உலகம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

World

உலகம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் உலகம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

உலகம் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

உலகம் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to உலகம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. சௌந்தரபார்வதி says:

    World is a common name for the whole of human civilization, specifically human experience, history, or the human condition in general, worldwide, i.e. anywhere on Earth.

    In a philosophical context it may refer to: (1) the whole of the physical Universe, or (2) an ontological world (see world disclosure). In a theological context, world usually refers to the material or the profane sphere, as opposed to the celestial, spiritual, transcendent or sacred. The “end of the world” refers to scenarios of the final end of human history, often in religious contexts.

    World history is commonly understood as spanning the major geopolitical developments of about five millennia, from the first civilizations to the present.

    World population is the sum of all human populations at any time; similarly, world economy is the sum of the economies of all societies (all countries), especially in the context of globalization. Terms like world championship, gross world product, world flags etc. also imply the sum or combination of all current-day sovereign states.

    In terms such as world religion, world language, and world war, world suggests international or intercontinental scope without necessarily implying participation of the entire world.

    In terms such as world map and world climate, world is used in the sense detached from human culture or civilization, referring to the planet Earth physically.

    The English word world comes from the Old English weorold (-uld), weorld, worold (-uld, -eld), a compound of wer “man” and eld “age,” which thus means roughly “Age of Man.” The Old English is a reflex of the Common Germanic *wira-alđiz, also reflected in Old Saxon werold, Old High German weralt, Old Frisian warld and Old Norse verǫld (whence the Icelandic veröld).

    The corresponding word in Latin mundus, literally “clean, elegant”, itself a loan translation of Greek cosmos “orderly arrangement.” While the Germanic word thus reflects a mythological notion of a “domain of Man” (compare Midgard), presumably as opposed to the divine sphere on the one hand and the chthonic sphere of the underworld on the other, the Greco-Latin term expresses a notion of creation as an act of establishing order out of chaos.

    ‘World’ distinguishes the entire planet or population from any particular country or region: world affairs pertain not just to one place but to the whole world, and world history is a field of history that examines events from a global (rather than a national or a regional) perspective. Earth, on the other hand, refers to the planet as a physical entity, and distinguishes it from other planets and physical objects.

    ‘World’ can also be used attributively, to mean ‘global’, ‘relating to the whole world’, forming usages such as world community or world canonical texts.

    By extension, a ‘world’ may refer to any planet or heavenly body, especially when it is thought of as inhabited, especially in the context of science fiction or futurology.

    ‘World’, in original sense, when qualified, can also refer to a particular domain of human experience.

    The world of work describes paid work and the pursuit of career, in all its social aspects, to distinguish it from home life and academic study.
    The fashion world describes the environment of the designers, fashion houses and consumers that make up the fashion industry.
    historically, the New World vs. the Old World, referring to the parts of the world colonized in the wake of the age of discovery. Now mostly used in zoology and botany, as New World monkey.

    In philosophy, the term world has several possible meanings. In some contexts, it refers to everything that makes up reality or the physical universe. In others, it can mean have a specific ontological sense (see world disclosure). While clarifying the concept of world has arguably always been among the basic tasks of Western philosophy, this theme appears to have been raised explicitly only at the start of the twentieth century[6] and has been the subject of continuous debate. The question of what the world is has by no means been settled.

    Parmenides

    The traditional interpretation of Parmenides’ work is that he argued that the every-day perception of reality of the physical world (as described in doxa) is mistaken, and that the reality of the world is ‘One Being’ (as described in aletheia): an unchanging, ungenerated, indestructible whole.

    Plato

    In his Allegory of the Cave, Plato distingues between forms and ideas and imagines two distinct worlds : the sensible world and the intelligible world.

    Hegel

    In Hegel’s philosophy of history, the expression Weltgeschichte ist Weltgericht (World History is a tribunal that judges the World) is used to assert the view that History is what judges men, their actions and their opinions. Science is born from the desire to transform the World in relation to Man ; its final end is technical application.

