புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  2. தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  5. கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  6. பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
  7. பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  8. நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
  9. வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.

  குறிப்பு

  1. மீன் குழம்பு சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
  2. மீன் துண்டுகளை இறுதியாக குழம்பில் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மீன் குழம்பில்

 7. மீன், அசைவ உணவில் மிகவும் ஆரோக்கியமானதும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்த உணவாகும். கெழுத்தி, கெண்டை, வெளவால், கெலங்கா, விறால், ஐர, நெத்திலி, கொடுவா, வஞ்ர மீன் போன்ற வகைகள் மிகவும் ருசியானவை. வட்டார பெயர்களுடன் உள்ள மீன்களின் பல வகை உணவு இதோ…
  நெத்திலி தொக்கு தூனாமீன் பொடிமாஸ்
  மீன் அசாது மீன் பகோடா
  மீன் கபாப் மீன் ரோஸ்ட் 1
  மீன் தந்தூரி மீன் மன்சூரியன்
  மீன் கட்லெட் 2 வேகவை‌த்த ‌மீ‌ன்
  தழை வாழை மீன் மீன் கட்லெட்
  மீ‌ன் பு‌ட்டு மீன் பிரியாணி
  மீன் கட்லட் சுறா புட்டு
  Fish 65 மீன் தந்தூரி
  மீன் கோலா உருண்டை ஃபிஷ்பிங்கர் ஃப்ரை 2
  ஃபிஷ்பிங்கர் ஃப்ரை 1 மீன் ரோஸ்ட்
  சாப்ஸ் மீன் ஃபிஸ் பய்
  கேன்ட் ஹெரிங் பப்ஸ் கூனி மீன் கபாப்
  இரால் மீன் வடை ஃபிங்கர் ஃபிஷ்
  சிலோன் மீன் சொதி வாவல் மீன் அவியல்

 8. மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம்.

  அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.

  இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

  தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

  மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

  அசைவப் பிரியைகள் இனிமேல் உற்சாகமாய் சாப்பிடலாம் மீன் !

 9. கடல் உணவு வகைகளான நண்டு, மீன், இறால் போன்றவை அசைவு உணவு பிரியர்களின் மிக விருப்பமான ஐட்டங்களாகும். குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு புரதச்சத்தும் உள்ள கடல் உணவு வகைகள் ஆரோக்கியமான உணவின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கின்றன. உடல் தசைகளின் உறுதிக்கும், உடலின் கொலஸ்டிரால் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதற்கும், இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் மீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம். ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறிகளை விட கடல் உணவு வகைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகும்.

  கடல் மீன் உணவில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் உடலுக்கு மிகவும் அவசியமானதாக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மீன் உணவில் இது இயற்கையாகவே உள்ளது. ரத்த அழுத்தத்தை சமன் செய்வதற்கும், மாரடைப்பு வராமல் தடுப்பதற்கும் இது உதவுகிறது. நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி இந்தஆசிட் சில வகை புற்றுநோய்களை தடுக்கிறது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி, செலனியம், அயோடின் மற்றும் சில தாதுப் பொருட்களும் கடல் மீனில் உள்ளன.

  ஒரு மனிதன், 100 கிராம் மீன் சாப்பிட்டால், அதில் சுமார் 20 கிராம் வரை புரதச்சத்து கிடைக்கிறது. சுமார் 60 கிலோ எடை உள்ள நடுத்தர வயது ஆண்களுக்கு, ஒரு நாளைக்கு 50-55 கிராமும், பெண்களுக்கு 40-45 கிராமும் உணவில் புரதச்சத்து இருக்க வேண்டும். நீங்கள் 200 ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன் வாங்கி உங்கள் வீட்டில் உள்ள நான்கு பேர் சாப்பிட்டால், ஒரு நபருக்கு சுமார் 50 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது. இதன் மதிப்பு வெறும் 50 ரூபாய் மட்டுமே. ஆனால் புரதச்சத்து பவுடர் கடையில் வாங்கினால், அதன் செலவு மிக அதிகமாகும்.

  இந்திய கடல் உணவு ஏற்றுமதி கழகத்தின் அறிக்கையின்படி 2009-2010 வருடத்தில் மட்டும், பத்தாயிரத்து நாற்பத்து எட்டு கோடி ரூபாய்க்கு கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய வருடத்தை விட பதினாறு சதவிகிதம் அதிகரித்து கடல் உணவு ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்து உள்ளது.

  தற்போது உள்ள நடைமுறையில், முதல் தர நண்டு, மீன் மற்றும் இறால்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன. உடல் திறனுக்கும், புத்திக் கூர்மைக்கும் அவசியமான புரதச்சத்து சாதாரண மக்களுக்கு முன்பு கிடைத்ததை போல் இப்போது கிடைப்பதில்லை. இவ்வாறு, ஒரு நாட்டின் புரதச் சத்து உணவு உள்நாட்டு மக்களுக்கு கிடைக்காத வகையில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதை ஆங்கிலத்தில் `ப்ரோடீன் பைரசி’ என்பர். பரவலான புரதச்சத்து குறைபாடு என்பது குழந்தை களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அறிவுத்திறனுடன் தொடர்புடையது என்பதால், இந்த விஷயத்தில் உரிய தீர்வு காண சரியான அணுகுமுறை அவசியமாகும்.

  பாரம்பரிய மீன் பிடி முறைகளை விடுத்து சுருக்குமடி, இரட்டைமடி, வெடிவைத்து மீன் பிடித்தல் போன்ற சில தவறான மீன் பிடி முறைகளை மேற்கொள்ளும் ஒருசிலரால், நாம் சாப்பிடக்கூடிய கிட்டத்தட்ட 113 வகை மீன்கள் இல்லாதேபோகும் நிலைக்கு வந்துவிட்டன. தமிழக கடற்கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், இவ்வாறு அழிந்து கொண்டு இருக்கிற மீன்களின் பட்டியல் அதிகம்.

  அந்த மீன்களின் தமிழ் பெயர்கள்: கூறல், உள்ளன், கொம்பன் சுறா, வெல்மீன், பன்னா, குதுப்பு, செம்மீன், சீலா, கட்டிக்காலை, கட்டா, வாவல், கடவுறா, குமுளா, நெய் மஞ்சளா, சாவாலை, அருந்தல், பூவாலை, காலா, தீக்குச்சி மீன், அராம்பு, வேடகொம்பன், வெள்ளைக்குறி, மாம்பழ கெழுது, இழுப்பன், சல்பாகெழுது, பொதி கெழுது, குழிபன்னா, வாணியம் பன்னா, நவரை, நங்கல்குட்டி, பொய்க்குட்டி, பொய்க்கம், கருவால் உள்ளம், காக்கன், சுதும்பு, தீராங்கன்னி, வங்கராச்சி, கார்த்திகை வாளை, வலங்கம்பாறை, முசுக்கம் பாறை, கண்டல், தோவை, ஆனைக்கத்தலை, மட்லீசி, தோக்கரா, வெள்ளுடா, வெங்கன், சீத்தலா, பொருவா, பால்கெண்டை மற்றும் செப்பிலி. இந்த லிஸ்டில் வராத பல மீன் களையும் இப்போது நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.

  ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் குறிப்பிட்ட 45 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது எந்த அளவுக்கு மீன் இனங்களை அழிவிலிருந்து காக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில், கடலில் உள்ள ஒவ்வொரு வகை மீனும் வெவ்வேறு பருவ காலங்களில் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை. அப்படி இருக்கும்போது வருடத்தின் குறிப்பிட்ட 45 நாட்களுக்கு மட்டும் மீன் பிடிக்கத் தடை விதிப்பது எந்தவிதத்தில் பயனளிக்கும் என்பதும் கேள்வியாகிறது.

  கடல் உணவுக்கான இன்றைய நமது தேவை பத்து கோடியே நாற்பத்து மூன்று லட்சம் மெட்ரிக் டன் என தெரிய வருகிறது. கடல் உணவின் தேவை அதிகரிக்கும்போது, வளர்ந்த நாடுகள் லோக்கல் மார்க்கெட்டின் வழக்கமான விலையை விட பல மடங்கு விலை கொடுத்து இறக்குமதி செய்து கொள்கின்றன. இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருக்கும் மீன் வளங்களை இயன்றவரை பிடித்து ஏற்றுமதி செய்யும் மனநிலையை உருவாக்கி விட்டது. குறுகிய காலத்தில் அதிக மீன்களை பிடிப்பதற்காக பல தவறான மீன் பிடி முறைகள் சிலரால் கையாளப்படுகின்றன. தமிழக கடலோரத்தில் உள்ள மீன் உற்பத்தி தளங்கள் பாதிப்படைந்து, தமிழக கடற்பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளதால், மீனவர்கள் கடலில் நீண்ட தூரம் போய் மீன்பிடிக்கச் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.

  வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்காகவே கடல் அலைகளோடு போராடும் மீனவர்கள், நம் நாட்டிற்கு தருவதோ ஆயிரம் கோடிகளில் அன்னிய செலாவணி. எனவே, கடல் உணவு ஏற்றுமதியில் நம் நாட்டிற்கு வருமானம் கிடைக்கிறது என்று மேலோட்டமாக பார்ப்பதை விட்டு, புரதச்சத்து சார்ந்த பிரச்சினையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு சாதாரண மீனவர்கள் படும் துயரங்களை போக்கவும் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 10. நாம் கண்டு வரும் இந்த தொடரிலே இறைவனின் படைக்கும் ஆற்றலையும் அவன் நாடியதை செய்யக்கூடிய வல்லமையுடையவன் என்பதனையும் தெளிவுபடுத்தும் சில உயிரினங்களைப் பற்றிப் பார்த்து வந்தோம். அந்த வரிசையிலே தற்போது நாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும்.

  தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன், தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது.

  N

  நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு எலம்புகளினால் பெருக்கல் குறி அமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  எலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650V மின்சாரமாகும். இத்தகைய அபரிதமான மின் ஆற்றல்தான், இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். இன்னும் சில வகை மீன்களுக்கும் சிறிய அளவிலும் குறிப்பிடக் தக்க அளவிலும் மின் ஆற்றல் இருப்பினும் இந்த எலக்டிரிக் ஈல் அவை அனைத்தையும் காட்டிலும் மிக அதிக அளவிற்கு மின் ஆற்றல் பெற்று விளங்குகிறது.

  அமேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறுதான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும். 2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது. சாம்பல் நிறத்துடனும் மிகக் குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது. உள் உறுப்பு அனைத்தும் இவற்றின் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.

  இவற்றிற்கு சிறிய அளவிலே செவுள் அமையப் பெற்றிருப்பினும் கூட இவை சுவாசித்ததன் பின்னர் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவே இதைப் பயன்படுத்துகின்றன. இவை வாழக்கூடிய ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன. மேலும் இவற்றின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் அமையப் பெற்று இருப்பதனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. இவை அதிகமான நேரங்கள் அசைவின்றி மிகவும் சோம்பல் வாய்ந்த நிலையிலேயே கழிக்கின்றன.

  இவற்றின் திறனைப் பற்றி பண்டைய கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர் என்பதனை வறலாறுகளில் அறிய முடிகின்றது. பண்டைய ரோமானியப் பேரரசர்கள் எலக்டிரிக் ஈலைக் கொண்டு தங்கள் எதிரியை கொன்று அழித்தனர். இவை உயிரைப் போக்கி விடக்கூடிய ஏதோ ஒரு ஆற்றல் பெற்று விளங்குவதை அறிந்து வைத்திருந்தனரே தவிர இவற்றின் அபரிதமான மின் ஆற்றலைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. பண்டைய ரோமானிய மன்னர்கள் இவற்றை நன்கு அலங்கரித்து குளங்களில் வளர்த்து தங்களின் அரசியல் எதிரிகள் மற்றும் தங்களுக்கு அடிபணியாத அடிமைகளை குளத்தில் தள்ளி இவற்றின் மூலம் சாகடித்துள்ளதை வறலாறுகளில் காண முடிகின்றது.

  இவற்றின் மின் அதிர்வு பெரிய குதிரையையே 6 மீட்டர் தொலைவிற்குத் தூக்கியெறியும் ஆற்றல் உள்ளதாகும். இந்த மீனைப் பொருத்தவரை தனது உணவிற்காக இவைகள் தனது எதிரியின் மீது மோதினாலே போதுமானதாகும். அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும் ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது. எலக்ட்ரிக் ஈல் அவற்றின் மீது பட்ட உடன் மின் தாக்குதலால் உடனே செயலிழந்து விடுகின்றன அல்லது பொதுவாக இறந்துவிடுகின்றன. பட்ட மாத்திரத்தில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் ஆற்றல் இந்த உயிரினத்திற்கு மாத்திரம்தான் இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

  இவற்றின் உணவு பெரும்பாலும் இதரவகை மீன்கள் மற்றும் தவளைகளாகும். இருப்பினும் கூட இவை காடுகளின் பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை நன்றாக உண்ணக் கூடியவை. பருவகாலத்தில் பெய்யும் மழையினால் அமேசான் ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளப் பெருக்கினால் ஆற்று நீர்மட்டம் உயர்ந்து அடர்ந்த வனப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதனால் இவை காடுகளினுள் பயணித்து பழங்கள் மற்றும் விதைகளை நன்கு உண்ணுகின்றன. இந்த பருவத்தில்தான் மரங்களிலிருந்து அதிகப் படியாக பழங்கள் விழுகின்றன.

  எலக்டிரிக் ஈலின் உடல் அமைப்பும் அதன் மின் உறுப்புகளைப் பற்றிய ஓர் விளக்கப் படம்.

