அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. சிந்திக்கும் திற‌னிருக்கிறதா உன்னிட‌ம்? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

இருக்கும் அறிவைத்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி வளர்க்க முடியும். இல்லாத அறிவைப் பயன்படுத்தவோ, வளர்க்கவோ யாராலும் முடியாது.

உன்னைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. உன் பாக‌ங்க‌ள் எவை?
2. உன்னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. உன்னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. உன்னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. உன் உருக்க‌ள் எவை?
6. உன‌க்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. உன்னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

என்னைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. என் பாக‌ங்க‌ள் எவை?
2. என்னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. என்னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. என்னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. என் உருக்க‌ள் எவை?
6. என‌க்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. என்னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

ஒரு ஆணைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அவ‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அவ‌னிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. அவ‌னோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. அவ‌னைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அவ‌ன் உருக்க‌ள் எவை?
6. அவ‌னுக்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. அவனால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

ஒரு பெண்ணைப் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அவ‌ளின் பாக‌ங்க‌ள் எவை?
2. அவ‌ளிட‌மிருப்ப‌து, ம‌ற்ற‌ எவ‌ரிட‌ம் இருக்கிற‌து?
3. அவ‌ளோடு இணைந்திருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
4. அவ‌ளைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அவ‌ளின் உருக்க‌ள் எவை?
6. அவ‌ளுக்குப் ப‌திலாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் யார்?
7. அவ‌ளால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

2832408373_da6de471ae

ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பதெவை என்பதைக் கணிக்கமுடியாதா? ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பதெவை என்பதைக் கணிக்கமுடியும். ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பதெவை? ஒன்றைப்பற்றி ஒருவன் அறியவிருப்பவை:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

பள்ளிக்கும் கல்லூரிக்கும் பல ஆண்டுகள் சென்று, பல புத்தகங்களில் பல பாடங்களை பல ஆசிரியர்கள் வழிகாட்டப் படித்து, விழுந்து விழுந்து மனப்பாடஞ் செய்து, பல தேர்வுகள் எழுதி, விடிய விடிய விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்து, சிந்தித்து, ஒன்றைப்ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.
இவை த‌விர‌, ஒன்றைப்ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌தெவை?

“மெய்ப்பொருள் அறிவல்ல! மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு!”


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.          (குறள் எண் : 423)

ஒரே விஷயத்தை பல விதங்களில் கூறமுடியும். கூறிய விதம் புதிது என்பதால் கூறிய விஷயமும் புதிது என்று அர்த்தமல்ல. ஒன்றைப் பற்றி மேற்கூறிய விஷயங்களை வெவ்வேறான வார்த்தைகளைக்கொண்டு வெவ்வேறான புதிய விதங்களில் கூறமுடியும். ஒன்றைப் பற்றி ஒரு விஷயத்தை ஒருவர் புதுவிதமாகக் கூறினாலும், அவர் கூறும் விஷயம் புதிதுதானா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அறியப்படும் விஷயமும் பொருளுக்குப் பொருள் மாறுபடுகிறதா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்! அறியப்படும் விஷயங்கள் பொருளுக்குப் பொருள் மாறக்கூடியதல்ல. You will discover the same laws of nature in anything and everything! இது குறித்து மேலும் விவரங்கள் வேண்டுவோர் KNOWLEDGE EXPANSION MANUAL-ஐ பார்க்கவும்.

ஒரு விஷயத்தைக் கூற வெவ்வேறான வார்த்தைகள்:

1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?

பாகம், பகுதி, பிரிவு, அங்கம், அங்கத்தினர், உறுப்பு, உறுப்பினர், கட்டம், பக்கல், கூறு, காண்டம், மூலகம், மூலகத்துவம், பின்னம், துண்டு, துணுக்கு, உள்ளடங்கிய பொருள், வகுப்பு, பகுப்பு, துளிமம், பங்கு, துண்டம், வெட்டுத் துண்டம், பகவு, துறை, உள்ளடக்கமாகக் கொண்டிரு, உட்கூறாகக் கொண்டிரு, உட்பொதி, கால அளவு, பருவம், Part, Component, Element, Factor, Fraction, Fragment, Ingredient, Member, Quantum, Section, Sector, Segment, Division, Piece, Portion, Compartment, Region, Domain, Unit, Phase, Particular, consists of, comprise, contains, includes, content, constituents, be a part of, not whole, period

2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?