    Schopenhauer

    The World as Will and Representation is the central work of Arthur Schopenhauer. Schopenhauer saw the human will as our one window to the world behind the representation; the Kantian thing-in-itself. He believed, therefore, that we could gain knowledge about the thing-in-itself, something Kant said was impossible, since the rest of the relationship between representation and thing-in-itself could be understood by analogy to the relationship between human will and human body.

    Wittgenstein

    Two definitions that were both put forward in the 1920s, however, suggest the range of available opinion. “The world is everything that is the case,” wrote Ludwig Wittgenstein in his influential Tractatus Logico-Philosophicus, first published in 1922. This definition would serve as the basis of logical positivism, with its assumption that there is exactly one world, consisting of the totality of facts, regardless of the interpretations that individual people may make of them.

    Heidegger

    Martin Heidegger, meanwhile, argued that “the surrounding world is different for each of us, and notwithstanding that we move about in a common world”. The world, for Heidegger, was that into which we are always already “thrown” and with which we, as beings-in-the-world, must come to terms. His conception of “world disclosure” was most notably elaborated in his 1927 work Being and Time.

    Freud

    In response, Freud proposed that we do not move about in a common world, but a common thought process. He believed that all the actions of a person is motivated by one thing: lust. This led to numerous theories about reactionary consciousness.

    Other

    Some philosophers, often inspired by David Lewis, argue that metaphysical concepts such as possibility, probability and necessity are best analyzed by comparing the world to a range of possible worlds; a view commonly known as modal realism.

  2. சௌந்தரபார்வதி says:

    நிர்வாண உலகில் கோவணம் கட்டியவன் கூட பைத்தியக்காரன் என்பார்கள். உடையணிந்தோர் உலகில் நிர்வாணம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் ஒரு நிர்வாணம் உலகெங்கிலும் கொண்டாடப் படுகிறது. அது புத்தரின் நிர்வாணம்.

    ஆடை துறத்தல் நிர்வாணமல்ல. ஆசை துறத்தலே நிர்வாணம்.

    புத்தர் உடல் மீதான பற்றை விடுத்து நிர்வாண நிலையடைந்த நாளை பிப்ரவரி 8ம் தேதி பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர். சில பகுதிகளில் பிப்ரவரி 15ம் தேதியும் அனுசரிக்கப் படுகிறது…

    கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு மே மாத பவுர்ணமி தினத்தில் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்த சித்தார்த்தன் பின்னாளில் கவுதம புத்தராக பரிணமித்த்து எப்படி?

    வெளியுலகத் தொடர்புகளின்றி அரண்மனையின் சுகபோகங்களை மட்டுமே கண்டு வளர்ந்து, தனது 16வது வயதில் யசோதரையை மணந்த சித்தார்த்தன் புற உலக வாழ்க்கையின் துன்பங்களை உணராமலே வாழ்ந்து வந்தார்.

    மனைவியோடும் மகன் ராகுலனோடும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் தனது 29ம் வயதில் முதன் முதலாக ஒரு புறப்பயணம் மேற்கொண்டபோது ஒரு பிச்சைக்கார வயோதிகரையும், துன்புறும் ஒரு நோயாளியையும், ஒரு பிண ஊர்வலத்தையும், துறவி ஒருவரையும் காண நேரிட்டது. வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பல புரிதல்களை இவர்களில் கண்டு கொண்ட சித்தார்த்தன் உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டான்..

    சித்தார்த்தன் பிறந்த போது வருகை தந்த ஞானி ஒருவர் அவன் துறவியாக வருவான் என்று கூறியதால் துன்புறும் மக்களைக் காண அனுமதிக்காமல் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வைத்து சுகபோகங்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது…அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தி இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய சுகபோகங்கள் திகட்டி விட்ட சித்தார்த்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். சுகபோகங்கள் இல்லாத மக்கள் இருப்பதையும் அவர்களின் துன்பம், மூப்பு, நோய், வறுமை, மரணம், வாழ்க்கையின் நிலையாமை போன்றவற்றை உணர்ந்து கொண்டான்.