  எலக்டிரிக் ஈலின் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் அவற்றின் உடல் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியிலேயே அமைந்துள்ளன. மிஞ்சிய பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் மின்சார அமைப்பு ஒரு பேட்டரியின் அமைப்பை முழுதும் ஒத்திருக்கின்றன. பேட்டரியின் நேர் எதிர் துருவங்களைப் போன்றே இவற்றிற்கும் இருதுருவங்கள் அமையப் பெற்றுள்ளன. மின்சாரம் பாய்ந்து செல்ல இருதுருவங்கள் இல்லையெனில் மின் சுற்று நிறைவு பெறாத நிலையில் மின்ணோட்டம் முழுமைப் பெறுவதில்லை. இவற்றின் தலைப்பகுதி நேர் துருவம்(பாஸிடிவாகவும்) அதன் வால் பகுதி எதிர் துருவம்(நெகடிவாகவும்) அமைந்து மின்சாரம் பாய்ந்து செல்ல வகைச் செய்கின்றன. இவை இரண்டு வித்தியாசமான வெவ்வேறான மின்சார உற்பத்தி உறுப்புகளைப் பெற்றுள்ளன. ஒன்று சாக்ஸ் (Sacks) என்றழைக்கப்படும் உறுப்பு. சாக்ஸ் என்றழைக்கப்படும் உறுப்பின் மூலம் மிகக் குறைந்த அளவாக 5 முதல் 10 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இந்த குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் அவற்றின் சுற்றுப் புறங்களுக்கு அனுப்பி மற்ற ஈல்களுடன் தொடர்பு கொள்ளவும், அவை இடம் பெயர்ந்து செல்லவும் பயன்படுத்துகின்றன. மேலும் இதனைக்கொண்டு இரையின் இருப்பிடத்தைப்பற்றிய துப்பு அறியவும் இவைகளினால் பயன்படுத்தப்படுகின்றது.

  அடுத்த உறுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று முக்கிய சேமிப்பு மின்கலம் (main batary) ஆகும். அடுத்து வேட்டை உறுப்பு (hunter organ) ஆகும். இரண்டும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கவும் அதை தேவையின் போது வெளிப்படுத்தவும் உதவுகின்றன. 1938ம் ஆண்டு நியூயார்க் உயிரியல் பூங்காவின் பொருப்பாளர் டபிள்யூ. கோட் (W.Coate) அவர்களினாலும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியலார் ஆர்.டி.காக்ஸ் (R.T.Cox) இருவரினாலும் இணைந்து செய்யப்பட்ட ஒரு சுவாரசிய ஆராய்சியில் வித்தியாசமான சில அம்சங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் எலக்டிரிகல் ஈல் வாழக்கூடிய சூழ்நிலையிலேயே ஒரு நெகடிவ் மின் கம்பியுடன் இணைந்த 2 வோல்ட் நியான் பல்புடன் இணைத்தபோது அந்த பல்பு எரியத்துவங்கியது. மேலும் வெளிப்புறத்திலிருந்து மின்சாரத்தை அதில் இணைத்தபோது அவை சீண்டப்பட்டு தனது மின்சாரத்தை மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படும் அமைப்பிலே ஒரு ஸ்பீக்கரைப் போன்று சத்தத்துடன் வெளிப்படலாயிற்று. அந்த சத்தம் நன்கு கேட்டக் கூடிய வகையிலே அமைந்திருந்ததைக் கண்டார்கள். அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட வோல்ட் மீட்டர் 500 வோல்ட் மின்சாரத்தை வெளியிட்டதை அறிந்தார்கள்.

  இறந்த 9 மணி நேரத்திற்குப் பிறகும் மின் அதிர்வைத் தரும் பயங்கரம்.

  இவற்றின் மின் திறன் இவற்றின் வயது மற்றும் இவற்றின் அளவிற்கு ஏற்றார்போல் அளவில் வேறுபடுகின்றன. இவற்றின் வயது ஏற ஏற இவற்றின் மின் ஆற்றல் திறனும் அதிகறித்துச் செல்லுகின்றது. இவற்றின் உடலில் மின்சார உற்பத்தியின் திசுக்கள் வித்தியாசமான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எலக்டிரோசைட் (electro cytes) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஏறக்குறைய இவற்றின் எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை அமையப் பெற்றுள்ளன. இவற்றின் ஒரு எலக்டிரோசைட் 0.15 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. இவைகளின் ஒருங்கிணைந்த முழுத் தொகுப்பே 650 வோல்ட் மின்சாரமாகும். இவை மீனின் அளவிற்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுகின்றன.

  ஏலக்டிரிக் ஈல்கள் எல்லா நேரத்திலும் முழு மின் ஆற்றலையும் பிரயோகம் செய்வதில்லை. இவை தன் ஆற்றலைப் பயன்படுத்தாத சமயங்களில் ஒன்வொன்றின் மின்திறனும் 0.8 வோல்டான நிலையில் சம நிலையாயிருக்கும். இந்த எலக்ட்ரோசைடின் வெளிப்புறம் (+) நேர்த் துருவமாகவும் அதன் உட்புறம் (-) எதிர் துருவமாகவும் அமையப் பெற்று உபயோகத்தின் போது இவ்விரு துருவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உயர் மின் அழுத்தம் செலுத்தக் கூடிய முறையிலே அமையப் பெற்றுள்ளன. இவை உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாது இறந்த 9 மணி நேரத்திற்கு பிறகும் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தினால் மின் அதிர்வை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.

  எலக்டிரோசைட் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்தொகுப்பை ஏற்படுத்தக் கூடிய விளக்கப் படம்.

  எலக்டிரோசைட் உபயோகம் இல்லாத சமயங்களில் அவற்றின் அமைப்பு கீழ் கண்ட நிலையில் அமையப் பெற்றிருக்கும்.

  மின்சாரத்தை பிரயோகம் செய்யும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சாரத் தொகுப்பை ஏற்படுத்தி உயர்ந்த மின் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது அவற்றின் நிலை.

  மிக அதிசய பயணம்
  எலக்டிரிக் ஈல் ஆற்று நன்னீரில் வாழக்கூடியதாக இருப்பினும் கூட இவைகள் குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன. இவை ஏன் தங்கள் வாழும் இடத்தை விடுத்து கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன என்பதற்கு இதுவரை சரியான காரணம் அறிவியல் அறிஞர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை சரகாஸ்ஸோ(saragasso) கடலிற்கு பயணித்து கடலின் மிக ஆழத்தில் முட்டையிட்டு தங்கள் வாழுமிடத்திற்கு திரும்பி வந்து வாழ்க்கையைத் தொடருகின்றன. அதன் பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் வளைகுடா நீரோட்டத்தினோடு (gulf stream) தங்கள் பயணத்தை தொடருகின்றன. இந்த சிறிய லார்வாக்கள் ஒரு வருடக் காலத்தில் பயணித்து அல்லது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு வட அமெரிக்காவின் கடற்கரையையும், முன்று ஆண்டுகளில் ஐரோப்பாவையும் அடைகின்றன. பின்னர் இவை வளைகுடா நீரோட்டத்தினால் திரும்பி தங்கள் பெற்றோர் வாழும் தென் அமெரிக்காவின் ஆற்று முகத்துவாரங்களை அடையும் போது இவை உருவத்தில் எலக்டிரிக் ஈலின் உருவத்தை அடைகின்றன. பின்னர் இவை ஆறுகளுக்குத் திரும்பி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. மீண்டும் அவை பருவத்தை அடைந்து முட்டையிடும் காலம் வரை அங்கே கழித்துவிட்டு முட்டையிட கடலின் உப்பு நீரை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. இதுவே இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியாகும்.