‘எங்கிட்ட இருப்பது வேற எவங்கிட்ட இருக்கு’ என பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ‘அவங்கிட்ட இருப்பது என்னிடமில்லையே’ என சிலர் புலம்பக் கேட்டிருக்கிறோம். இது ஒப்பிடுதல். எங்கிட்ட இருப்பது வேற எத்தனை பேரிடம் இருக்கு? இது ஒப்பிட்டபின் எண்ணிக் கணக்கிடல். பரவல், ஒப்பீடு, ஒத்துப்பார், ஒப்பிடு, ஒரே மாதிரியானதென்று தெரிவி, ஒத்ததென விவரித்துரை, ஒப்புப்படிகளைத் தா, ஒப்பீடு செய், ஒப்புமை காட்டு, ஒப்பாக, ஒப்புமை, ஒத்த தன்மை, ஒப்பு, ஒத்திசைவு, ஒப்புடைமை, அமைப்பொற்றுமை, அமைப்பொப்பு, உடனொத்திசையும் பண்பு, ஒத்தவடிவ, ஒத்த, ஒப்புமையுடைய, போன்றிருக்கிற, நகலி, போலிகை, படியெடு, பிரதி, நகல், அதே மாதிரி, பிரதிமை, போன்றிருத்தல், ஒத்திருத்தல், ஒரே மாதிரியான, ஒன்று போன்ற, அதுபோலவே, ஒரேமாதிரி, ஒரே வகைமை, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே வகையான தன்மை, அதுவே போன்ற, சமன், சமம், சரிசமமான, நிகரான, சமானப் பகுதி, சமான, சமன்பாட்டுத் தத்துவம், Distribution, Abundance, Comparable, Analogy, Homology, Homologue, Clone, Copy, Analog, Analogous, Resembling, Resemblance, Alike, Similar, Same, Sameness, Identical, Equal, Similarly, Equally, Synonymous, Equivalence, Equivalent, Different, Difference, Unique, Unlike, Dissimilar, Distinct, எங்கிட்ட இருப்பது வேற எத்தனை பேரிடம் இருக்கு? How often, How frequent, How many, frequency, எண்ணிக்கை, எண்ணுதல், அளவிடல், அளவீடு [frequency = எண்ணிக்கை, எத்தனை தடவை, எத்தனை முறை]

3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?

இணைப்பு, பிணைப்பு, உறவு, தொடர்பு, தொகுத்தவரிசை, இணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு, சம்பந்தம், இணைத்தல், பிணை, தொடர் கோவை, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, கட்டு, கட்டுப்பாடு, கோவைப்படுத்து, Connectivity, Connect, Connection, Relation, Link, Bond, Bind, Associate, Attachment, interconnection, Hookup, Joining, Joint, Junction, Join, Ligament, Ligation, Relationship, Tie, Combine, Affix, Fasten, Append, Linkage, Connective, Concatenate

4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?

பாதிப்பு, தாக்கம், தாக்கு, இயக்கு, தொந்தரவு செய், அமைதியைக்குலை, உலைவுசெய், இடையிட்டுத் தடு, தொல்லைகொடு, குழப்பு, கலக்கு, கிளர்ச்சி, தூண்டு , தூண்டல், தூண்டிச் செயலாற்றுவி, Disturb, Induce, Influence, Kick, Knock, Bang, Crush, Injure, Motivate, Affect, Tamper, Disturbance, Force, push, pull, Arouse, Evoke, Perturb, Excite, Inspire, Rouse, Stimulate, Stimuli, Stimulant, Compel, Cause, Effect, Response

5. அத‌ன் உருக்க‌ள் எவை?

உரு, உருவம், வடிவம், ரூபம், மூர்த்தி, தோற்றம், படிவம், வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், சீர், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருவாக்கம், தொற்றுவித்தல், உருமாற்றம், உருவம் மாறுதல், மாற்றம், ஸ்திதி, நிலை, நிலைமை, Form, Shape, Topology, Order, reorder(=change), transformation, transition, state

6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?

‘இவ போன என்ன, இவளுக்குப் பதிலா இன்னொருத்தி சிக்கவா மாட்டா’, ‘இந்த இடம் இல்லாட்டா என்ன, இதற்குப் பதிலா இன்னொரு இடம் இருக்குமல்ல’, ‘இப்ப போன போகுது, இதற்கு பதிலா பின்னாடி செஞ்சுக்கலாம்’, ‘இந்த வேலை போனால் போகட்டும், இதற்குப் பதிலா இன்னொரு வேலை தேடிக் கொள்ளலாம்’ – மாற்று, பகரம், பதிலீடு , பதிலி, ஈடு, பதிலாள் , மாற்றாள் , மாற்றீடு செய், ஈடுகொடு, மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், இருந்தும், பகரமாக, பதிலாக, ஈடாக, அது இருந்தால் என்ன செய்வது? அது இல்லாவிட்டால் என்ன செய்வது? மற்றபடி, இல்லையெனின், நிலைமைகள் வேறானவையாயிருந்தால், அல்லது, பெயராள், பதிலாக அனுப்பு, மாற்று மருந்து, வாய்ப்பு, Substitute, Instead, Else, Instead of, Spare, Surrogate, Depute, As an alternative to, In lieu of, In place of, In preference, Either, or, otherwise, possibilities, opt, option [Note: comparison ≠ substitution]