    மனைவி, மகன், அரண்மனை சுகபோகங்களை உதறி வெளியேறிய சித்தார்த்தன் தனது 35ம் வயதில் கயா என்னுமிடத்தில் போதிமரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டார். அங்கே ஞானநிலை பெற்று சித்தார்த்தன் புத்தரானார்.

    ஆசையே துன்பத்தின் அடிப்படை என்பது அவரது போதனைகளின் அடிப்படையாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஆசைகளைத் துறந்து புத்த நிலையை அடைய முடியும் என்பது அவரது அறிவுரை…

    புத்தரின் காலத்துக்குப் பின் அவரது அறிவுரைகள் பவுத்த மதமாக பரிணமித்தது.

    கலிங்கப் போருக்குப் பின் பவுத்தத்தை தழுவிய அசோகன் தனது மகளையும் மகனையும் புத்த துறவிகளுடன் அனுப்பி வைத்தான். அவர்களே இலங்கை, இந்தோனேஷியா முதலிய தென்கிழக்காசிய நாடுகளின் பவுத்தம் பரவக் காரணமானவர்கள்.

    புத்தரின் சீடர்களால் பரப்பப் பட்ட பவுத்த மதம் பின்னாளில் இந்தியாவில் தனது செல்வாக்கை பெருமளவு இழந்த போதிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது.

    தாழ்த்தப் பட்டவர்களின் தலைவராக கொண்டாடப் படும் அம்பேத்கர் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உயர்சாதி மக்களால் மதசமத்துவம் தரப்படாத நிலை கண்டு தனது மக்களோடு பவுத்த மததுக்கு மதம் மாறினார்.

  3. சௌந்தரபார்வதி says:

    உலகத்தின் முடிவு என்றால், இப்பூமண்டலம் சுட்டெரிக்கப்பட்டு அழிந்து போகும் என்று சாதாரணமாய் யாவரும் சொல்லுவார்கள்.

    நோவாவின் காலத்தில் ஓர் உலகம் ஜலப்பிரளயத்தால் அழிந்துப்போனதாக நாம் வேதத்தில் வாசிக்கிறோம் . துன்மார்க்கரை பூமியோடுங்கூட அழித்துப்போடுவதாக தேவன் கூறினார். ஆதி 6:11-13. பூர்வ உலகத்தை தப்பவிடாமல் தேவன் அதை ஜலப்பிரளயத்தால் அழித்தார் என்றும் வாசிக்கிறோம். 2பேதுரு.2:5; 3:6. ஜலப்பிரளயத்தில் துன்மார்க்கரான மனிதர்களும், அவர்களுடைய எல்லாப் பொல்லாத ஏற்பாடுகளும் அழிக்கப்பட்டது. ஆனால் சொல்லர்த்தமான இப்பூமி அழிக்கப்படவில்லை. ஏனெனில் ஜலப்பிரளயத்திற்கு பிறகு, பேழையிலிருந்த நோவாவின் குடும்பமும், சகலஜீவ ஜந்துக்களும், இப்பூமியில் அரராத் என்னும் மலையின் மேல் இறங்கி, பிறகு இப்பூமியில் ஜீவராசிகள் பெறுகினது. ஆதி.18:13-17. வேதாகம பாஷையின்படி, உலக முடிவு என்றால், இப்பூமியின் அழிவைக்குறிக்காது. உலக முடிவென்றால் ஓர் சந்ததி அல்லது ஓர் யுக ஏற்பாட்டின் முடிவைத்தான் குறிக்கும்.
    மேலும் தேவனுடைய ஆதி திட்டத்தின்படி இப்பூமி, மனித குடியிருப்புக்காக சிருஷ்டிக்கப்பட்டது. ஏசா 45:18. சங் 115:16. சாத்தானின் அரசாட்சி அழிக்கப்பட்ட பிறகு இப்பூமியில் தேவராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, இப்பூமியிலும் செய்யப்பட வேண்டியதாயிருப்பதால், சொல்லர்த்தமான இப்பூமி ஒருப்போதும் அழிக்கப்படாது. இக்காரணத்தால் “ ஒரு சந்ததி போகிறது. மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது”. என்று சாலமோன் ஞானி கூறினார். பிரசங்கி 1:4. பூமி ஒரு போதும் நிலைபெயராது.” சங்.104:5; 119:90. கர்த்தருடைய கோபாக்கினையின் நாளில், வானம் சுருட்டப்பட்டு, மடமடவென்று அகன்று பூமியும், அதிலுள்ள கிரியைகள் யாவும் எரிந்து அழிந்து போகுமென்று பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எபி 1:10-12; 2பேதுரு.3:10; வெளி.6:12-17;