  இவை பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சரியாக தங்கள் பூர்வீக இடத்தை தங்கள் பெற்றோர் வாழும் இடத்தை அடைவதென்பதான இத்தகைய ஆற்றல் பகுத்தறிவுடன் படைக்கப்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம் இல்லை என்ற நிலை இருக்கும் போது இந்த அற்புத அதிசய உயிரினத்தின் செயலின் வெளிப்பாடு இறைவனின் வல்லமையின் சான்றைப் பறைச்சாற்றும் நிகழ்சிதான் என்பதில் அறிவுடைய மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் இயற்கையின் தேர்வான (Natural Selection) டார்வினின் கோட்பாட்டை தகர்த்தெறியக் கூடிய ஆதாரங்களாகும். இத்தகைய இறைவனின் சான்றுகளைக் கொண்டு நேர்வழிப் பெற்று, இறைவனின் அழைப்பையும் அவரது தூதரின் அழைப்பையும் ஏற்று பதிலளிக்கூடியவர்களுக்கு அழகிய தங்குமிடம் இறைவனால் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. இதை தவிர்த்து மற்ற எந்த வழியில் சென்றாலும் வெற்றிக் கனியை அடைய முடியாது என்பதை விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.

 11. கிளீட்டஸ் – இன்று வாணி, கிளீட்டஸ் இருவரும் இன்னொரு சுவையான மீன் உணவு வகையின் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம்.
  வாணி – ஆமாம், இன்று புளிப்பு சுவை கொண்ட மீன் உணவு வகை ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
  கிளீட்டஸ் – தேவையான பொருட்கள் பற்றி முதலில் தெரிவிக்கவும்.
  வாணி – சரி

  வாணி – தக்காளிப்பழம் 2
  ஆற்று மீன் 1
  தக்காளி சாஸ் 150 மில்லி லிட்டர்
  சமையல் மது 2 தேக்கரண்டி
  வெங்காயம் 10 கிராம்
  இஞ்சி 10 கிராம்
  பூண்டு பற்கள் 5
  சர்க்கரை ஒரு தேக்கரண்டி
  உப்பு 5 கிராம்
  சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி

  கிளீட்டஸ் – முதலில் ஆற்று மீனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். உதன் உள்உறுப்புகளை முற்றிலும் நீக்கவும். பிறகு, கவனமாக எலும்புகளையும் நீக்க வேண்டும். மீனை சிறிய துண்டுகலாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  வாணி – தக்காளிப்பழங்களை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, அவற்றை சரியான அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் இஞ்சியையும் நறுக்கிக்கொள்ளுங்கள்.

  கிளீட்டஸ் – தயாரிக்கப்பட்ட மீன் துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் வையுங்கள். அதில் 2 தேக்கரண்டி சமையல் மது, பாதி அளவுடைய இஞ்சி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கிளறவும். சுமார் அரை மணி நேரம் அப்படியே வையுங்கள்.
  வாணி – வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில் சமையல் எண்ணெயை ஊற்றவும். 15 வினாடிகளுக்குப் பின், பூண்டுபற்களையும் எஞ்சிய இஞ்சியையும் அதில் கொட்டி வதக்கவும். பூண்டுபற்களின் மணம் வந்த பிறகு, தக்காளிப்பழ துண்டுகளை வாணலியில் கொட்டி வதக்கவும். விரைவில், தக்காளிப்பழ சாறு காணப்படலாம். இப்போது, வாணலியை மூடி வைக்கலாம். மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வேகவைத்த பிறகு, உப்பை அதில் சேர்க்கலாம்.

  கிளீட்டஸ் – வேறு ஒரு வாணலியை அடுப்பின் மீது வைக்கவும். அதில் 300 மில்லி லிட்டர் தண்ணீரை ஊற்றவும். வேகவிடுங்கள். பிறகு, வாணலியில் தக்காளி சாஸை ஊற்றவும். முன்பு தயாரிக்கப்பட்ட தக்காளி சூப்பையும் அதில் ஊற்றலாம். இந்த வாணலியில் வெங்காயத்தையும் சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மிதமான சூட்டில் தொடர்ந்து வேகவிடுங்கள்.

  வாணி – பாத்திரத்திலுள்ள மீன் போடிகளை வெளியே எடுக்கவும். சூப் தயாரிக்கப்பட்ட பின், மீன் துண்டுகளை அதில் கொட்டலாம். கொஞ்சம் கிளறவும். பெரிய சூட்டில் மீன் துண்டுகளின் நிறம் விரைவில் மாறும். அப்போது, மிதமான சூட்டில் தொடர்ந்து சுமார் 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
  கிளீட்டஸ் – நண்பர்களே, இன்றைய புளிப்பு சுவையான மீன் உணவு வகை தயார்.

  வாணி – நிகழ்ச்சியின் இறுதியில் சீன மக்கள் விருந்தினரை உபசரிப்பது பற்றி எடுத்துக் கூறுகின்றோம்.
  கிளீட்டஸ் – சீன மக்கள் விருந்தோம்பல் மிக்க மக்கள் என்று கூறலாம்.
  வாணி – ஆமாம். பொதுவாகக் கூறின், விருந்தினர்களை வீட்டுக்கு அழைப்பதற்கு முன், வீட்டை நன்றாக சுத்தம் செய்து, அதிக உணவு பொருட்களை தயாரிக்கின்றோம்.
  கிளீட்டஸ் – தவிர, சீன மக்கள் ஒரு வட்ட மேசையில் விருந்து அளிப்பது வழக்கம்.

  வாணி – ஆமாம், இந்த வட்டம் வாழ்க்கையில் இன்பம், வெற்றி மற்றும் முழுமை என்பதைப் பொருட்படுத்துகின்றது. மேலும் சாப்பிடும் போது உணவுப்பொருட்களை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றோம். எமது நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் உணவு வகைகள் எல்லாம் 3 அல்லது 4 பேருக்கு போதுமானதாக இருக்கும் என்பதை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறிப்பிட விரும்புகின்றேன்.

  கிளீட்டஸ் – சீன மக்கள் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றவராவர். நேயர்கள், சீன உணவு வகைகள் பற்றி மேலும் அறிய வேண்டுமானால் மறவாமல் தொடர்ந்து எமது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழுங்கள்.

 12. தேவையான பொருட்கள்:

  வஞ்சிர மீன் – 750 கிராம்
  சின்ன வெங்காயம் – ஐம்பது கிராம்
  கறிவேப்பிலை – 2 கொத்து
  சீரகம் – கால் டீ ஸ்பூன்
  வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
  தக்காளி – 2
  பச்சை மிளகாய் – 5
  புளி – கைப்பிடியளவு
  மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
  எண்ணை – 4 டேபிள் ஸ்பூன்
  வர மிளகாய் – ஏழு
  மல்லி விதை – ஒரு டேபிள் ஸ்பூன்
  சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
  உப்பு – தேவையான அளவு

  செய்முறை:

  முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுளாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்க வேண்டும். வர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்க வேண்டும். வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்க வேண்டும்.

  புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

  பின் மீன் துண்டங்களைப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக கிண்டி விட வேண்டும்.

 13. நூறு ஆண்டுகள் வாழும் மீன்!
  என்ன வியப்பா இருக்கா? எங்கேயாவது மீன் நூறு வருடங்களுக்கு வாழ முடியுமான்னு நினைக்குறீங்களா?

  நமக்கு `கெண்டை’ மீன் பற்றி தெரிந்திருக்கும் அதில் ஒருவகை தான் இந்த `சாதாக் கெண்டை’ இந்த மீன், உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.

  இந்த மீனின் உலக உற்பத்தி, வருடத்துக்கு சுமார் 27 லட்சம் டன்கள்.

  சீக்கிரத்திலேயே இனமுதிர்ச்சி பெற்று, தானாகவே இனப்பெருக்கமும் செய்கிற இந்த சாதாக்கெண்டையை, தூண்டல் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்ய வைக்க முடியுமாம். எல்லா வகையான உணவுப் பொருள்களையும் இது சாப்பிடும்.