7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

அது எதுக்கு? அவள் எதுக்கு? அவன் எதுக்கு? அது எதுக்குப் பயன்? அவள் எதுக்குப் பயன்? அவன் எதுக்குப் பயன்? அது எதுக்குத் தேவை? அவள் எதுக்குத் தேவை? அவன் எதுக்குத் தேவை? அதனாலென்ன பலன்? அதனாலென்ன பயன்? அவளாலென்ன பயன்? அவனாலென்ன பயன்? அது எனக்கு ஏன் தேவை? அவன் எனக்கு ஏன் தேவை? அவள் எனக்கு ஏன் தேவை? உபயோகம், பயன்பாடு, பயன், பலன், நற்பலன், தூர்பலன், பிரயோஜனம், அவசியம், தேவையுள்ளவனாயிரு, வேண்டு, வேண்டியிரு, வேண்டிய பொருள், நாட்டம், வேண்டப்படும் பொருள், பூர்த்தி செய், Use, useful, fulfill, need, requirement


 
ஒன்றைப்ப‌ற்றி அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள் எவையென்பதை இன்றைய ‘ஆசிரியர்கள்’ மாணவர்களுக்குப் போதிப்பது கிடையாது. ஒன்றைப்ப‌ற்றி அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள் எவையென்பதும் இன்றைய ஆசிரியர்களுக்குத் தெரியாது. கருத்துக் கோர்வையற்ற காகிதக் குப்பைகளின் தொகுப்புதான் இன்று மாணவர்களுக்குப் பாடப்புத்தகம். ஒன்றைப்ப‌ற்றி தன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள் எவையென அறியாதவன் எப்படி உனக்கு ஒன்றைப்ப‌ற்றி அறிவை வளர்த்துக்கொள்ள சரியான வழிகாட்ட முடியும்?


எதைச் செத்து சுடுகாடு போகும் வரை மறக்காமல் இருக்கிறாயோ, அது மட்டுமே படிப்பினை, படிப்பு, பாடமாகும். நேற்றுப் படித்தேன். இன்று மறந்துவிட்டேன் என்றிருப்பதெல்லாம் படிப்புமல்ல, பாடமுமல்ல, படிப்பினையுமல்ல!


ஒன்றைப் ப‌ற்றி ஆராய‌த்தூண்டும் கேள்விக‌ள் எவை?


யார்? எத‌ற்கு? எப்ப‌டி? எங்கே? எப்போது? எவ்வாறு? ஏன்? எது? என்ன? இந்தக் கேள்விகளில், எந்த‌க் கேள்வி ஒன்றின் பாக‌ங்க‌ளை (கூறுக‌ளை), ஒன்றில் இருப்ப‌தைக் கொண்டிருக்கும் ம‌ற்ற‌ பொருட்க‌ளை, ஒன்றோடு இணைந்திருப்ப‌வைக‌ளை, ஒன்றைப் பாதிப்ப‌வைக‌ளை, ஒன்றின் உருக்க‌ளை, ஒன்றிற்குப் பதிலாக‌ உள்ள‌ மா‌ற்றுக‌ளை, ஒன்றின் பய‌ன்க‌ளை ஆராய ஒருவ‌னை தூண்டுகிறது? சிந்தித்துப் பாருங்க‌ள்.


கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக             (குறள் எண் : 391)முன்ன‌றிவு Munnarivu Download

The Expected Knowledge Download

ஞானசூத்திரம் Download

Knowledge Expansion Manual [English]: Download

Related work by the same author [English]:Analytical Wiki

Theory of Sivashanmugam

Theory of Sivashanmugam [English]:YouTube

How to Be an Analyst [English]:YouTube

The Indestructible Properties [English]:YouTube

Vital Questions for Scientific Research: from International University of Pirates [English]:YouTube

The Scientific Research [English]:YouTube

Research and Rediscover [English]:YouTube

What is the use of the knowledge which cannot be repeated? [English]:YouTube

The Indestructible Properties [English]:WikiBooks

எதைக் கற்றாய் நீ? [தமிழ்]:PDF

ஓட்டத்தைத் தேக்கும்போது… [தமிழ்]:PDF

The Indestructible Properties [English]:Uncyclopedia

Lies and Pies [English]:Uncylopedia

What is the use of the knowledge which cannot be repeated? [English]:Archive


எப்பொருளையும் பற்றி நீ அறியக்கூடியதெவை?

~ Sivashanmugam P.
President, Intellectual Development Foundation

தமிழாக்கம்: திருவனந்தபுரம் ஸ்ரீவித்யா


2832408373_da6de471ae

ஒன்றைப் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்? ஒன்றைப் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள் – என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டாமல் பள்ளி கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு மட்டும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பது மிகப் பெரிய சமுதாயக் குற்றமாகும்.

2832408373_da6de471ae

The Intellectual Rule Book:
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

ஒரு வேலையில் நிபுண‌த்துவ‌ம் பெறுவ‌து எப்ப‌டி?
  

Advertisements

611 Responses to அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

  1. kannadhasan says:

    dirami

  2. Vijay says:

    அருள் என்பதன் பொருள் மற்றும் அதன் அர்த்தம்

  3. Anonymous says:

    இதன் சுருக்கத்தை கூறியதற்கே சிலரிடம் ஓட்டம் சிலரிடம் எள்ளி நகையாட்டம் சிலர் என்னை கிருக்கென்றார்கள்

  4. ag icewebsi there in shareyour t numbers thisneed web ng plans asof

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s