    உலக முடிவு அதாவது இப்போதுள்ள சாத்தானின் யுகம் முடிவடையும் போது, ராஜ்யங்களுக்கு விரோதமாய் ராஜ்யங்களும், ஜனங்களுக்கு விரோதமாய் ஜனங்களும் எழும்பி, பல இடங்களில் பஞ்சம் கொள்ளை நோய், பூமியதிர்ச்சிகளும் உண்டாகி, உலகத்தார் யாவரும், மகாபெரிய உபத்திரவத்தில் சிக்கி அழிவார்கள். உலகமுண்டானது முதல் இதுவரை சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் உண்டாகுமென்று இயேசு கிறிஸ்து கூறினார். மத்.24:6-8. 21-22. மாற்கு 13:19 ; லூக்கா 21:35; வெளி.16:17-21; பலவிதமான யுத்த ஆயுதங்கள், அணுகுண்டுகளாலும், அக்கினி மற்றும் விஷவாயுவாலும் பட்டணங்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாக்கப்படுமென்றும், தேசங்கள் பிரேதங்களால் நிறைந்து எருவாக்கப்படுமென்றும், அநேக தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தார்கள். ஏசா.24-ம்,34-ம் அதிகாரம் எரே.25:31-38; தானி. 12:1 ;செப்பனியா 1:18;

    உலக ராஜாக்களும், அவர்களுடைய ராஜ்யங்களும், மதத்தலைவர்களும் அவர்களுடைய மதஸ்தாபனங்களும், ஐசுவரியவான்களும், அவர்களுடைய உலக ஆஸ்திகள் யாவும் அழிக்கப்பட்டுப்போகும். சங் 2: மற்றும் 110: எரே 25: 35-38; யாக் 5:1-5; தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தம் இந்த மகா உபத்திரவ நாட்கள் குறைக்கப்படும். இல்லையேல் ஒரு நரப்பிராணியாகிலும் பிழைக்காது என்று இயேசு கிறிஸ்து கூறினார்.

    இஸ்ரயேலர் நிமித்தமாய் நடக்கப்போகும் அர்மகெதோன் என்னும் யுத்தமே, உலகிலுள்ள சகல ராஜ்யங்களையும் அழிக்கப்போகும் மகா உபத்திரவ காலமாய் தொடர்ந்து, சாத்தானுடைய யுகம் முடிவடையும். லூக் 21:20.

  4. சௌந்தரபார்வதி says:

    உலகம் என்றால் என்ன ? உலகம் என்பது பஞ்ச பூதங்களான,மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் போன்ற ஐந்து கலவைகளானதாகும்.இதை உலகம் என்று சொல்லுவதைவிட அண்டம் என்று சொல்லுவது பொருத்தமானதாகும்.இதுபோல் பல கோடி அண்டங்கள் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.நாம் வாழும் இந்த உலகம் ஒரு அண்டமாகும்.