  அதேமாதிரி, நீரிலுள்ள சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தன்னையும் மாற்றிக் கொண்டு வாழும்.

  இந்த மீனின் தலையை வெட்டி எடுத்தாலும், கொஞ்ச நேரத்துக்கு இதனால் செயல்பட முடியும். ஏறக்குறைய நூறு வருடங்கள் வரை உயிர் வாழும் வல்லமை படைத்தது இந்த மீன்கள்.

  இதன் உள்ளினங்களில் ஒன்றான `சிப்ரினஸ் கார்ப்பியோ’வுக்கு செதிள்கள் கிடையாது. அதனால் அந்த மீனை `தோல் கெண்டை’ என்று அழைக்கிறார்கள்.

 14. மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

 15. கர்ப்பிணிப்பெண்கள் மீன் அதிகம் சாப்பிட்டால் நல்லது.
  கர்ப்பிணிப்பெண்கள் மீன் அதிகம் சாப்பிட்டால். அது வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

  அமெரிக்காவில் ஸ்டன் நகரில் உள்ள ஹாவார்டு மருத்துவ பள்ளியின் டாக்டர் .எமிலி ஓக்கேன் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மீன்களின் உள்ள ஒமேகா -3 என்ற சத்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது. 341 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.

  இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்வதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது தமிழகத்தில் கர்பிணிப்பெண்களுக்கு மீன் கறி சாப்பாடு தரபட்டுள்ளதற்கு பல்வேறு சான்றுகள் இன்றும் பல பாட்டிமார்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

  மேலைநாடுகளில் அரசாங்கம் பல கோடிகள் செலவுசெய்து மீன்கள் இருக்கும் நீர் நிலைகளிலிருந்து (கடல் சாராத) நீர் மற்றும் மீனை எடுத்து சோதனை செய்து பாதரசத்தின் அளவை கண்டுபிடித்து தன மக்களுக்கு எந்த நீர்நிலையின் மீனை உண்ணலாம், அல்லது உண்ணக் கூடாது என தெளிவுபடுத்துகிறது. ஆனால் இயற்கையிலேயே நல்ல வளம் நிறைந்த நமது நீர்நிலைகளில் இருந்தி பிடிக்கப்படும் மீன்களுக்கு இத்தகைய சோதனைகள் தேவையில்லை என்பதுதான் முற்றிலும் உண்மை.

  அதனால் நமது ஊர்களில் கிடைக்கும் மீனை யாரும் விருப்பப்பட்டால், தைரியமாக சாப்பிடலாம். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் அங்கு கிடைக்கும் கடல் மீன்கள் அல்லாத மற்ற நீர்நிலைகளிலிருந்து (ஏரிகள், குளங்கள்) பிடிக்கப் பட்ட மீன்களை அரசு தரச்சான்றிதல்களை சரிபார்த்து வாங்கி சாப்பிடவும்.

 16. அதிக மீனை உண்பதும் மாரடைப்பைத் தூண்டலாம்!
  சூடை, மக்ரல், லக்ஸ் கொழுப்புக் கூடிய மீன்கள் ஆபத்தானவை!
  சல வருத்தம் உள்ளவர்களுக்கு மீன் எண்ணெய் நலம் தருகிறது..

  இறைச்சியை உண்பதைவிட மீன் உண்பதே மேல், எவ்வளவு மீன் சாப்பிட்டாலும் உடலுக்கு பாதகமில்லை என்று நம்மிடையே பேசப்படும் கருத்துக்களுக்கு ஆப்பு வைக்கும் புதிய ஆய்வு கொலன்டில் இருந்து வெளியாகியுள்ளது. 55 வயதிற்கு மேற்பட்ட மொத்தம் 5300 ஆண், பெண் இரு பாலரிடையேயும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  இரத்தச் சுற்றோட்டத்திற்கு மீன் உண்ணுவது நல்லது ஆனால் மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு போன்றவற்றை தடுப்பதற்கு மீன் உணவு துணையாக அமையும் என்ற கருத்தை இந்த ஆய்வு மறுத்துள்ளது. மீன் உணவில் மாரடைப்பைத் தடுக்கும் அடிப்படைகள் இல்லை என்றும் கூறுகிறது. மேலும் மீன் உணவில் ஒமேகா – 3 என்றும் கொழுப்பு காணப்படுகிறது. இது மாரடைப்பை தூண்டும் தன்மை கொண்ட கொழுப்பு என்றும் கூறுகிறது. மக்ரல், சூடை, லக்ஸ் போன்ற மீன்கள் கொழுப்புக் கூடிய மீன்கள் என்றும் மாரடைப்பை தூண்டும் தன்மை இவற்றில் அதிகம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் பல பாதகமான நோய்களை தூண்டுவதாகவும் இம்மீன்களின் கொழுப்பின் தாக்கம் இருக்கும்.

  அதேவேளை மீன் உணவை தவிர்க்க வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்தவில்லை. வாரத்திற்கு இரண்டு தடவைகள் மீனை உண்ணும்படி வலியுறுத்துகிறது. மேலும் தினசரி மீனைச் சாப்பிடுவோர் அதை குறைந்தளவில் ( 20 கிராம் ) சாப்பிடும்படியும் கூறுகிறது. மேலும் இந்த ஆய்வில் 469 நீரிழிவு நோய் உள்ளவர்களும் இருந்துள்ளார்கள். இவர்களுக்கு மீன் உணவு சிறந்ததாக இருந்துள்ளது. இவர்களில் 42 வீதமானவர்களுக்கு மீன் உணவு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்துள்ளது. மேலும் மீன் எண்ணை மாத்திரைகளை இவர்கள் சாப்பிடுவதும் இவர்கள் வருத்தத்திற்கு நலம் தரும் என்றும் கூறுகிறது. அதேவேளை மீனை உண்பவரும், உண்ணாதவரும் அருகருகாக வைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமாக மீன் உண்பவர் மாரடைப்பை அதிகம் சந்திக்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

  மேலும் இந்த ஆய்வு குறித்து கருத்துரைத்த டென்மார்க் நலவாழ்வு உணவுப்பிரிவினர் மீனைச் சாப்பிடுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்ற செய்தி இதுவரை தமது ஆய்வுகளில் இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வறிக்கை யூரோ ஜர்னலில் வெளியாகியுள்ளது. கொலன்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் வைத்தியர் மரியானா கிளைன்றஸ் தலைமையிலான வைத்தியர் குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

 17. தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியாகவிருக்கும் இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்துக்கள் அவரது அரசியல், மற்றும் சமூகப் பொறுப்புணர்வைப் பிரதிபலிக்கவேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர். அவர் 1981-ம் வருடம் வார்சா பல்கலைக் கழகத்துக்கு தமிழ்ப் பேராசிரியராக பணி புரியச் சென்றார். அவர் சமூகப் பொறுப்புணர்வுள்ள எழுத்தாளர் என்றேன். அது பல பரிமாணங்களில் பொருள் பெறும். அவர் சிறு கதைகளும், நாவல்களும், உடன் நிகழ் கால அரசியல், சமுக நிகழ்வுகளைப் பற்றிப் பேசும். அவ்வாறு பேசுவது, திராவிட கட்சிகளின் அரசியலை மாத்திரம் அல்ல, கல்வி ஸ்தாபனங்களைச் சேர்ந்தோரின் பந்தாக்கள், சுரணையின்மை, பழமைவாதங்களின் வேஷதாரித்தனம் போன்ற, அவரது பரிகாசத்துக்கு எளிதில் இரையாகும் எதையுமே தான். அவர் வாழ்க்கைப் பார்வையில் பிறந்த தன் ஆழ்ந்த நம்பிக்கைகளின் உந்துதல்களால், இக்கேலிகள் பிறக்கின்றனவா அல்லது அந்தந்த கணத்தில் தன் கேலிக்கு எவையெல்லாம் சுலபமாக இரையாகின்றனவோ அவற்றைத் தான் கிண்டல் செய்கிறாரா என்றால் அது நம்மை யோசிக்க வைக்கும்.

  சுமார் இருபது வருடங்களுக்கும் மேலான அவர் தம் எழுத்து வாழ்க்கையில் அவர் தாண்டி வந்த கட்டங்கள் பல. மார்க்ஸிசத்துக்கு எதிரான ஒரு காலம், பின் ஃப்ராய்டிஸம், பின் எக்ஸிஸ்டன்ஸியலிஸம், பின் இப்போது ஒருமாதிரியான, நன்கு வரையறை செய்யப்படாத, அல்லது ஏதோ தன் போக்குக்கு வரையறை செய்து கொண்ட ஒரு மார்க்ஸிஸம், இப்படியான அவரது பயணம். அவர் போலந்துக்குச் செல்வதற்குச் சற்று முன் வரை, போலந்தில் லெக் வாலெஸாவின் தலைமையில் நடந்து கொண்டிருந்த தொழிலாளர் போராட்டத்திற்கு சாதகமான அபிப்ராயங்களை அவர் கொண்டிருக்கவில்லை. அவருடனான நேர் பேச்சுக்களில் அவர் அப்படித்தான் தெரிய வந்தார். இதற்கெல்லாம் மேலாக, அவருடனான உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். கேலியும் கிண்டலுமாக உதிரி கதைகள், சம்பவங்கள் நிறைய உதிரும்.

  எது எப்படியானாலும், இப்படி எதையும் பரிகாசம் செய்யும் எழுத்து கிடைக்குமானால், நிகழ் கால தமிழ் இலக்கியத்துக்கு வேறென்ன வேண்டும்? ஒரு மார்க்சீய வாதி, அது எந்த நிறம் கொண்ட மார்க்ஸீயமாக இருந்தால் தான் என்ன, தன் சிறுகதைகள், நாவல்களில், தன் உடன் நிகழ் கால அரசியல் சமூக நிகழ்வுகளைக் களமாகக் கொள்ளும் இயல்பினர் என்பது எல்லோரும் அறிந்தது, போலந்து நாடே கொந்தளிப்பில் இருக்கும் இந்த சமயத்தில் வார்ஸா போகிறார், அங்கு சில வருஷங்கள் தங்குவார், அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுகளை, நேரில் இருந்து சுய அனுபவமாக பார்த்து அறிவார், அந்த பரபரப்பும், கொந்தளிப்புமான நிகழ்வுகளின் சாட்சி பூர்வமான பாதிப்புகளை அவர் கட்டாயம் பதிவு செய்யப் போகும் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைக்கும். இந்த பாக்கியம் பெறாத வேறு எந்த மொழியின் இலக்கியத்தின் பொறாமைக்கல்லவா தமிழ் ஆட்படும்!

  இதெல்லாம் போக, அங்கு போலந்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வரலாற்றை, கோபர்னிக்கஸ் செய்த புரட்சிக்கு ஒப்பான ஒன்றை, மார்க்ஸீய வாய்ப்பாட்டின் படி நிகழ்ந்திருக்க வேண்டிய சரித்திரத்தின் கதியையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்ட வரலாற்றை, ஹெகலையே தலைகீழாக நிற்க வைத்துவிட்டதாகச் சொன்ன மார்க்ஸையே தலைகீழாக நிற்க வைத்துக்கொண்டிருக்கும் வரலாற்று கதியை, நேரில் காணும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்க விருக்கிறதே. எல்லாம் வேடிக்கையாகத் தான் இருக்கிறது. நினைத்துப் பார்க்க. தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை முன்னெடுத்துச் செல்லும் கம்யூனிஸ்ட் கட்சியையே எதிர்த்து நிற்கும் தொழிலாளி வர்க்கம். நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மக்கள் தம் புரட்சி உணர்வுகளை மறந்து போதையில் ஆழ்த்தி வந்த அபினி அல்லவா இந்த கத்தோலிக்க சர்ச்சுகள்? அப்படித்தானே மார்க்ஸ் நமக்குப் போதித்தார்! தொழிலாளி வர்க்கத்தின் நல்ல காலம், தோழர் ஸ்டாலின் தன்னால் முடிந்த சுமார் ஐம்பது ஆண்டு காலம் இந்த சர்ச்சின் அபினி மயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி வந்தார். இப்போது நாசம்ப்போன அந்த கத்தோலிக்க சர்ச் அல்லவா இப்போது தொழிலாளி வர்க்கத்தோடு தோளோடு தோள் உரசி அதன் புரட்சி உணர்வுகளைத் தூண்டி நிற்கிறது! பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக விளங்கும் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியுள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு துணையாக அல்லவா இப்போது அந்த சர்ச் திரும்பிவிட்டது! மார்க்ஸ் விதித்த சோஷலிஸ் வாய்ப்பாடுகள் அனைத்துக்கும் அல்லவா ஒவ்வொன்றாக சவால் விடப்பட்டுள்ளன! இந்திரா பார்த்தசாரதி மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர் தான். மார்க்ஸையும் வரலாற்றையுமே புரட்டிப் போட்டு புது வரலாறு படைக்கும் நிகழ்ச்சிகளுக்கு நேர்முக சாட்சியாக நிற்கப் போகிறாரே.

  நிச்சயமாக ஐந்து ஆண்டு காலம் போலந்தில் கழித்த பிறகு, கொஞ்ச காலம் ஹாலந்திலும், கனடாவிலும் கழிந்தது போக, இந்தியா திரும்பிய இந்திரா பார்த்த சாரதி போலந்தில் தான் சாட்சிபூதராக இருந்த நிகழ்ச்சிகளை ஆதாரித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார் தான். அது தான் ஏசுவின் தோழர்கள்; ஆனால் ஒரு ஆச்சரியமான விஷயம், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது ஆச்சரியம் அளிக்கும் விஷயமே இல்லைதான். நமக்கு ஏற்கனவே பரிச்சயமாகியுள்ள இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தின் குணங்கள் எல்லாம் எந்த மாற்றமும் இல்லாது இதிலும் அப்படியே பதிந்துள்ளன தான். இதுகாறும் அவரது நாவல்கள் எல்லாவற்றிலும் காணும் கதை சொல்லும் பாங்கும், கட்டமைப்பும் இதிலும் எவ்வித மாற்றமும் குறையுமின்றி அமைந்துள்ளது.