  5. சௌந்தரபார்வதி says:

    நாட்கள் நகர்கின்றன நயமோடு
    நாள்தோறும் தோன்றி மறைகிறது கதிரவன்
    இயற்கை மனித குலத்திற்கு தந்த நாட்காட்டி
    இறைவன் உலகிற் களித்த நன்கொடை

    உலகே ஒரு நாளிலே விடியுமா
    ஒரு பொழுதும் விடியாது
    ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு
    வேளையில் தான் விடியும்

    உலகே வியத்தகு விசித்திரம் தான்
    ஒரே நாளில் தீட்டிவிட முடியுமா
    வையகத்தையும வானகத்தையும்
    வாழும் காவியங்களாய் வரைய முடியுமாImage

    எழுத்தின் உளி கொண்டு விழி திறந்து
    எண்ண அலைகளால் அந்த
    உளியினை ஓயாமல் அடித்தாலும்
    உலகெனும் அதிசயத்தை என்றாகிலும்

    காகித ஓலைகளில் வடித்து
    எழுத்துப் பேழையினுள் அடைத்து
    படித்துப் பார்க்க – என்று
    பறை சாற்றிவிட இயலுமா

    எதை எழுதி வைக்க
    எதனை மீதம் வைக்க
    உலகம் என்னும் சொல்லோவியம்
    உன்னதமான உயிர் காவியம்

    சொல்லோவிய மதற்கு பொருள் தீட்ட
    பொருளோவிய மெழுத நினைந்து
    கையோடு கையேடு எடுத்தேன்
    கண் முன்னால் வந்தன கேள்விகள்

    பதில் எழுது எனக்கு என்றது
    பதில்தானே பார்க்கலாம் என்றேன்
    உலகம் என்றால் என்ன? என்றது
    விழிகளால் நான் காண்பது என்றேன்

    காண்பதுதான் உலகமா
    கண் சிவந்தது என் கேள்வி
    என்றால் காணாததுதான் உலகமா
    என்றே வினா தொடுத்தேன்

    எள்ளி நகையாடியது என் உலகம்
    எதை உலகம் என்றே தெரியாத
    உலகறியா சின்னஞ் சிறு மனிதனே
    உனக்கு தெரிந்த வரையில் எழுது

    உலகை எழுதுகிறேன் என்று சொல்லாதே
    உலகில் நானறிந்ததை ஏட்டில்
    எழுத முயற்சிக்கிறேன் என்று சொல்
    எழுதி முடித்துவிடும் செயலா இது
    கேள்விகள் வேள்விகளாய் தொடர்ந்தன

    பதில் தான் இல்லை கண்களை தீட்டினேன்
    காவியம் எழுதவில்லை என்றாலும்
    கவிதையாவது எழுதி வைப்போம்

    என் கண்கள் முன்னால் விரிந்து
    எல்லையே இல்லாமல் நின்றது வானம்
    விண்னை நான் காண்கிறேனா
    விண்தான் எனைக் காண்கிறதா

    மேகம் எனும் மேலாடை அணிந்த
    மகா காவியம் தானோ வானம்
    என்ன இது வானம் எழுதினேன்
    இங்கே மேகம் அல்லவா எழுதப்படுகிறது

    மேகம் தன் முகம் விலக்கி எனக்கு
    வானம் காட்டாதா நான்
    வானை முதலில் எழுதுகிறேன்
    வான் மேகம் அடுத்தது

    அதோ அங்கென்ன அற்புதம்
    அடிக் கொரு நிறம் தருகிறதே
    அந்த அடிவானம் இதற்கென்னவானது
    அடித்தாற்போல் முகம் சிவந்துவிட்டது

    எந்தன் பார்வை உன்னை அடித்ததோ
    உன் மேக மலராடையா காரணம்
    வெட்கம் கொண்டா முகம் சிவந்தாய்
    விடியல் காண்கிறதாம் உலகின் என் பாகம்

    ஒளி வட்டம் ஆர்ப்பரிக்கிறது
    வெள்ளி வானம் ஆகிவிட்டது செவ்வானம்
    மையிருட்டை மறைக்கிறது புலர்வானம்
    மாலையில் உன்னை சந்திக்கிறேன்
    கோபாவேசம் அந்த கும்மிருட்டிற்கு

    குளிர்ந்த அதிகாலை பொழுது
    வைகறை நேரம் தரணியின் வசந்த காலம்
    வட்ட ஒளி தகிந்து ஒளிர்கிறது
    வானம் பார்த்து நிற்கிறேன் வானம்பாடியாய்

    வெளிச்சம் ஒளியானது ஒளி வெப்பமானது
    உலகை சுட்டெரிக்கிறது
    வானம் நோக்கும் எனக்கோ
    வையமே எனைச் சுற்றுவது போல் தோற்றம்

    ஆகாயம் நோக்கும் நான் சூரியனை நோக்க
    அது எழுதி முடிவு பெறவில்லை
    மேக மலர் மேலாடை அரையாடையாக
    மேலும் கூறு என்கின்றது

    சூரியனோ சுடுகிறது எனை எழுது என்று
    சூரியன் ஆகாயத்தின் அழகிய தாமரை
    குளுமை தந்தது உதய வேளையில்
    கருமை திரித்து வெண்மை தந்தது காலை வேளை
    வெப்பம் தந்தது முன்பகல் வேளை
    வெய்யில் தருகிறது நண்பகல் வேளை

    அத்தனையும் குறைந்து மங்கி
    அந்தி மயக்கமாய் வெம்மை குறைகிறது
    எழில் தோற்றம் திரும்பிவிட்டது
    என் இரு கண்கள் நிலை நிற்கிறது

    கிழக்கின் கடல் ஆழத்தில் பிறந்து
    மேற்கின் மலை உச்சியில் சாய்கிறது
    என் உலகை இருள் சூழ்கிறது
    என் விழிகள் இமைக்க மறுக்கிறது

    காலையில் கொண்டு சென்ற
    குளிர் காற்றை கனிவாய்
    கொண்டு வந்து முகம் சேர்க்கிறது
    கண்களை இருள் மருட்டுகிறது

    நீலக் கடல் கதிரவனை பிரசவித்து விண்ணில் எறிந்தது
    நற்காலை பொழுதில் நான் கண்ட காட்சி
    மாலை சூரியனை மேற்;கு மலை சிகரம்
    மடித்து தன் கடைவாயில் இட்டுக்கொண்டது

    மாலைப் பொழுது மங்கிவிட்டது
    மனிதனின் தேடல் மங்கிடவில்லை
    இரவு இருட்டு கருநிற வானம்
    இங்கேயும் தொடரும் அதிசயம்

    மின்மினிப் பூச்சிகள் விண்ணில்
    மிதக்க விடப் பட்டுள்ளதே
    விண்ணின் மீன்களாம் அவை
    வானம் இப்பொழுது தனிமரம் அல்ல

    விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட
    வெள்ளிப் பந்தல் கால்கள் இல்லாதது
    இமைகளை ஒரு நொடி நான்
    இமைத்து விட்டேனா வானத்தில் ஆச்சரியம்

    விண்ணில் துளை ஏற்பட்டுவிட்டது
    வட்ட வடிவ வெண் துவாரம்
    வானம் பார்த்த பூமி இது
    வெளிச்சம் வேண்டும் அல்லவா

    வெண்ணிலா என்று பெயராம்
    வட்ட முகமாம் வெள்ளி நிறமாம்
    பூமிப் பந்தின் துணைவியாம்
    பார்த்தாலே பேரானந்தம் தான்

    ஏய் பூமி எனும் பூளோகமே
    இரவு என்ன செய்யும் உன்னை
    ஆதவன் உதிக்கும் வரை உனை
    என் ஆவிபோல் காத்திருப்பேன்
    கண் விழித்து காவல் நிற்கும்
    காப்பாளினி இந்த ஒளி நிலா
    கண்களது மயங்கி விடாதிருக்க
    நிலா பெண்ணுக்கும் மாதம் தோறும்
    நித்திரை நாட்கள் உண்டாம்

    ஓரிரு நாட்கள் ஒதுங்கியிருக்க
    வேண்டுமாம் நிலவும் நிலமும்
    இயற்கையின் அதிசயமா இது
    இயற்கையே அதிசயம் தான்

    இரவுப் பொழுது நிலா முற்றம்
    வெள்ளித் தாரகைகளின்
    தடைகளை மீறிய பேரணி
    தாடைகள் அசைய மறுக்கிறது