  நாவலில் வரும் பாத்திரங்கள் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். பிறகு அவர்கள் கலைந்து போக காட்சி வேறு இடத்துக்கு மாறுகிறது அங்கு வேறொரு செட் மனிதர்கள் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். இந்த செட் மனிதர்கள் தமக்குள் கலைந்து வேறு செட்டாக மாறி வெவ்வேறு இடங்களில் சந்திக்கிறார்கள். பேசிக்கொள்கிறார்கள். ஒரு அதிசயம் என்னவென்றால், இந்திரா பார்த்த சாரதியின் முத்திரை தரும் அதிசயம், இவர்கள் எல்லோரும் கேலி செய்கிறார்கள். ஜோக் சொல்கிறார்கள். சாமர்த்தியமாகப் பேசுகிறார்கள். அவர்கள் பேச்சில் காணும் உடனடி பதில்கள். தயக்கமின்மை. சட் சட் என பதில்கள் வரும். கிண்டல் இருக்கும். யார் எந்த ஜோக் சொல்கிறார்கள். யாரை நோக்கி என்பதெல்லாம் பிரசினையே இல்லை. தமாஷாக, சிரித்துப் பேசி பொழுது போகவேண்டும். யாரிடமிருந்தும் எந்த ஜோக்கும் வரலாம். கடைசியில் நோக்கம் என்ன? அவை ஜோக்காக இருக்கவேண்டும். நாம் சிரிக்க வேண்டும். அவ்வளவே போலும்.

  இப்பேச்சுக்களில் காணும் திருப்பங்கள், சாமர்த்தியங்கள், கேலிகள் எல்லாம் வாசகன் சோர்வின்றி படிக்க ஏதுவாகின்றன பேசப்படும் விஷயத்துக்கு ஏதும் புது விளக்கம், அர்த்தம் கொடுப்பதற்கோ, பேசுபவனின் குணத்திற்கேற்பவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லோருமே ஜோக் அடிக்கிறார்கள். சாமர்த்தியமாகப் பேசுகிறார்கள். இந்திரா பார்த்த சாரதியின் எழுத்தின் பொது குணம் இது. இந்த நாவல் ஏதும் வித்தியாசமாக இல்லை.

  சரி. இந்திரா பார்த்த சாரதிக்குள்ளிருக்கும் மார்க்ஸ் என்ன ஆனார்? அவரும் மிக பத்திரமாக எவ்வித கஷ்டமும் இன்றி இருந்து கொண்டிருக்கிறார் தான். விலாங்கு மீன் எங்காவது யார் கையிலாவது சுலபத்தில் சிக்கி விடுமா? நழுவிக்கொண்டேயிருப்பது தானே அதன் குணம்? God That Failed எழுதிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒரு காலத்தில் மார்க்ஸிஸத்தை நம்பி பின் அனுபவித்த மனவேதனைகளும் மனசாட்சி உறுத்தல்களும் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றமும் நாம் சர்ச்சித்துக் கொண்டிருக்கும் மார்க்ஸிஸ்டின் கிட்டக் கூட நெருங்கவில்லை. அல்லது ஒரு கெட்டிப்பட்ட சித்தாந்தியிடம் காணும், எந்த முரண்பட்ட நிலையிலும் சற்றும் சலனமடைந்து விடாத பாறையென கெட்டித்த முகமும் இல்லை. அந்த கெட்டித்த முகத்தின் மனம் மார்க்ஸின் வேதாகமத்தில் கொண்ட நம்பிக்கையை இன்னும் கெட்டியாகப் பிடித்திருக்கும். ஆனால் நாம் இங்கு கேட்பதோ ஒரு நடு நிலை. முதலாளித்வ மேற்கும் சரி, கம்யூனிஸ்ட் கிழக்கும் சரி, இரண்டுமே, போலந்தின் ஸ்திரமற்ற கலவர நிலையை தம் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்கின்றன.

  சரி. அப்படியே இருக்கட்டும். போலந்தில், வார்ஸா தெருக்களில், க்டான்ஸ்க் கப்பல் கட்டும் துறையில் காணும் உண்மை நிலவரம், புறவயமாகக் காணும் யதார்த்தம், மேற்கும் கிழக்கும் தம் நோக்கத்திற்குப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படும் அந்த யதார்த்தம் தான் என்ன என்று இந்திரா பார்த்த சாரதி சொல்கிறார்? விலாங்கு மீன், ஐயா, விலாங்கு மீன். நான் தான் சொன்னேனே? அது முதலில் உங்கள் வலையில் எங்கே சிக்கும்? சிக்கினால் அல்லவா பின் அதைப் பிடித்து ஆராய்வதற்கும், வேறு எதுவும் செய்வதற்கும்? ஒரு சின்ன சிராய்ப்புக் கூட அதற்கு நேராது.

  மார்க்ஸீய சித்தந்த விளக்கங்கள் இருக்கட்டும். புறவயமாகக் காணும் உண்மை நிலவரத்தை அறிய, வார்சா தெருக்களில் கால்கள் அல்லவா பதியவேண்டும். அலைய வேண்டும். க்டான்ஸ்க் கப்பல் கட்டும் துறைக்குப் போக முடிகிறதோ இல்லையோ. தெருவில் இறங்கி ஒரு சாதாரண மனிதனை, ஏதும் ஒரு தொழிலாளியை, அல்லது தெருவில் காணும் எவனையாவது சந்திக்க வேண்டும். இதையெல்லாம் தன் வகுப்பறையில் அடைந்து கிடக்கும் ஒரு பல்கலைக் கழக பேராசிரியரிடம் அதிகம் எதிர்பார்க்க இயலாது என்று சொல்லலாம். சரி. ஒப்புக்கொள்ளலாம்.

  ஆக, எவ்வளவு தான் மார்க்சீய சிந்தனைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராக இருந்தாலும், ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் எழுதும் நாவலில் அறிவு ஜீவிகளையும், மாணவர்களையும், மாணவர் சங்கத் தலைவர்களையும் தான் கதா பாத்திரங்களாக எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லலாம். சரி. அதையும் ஒப்புக்கொண்டாயிற்று.

  ஆனால் நாவலைப் படித்த நமக்கு இந்திரா பார்த்த சாரதி, பல்கலைக் கழகக் கட்டிடத்தின் வெளிக் கதவுகள் வரை கூடச் சென்றதாகத் தடையம் இல்லை. அவரது நேரம் எல்லாம் வார்ஸாவில் உள்ள இந்திய தூதருடனும், இந்திய தூதரைக் காண வருவோருடனும் தூதரக அலுவலர்களுடனுமே பேசுவதில் செலவழிந்துள்ளதாகத் தெரிகிறது. நாவல் முழுதும் சந்திப்புகளும் பேச்சுக்களும் கோர்க்கப்பட்ட சங்கிலியாகவும் அந்த சந்திப்புகள் அத்தனையும் தூதரகத்தில் அல்லது மதுபான விருந்துகளில் நிகழ்வனவாக இருக்கின்றன.