    மீண்டும் தரணியில் விடிகின்றது
    மாற்றமே இல்லாது நடவுகிறது
    நேற்றைய என் கண் காட்சிகள்
    நாளையும் தொடரத்தான் செய்யும்

    விஞ்ஞானம் கண்டு பிடித்ததாம் விமானம்
    எஞ்ஞானமும் இன்றி வானில் மிதக்கும்
    பறவை பட்சிகளை என்னென்பேன்
    பறந்து சென்று வானம் ஏகிவிட

    பூமிப்பந்தால் ஏவப்பட்ட இயற்கை கோள்களோ
    புறவைகளை புவியீர்ப்பதில்லையோ
    இறக்ககைகளால் விண்ணையும் மண்ணையும்
    இணைத்து ஒன்றாக்க துடித்து தவிக்கும்
    அயராத சமாதான தூதுவர்களோ

    வானம் எழுதி நிறைவுறவில்லை
    மேகம் வரைந்து முடிவுறவில்லை
    ஆகாய சூரியனும் பிறை நிலவும் எந்தன்
    எண்ண அலைகளில் சிறை படவில்லை

    பறக்கும் பட்சிகளும் அந்தரத்தில்
    பரந்த உலகிற்கு நான் எம்மாத்திரம்
    காற்று உண்டு நீர் உண்டு
    கடல் உண்டு மலையுண்டு

    நீரருவி அதன் கம்பீரம்
    நீரோடை நல்லாறு ஆழ்கடல்
    நீரில் மிதப்பவை நீரடி வாழ்வன
    நீரில் மிதந்து நீராளும் பாய்மரம்

    அடர் கொடிகள் பசுமை கானகம்
    அதில் வாழும் உயிரினம் ஊர்வன நடப்பன
    என்னால் எழுத இயன்றிடுமா
    என் கண் முன்னால் உலகம் விரிகிறது

    என் கருவிழிகள் இரண்டு போதாது
    எழுதுகோல் தவியாய் தவிக்கிறது
    எழுதித் தொடர கைவிரல்கள் பத்தும் போதுமா
    என் ஜாதியாம் மனித ஜாதி
    எழுதப் படாமல் இன்னும் உள்ளது

    மானிட ஜாதியினை நான் எழுதிடவா
    மனிதனில் எதை நான் எழுத
    பெண்ணில் இருந்து மண்ணை அடையும்
    பூமியில் புதிதாய் பிறக்கும் சிசுவில் துவங்கவா

    அதன் சிரிப்பை வர்ணிக்கவா
    முதல் மழலை பேச்சை சொல்லவா
    பூளோகத்தில் பிஞ்சு பாதம் பதித்து
    பூவின் அரும்பாய் புவியில் நடக்க முயலும்
    எல்லையிலா இன்ப காட்சியை எழுத்தில் பதிக்கவா

    இரு பெரும் ஜாதி உண்டு
    இந்த மனித இனத்தில்
    ஆணினம் பெண்ணினம்
    எங்கு துவங்க எங்கே முடிவுற

    பெண்ணை எழுதிடவா இல்லை
    பெண்மையின் தன்மையை எழுதித் தரவா
    இயற்கையின் அதிசயங்களை எல்லாம்
    ஒரு சேர மிகுந்தவள் பெண்

    காலச் சக்கரத்தின் சுழற்சியில் இயற்கை
    கடல் மலை காற்று கானகம்
    மேகம் மழை அருவி ஆறு
    மாற்றங்கள் கொள்வதில்லை
    மங்கையர் பிறவி அப்படி இல்லை

    ஏழு அரும் பருவங்களாம் எழுபது குணங்களாம்
    என்றாலும் பெண் போன்ற
    புனித பிறவி புவியில் இல்லையாம்
    பேதை: பெதுவை: மங்கை: மடந்தை:
    அரிவை: தெரிவை: பேரிளம் பெண்

    இலக்கணங்களில் எழுதப்பட்டுள்ளது
    இலக்கியங்கள் தெரிவிக்கின்றன
    ஏழு பருவத்தையும் எழுத்தில் கோர்க்க
    ஏழு ஜன்மம் வேண்டும்

    வையகத்தின் இந்த வழிப்போக்கனால்
    வைதீகம் எழுதிட முடியுமா
    மனிதனின் பிறவியை கூறி
    மனிதன் சாதித்தவற்றினை எழுத்தாக்கி

    மனிதன் பேசும் மொழிகளை
    இசையை நடனத்தை கவிநயத்தை
    வாழும் கலையை வாழ்க்கை முறையை
    வார்ப்பில் தந்திட இயலுமா

    இன்னும் மான் இனம் உள்ளது
    நீரின் மீன் இனம் உள்ளது
    என் தாய் மொழியாம் தமிழ் உள்ளது
    என் அருமை தேசமாம் இந்தியா உள்ளது

    வாழும் நெறி தந்துள்ள
    உலகிற்கு வாழ்வை அளித்துள்ள
    இஸ்லாம் இன்னும் உள்ளது
    உலகப்பொதுமறை திரு மறையாம் குர் ஆன் உள்ளது
    தமிழ் கூறும் நல்லுலகின் திருக்குறள் உள்ளது

    எண்ணிக் கொண்டிருக்கிறேன்
    எழுதிக் கொண்டிருக் கிறேன்
    நான் உலகை எழுதவில்லை
    நான் காணும் உலகில் எழுதுகிறேன்

    என்ன விந்தை வையம் இது
    எனை கடந்து செல்கின்றதே
    நின்று நிலையிலே நான்
    நிகழ் காலம் எழுத நினைத்தேன்

    இறந்த காலம் அல்லவா
    எழுதி வைத்திருக்கிறேன்
    நிகழ் காலம் என்னுள் உள்ளது
    எப்பொழுது எழுதுவேன்?

    எதிர்காலம் என் முன் உள்ளது
    எப்படி எழுதப்போகிறேன்
    என்னால் ஒருபோதும் இயலாது
    இறுதியாக ஓர் உறுதி மொழி

    மண்ணையும் விண்ணையும்
    காற்றையும் நீரையும்
    கடலையும் சோலையையும்
    நெருப்பையும் நெடுவயலையும்
    மலையையும் மலையருவியையும்
    பறவைகளையும் விலங்கினங்களையும்
    மனிதர்களாம் நம்மையும்

    உலகை ஆளும் ஓரிறைவன்
    விளையாட்டிற்காகவோ வேடிக்கையாகவோ
    உண்டாக்கவில்லை உருவாக்கவில்லை
    சிந்திக்கும் மனங்களுக்கு இவற்றில்
    சரியான பாடங்கள் உள்ளது

    வழிப்போக்கன்தான் நாம் இவ்வுலகிற்கு எனினும்
    வந்தோம் வாழ்ந்தோம் வீழ்ந்தோம் என்றிலாது
    வாழ்விற்கு வாகை சூட வாழ்ந்து
    வாழ்வதனை வரலாறாக்குவோம்

    தேடல் அறிந்த மனித உள்ளங்கள்
    தேடுங்கள் தேடிடுங்கள்
    தேடிக் கண்டெடுங்கள்
    உலகை தேடாதீர்கள்
    உலகில் உங்களை தேடுங்கள்.

  6. சௌந்தரபார்வதி says:

    அம்மையப்பன் என்றால் என்ன ? உலகம் என்றால் என்ன ? ன்னு கேட்டு
    அம்மையப்பனை சுத்தினாலே ஒலகத்தை சுத்தினதுக்கு சமானம்னு பின்னவீனத்துவமா சிந்திச்சிருக்காரே.இல்லியா ?

  7. சாயா தேவி says:

    எமலோகம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    எமலோகம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் எமலோகம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

  8. சாயா தேவி says:

    நரகம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    நரகம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் நரகம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

  9. சாயா தேவி says:

    சிவலோகம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    சிவலோகம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் சிவலோகம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

  10. சாயா தேவி says:

    பரலோகம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    பரலோகம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் பரலோகம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?