  இந்த நாவலில் ஒரு பெண் மாணவியைச் சந்திக்கிறோம். அவள் நம் ப்ரொஃபஸர்/நாவலாசிரியரிடம் பத்திரப்படுத்தி வைப்பதற்காக சில காகிதங்களைக் கொடுக்கிறாள். அவற்றை நம் ப்ரொஃபஸர் இந்திய தூதரகத்திடம் கொடுக்கிறார். தூதரகம் அவ்வப்போது தில்லி சௌத் ப்ளாக்கில் இருக்கும் இந்திய அரசின் வெளியுறவு இலாகாவுக்கு அனுப்பும் அறிக்கைகள் தயாரிக்க இந்த காகிதங்கள் உதவும். போலந்தில் ஏற்கனவே தங்கியிருக்கும் இன்னொரு ப்ரொஃபஸரை நம் ஆசிரியர்/ப்ரொஃபஸர் சந்தித்திருக்கிறார். இரு ப்ரொஃபஸர்களும் சந்தித்தது வார்ஸவா பல்கலைக் கழகத்தில் அல்ல, இந்திய தூதரகத்தின் மதுபான விருந்துகள் ஒன்றில். நாம் இந்த நாவலில் ஒரு சாதாரண மனிதனையும் சந்திக்கிறோம். அவன் இந்திய தூதரக வாசல் காப்போன்.

  அடிக்கடி இந்த நாவலின் கதையோட்டத்தில் வோட்கா அல்லது கொன்யாக் கண்ணாடிக் குப்பிகளின் ணங் ணங் என்ற ஓசைகள் கேட்டவண்ணம் இருக்கும். அது தான் இந்த நாவலின் பின்புலத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும் தம்புரா ஸ்ருதி மாதிரி. இந்த மாதிரியான காட்சி அமைப்பில், போலந்து வாழ்க்கை இந்த நாவலில் எங்காவது காணக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது அதிக பட்சம். முதலில் வார்ஸவா பல்கலைக் கழகத்தையே கூட இந்த நாவலில் கண்டுபிடிப்பது அரிதான ஒன்றாகியுள்ளது. இவ்வளவுக்கும் கிட்டத் தட்ட ஐந்தாண்டுகள் நம் ஆசிரியர் அங்கு தங்கியிருந்த போதிலும்.

  சிறுமலை நரஸிம்ஹாச்சாரி தாத்தாச்சாரி தான் (சுருக்கமாக டி.என்.டி. என்று அழைப்பார்கள்)வெகு ஆண்டுகளாக போலந்திலேயே தங்கிவிட்ட ப்ரொஃபஸர். அவர் ஒரு போலிஷ் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டவர். இந்த ப்ரொஃபஸர் தன் போலிஷ் மனைவியுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஒரு சமயம், அவரது மனைவி கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலையும் செய்யப்பட்டவள் என்று கதையில் சொல்லப்படுகிறது. இந்தக் காரணத்தால் தான் ப்ரொஃபஸரின் பெண் ஆஷாவுக்கு இந்தியா என்று சொல்லக் கேட்டாலே, ஒரே வெறுப்பு. பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆஷா இந்தியாவுக்கு வருகிறாள். ப்ரொபஸரின் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வந்து ப்ரொஃபஸரின் குடும்பத்தினருடன் பரிச்சயம் கொள்கிறாள். ஆஷா தங்கியிருந்த அந்த இரண்டு மாத காலத்தில், கும்பகோணத்தில் வசிக்கும் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் செல்கிறாள். இந்த இரண்டு மாத கால வாசத்தில் ஆஷா, அந்த வைஷ்ணவ ஆசாரம் நிறைந்த குடும்பத்தில் புழங்கும் தமிழைக்கூட கற்றுக்கொண்டு, ப்ரொஃபஸரின் விதவை மூத்த சகோதரியுடன் சம்பாஷிக்க முடிகிறது. ப்ரொஃபஸரின் இந்த விதவை மூத்த சகோதரி தன் வாழ்க்கையில் கும்பகோணத்தை விட்டு வேறு எங்கும் நகர்ந்தவள் இல்லை. போலந்திலேயே பிறந்து வளர்ந்த அந்த ஆஷாவுக்கு, இந்தியாவையே வெறுத்த அந்த ஆஷாவுக்கு வைஷ்ணவ ஆசாரம் மிகுந்த இந்த அத்தையை மிகவும் பிடித்துப் போகிறது. அந்த ஆசாரம் மனித நேயத்தில் தோய்ந்திபப்தையும் உணர்கிறாள் ஆஷா.

  அந்த குடும்பத்தில் இன்னுமொரு விதவைப் பெண் இருக்கிறாள். அது அந்த அத்தையின் பெண். அவளைத் தவிர வைஷ்ணவ ஆசாரம் மிகுந்த அந்த குடும்பத்திலும் வெளியிலும் உள்ள அத்தனை பேரும் ஆஷாவிடம் மிகுந்த வாத்ஸல்யமும் ஒட்டுதலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவள் போலந்திலிருந்து வந்திருக்கிறவள். எப்போதோ தூர தேசத்துக்குப் போய் பிறகு ஒரு தலைமுறைக்கும் மேலாக கும்பகோணத்தைத் திரும்பிக் கூட பார்க்காத, டி.என்.டி. கட்டிக் கொண்ட போலந்து காரியின் பெண அவள். இதெல்லாம் நாவலில் தான் நிகழ்வது சாத்தியம். நிஜ வாழ்க்கையில் ஒரு தென்கலை வைஷணவன் வடகலை வைஷ்ணவ குடும்பத்தில் பெண் எடுத்தால், இரு தரப்பினருமே ஜாதி ப்ரஷ்டம் செய்யப்படுவார்கள். முதலில் அவர்கள் இது பற்றி நினைத்தும் பார்க்கமாட்டார்கள். அவ்வளவு தீவிரமாக தம் பழம் ஆசாரங்களை அனுஷ்டிப்பவர்கள் அவர்கள்.

  நாவலாசிரியரின் குரலை பிரதிநிதித்வப் படுத்தும் ஆஷா மிகுந்த பாசத்துடன் அணைத்துக்கொள்ளும் ஆசாரம் ஒர் மார்க்ஸிஸ்டின் தொண்டையில் சிக்கி மிகவும் வேதனைப்படுத்துவே செய்யும். அதிலும் ஆசிரியரின் இன்னொரு படைப்பான நந்தன் கதை என்னும் நாடகத்தில் அந்த ஆசாரம் தான் ஆசிரியரின் தீவிர கண்டனத்துக்குள்ளாகிறது. ஒரே ஒரு வித்தியாசம். ஒன்று வீர வைஷ்ணவ ஆசாரம். மற்றது வீர சைவ ஆசாரம்.

  சிலர் வாதிடலாம்: நாவல் என்பது என்ன? அது தனி மனித உறவுகளைப் பற்றியதல்லவா? அதில் வர்க்க ரீதியான அலசல்களுக்கும் பொதுமைப்படுத்தலுக்கும் எங்கு இடம்? எங்கு மனித உறவுகளில் நேசமும் பாசமும் துளிர்க்கின்றனவோ, அங்கு அவற்றிற்கு எதிராக அரசியல் சார்ந்த, மதம் சார்ந்த சித்தாந்தக் கெடுபிடிகள் நிற்க முடியுமா என்ன? உதிர்ந்து தவிடு பொடியாகிவிடாதா? என்று கேட்கலாம். கேட்கலாம் தான். ஆனால் இந்தக் கேள்விகள் இந்திரா பார்த்தசாரதியிடமிருந்து வரக் காத்திருக்கிறேன். அது நிகழ் ந்திருக்கக் கூடுமானால், இந்த நாவலில் போலிஷ் வாழ்க்கை காணக் கிடைத்திருக்கும். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ, சாமர்த்தியான உரையாடல்கள், ஜோக்குகள், வோட்கா மதுக் குப்பிகள் உரசிக்கொள்ளும் ‘ணங்’, ‘ணங்’ ஓசைகள்.

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s