ரோசாப்பூ பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

pink-rose

ரோசாப்பூ ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் ரோசாப்பூ பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

ரோசாப்பூ ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

ரோசாப்பூ பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ரோசாப்பூ பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. முனியம்மா says:

    ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
    ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
    வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
    அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

    (ராசாவே)

    பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
    உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
    அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
    களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
    அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

    (ராசாவே)

    காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
    சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது
    பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
    வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு
    உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
    அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு

    பாடியவர்: S ஜானகி
    திரைப்படம்: முதல் மரியாதை
    வரிகள்: வைரமுத்து
    இசை: இளையராஜா

  2. முனியம்மா says:

    என் ரோசாப்பூ சேலைக்காரி….

    கவிதை – இளங்கவி……..

    குட்டைப் பாவாடையுடன்
    மனதை கொள்ளை கொள்ளும்
    சிரிப்பு கொண்டு
    நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய்
    நானும் உன்னை சுற்றிடுவேன்……

    கரம்சுண்டல் வாங்கி வந்து
    என் கைகளிலே வைத்திடுவாய்
    வாங்க மறுத்துவிட்டால்
    என் காலை மிரித்திடுவாய்…..
    கடைக்கண் பார்வைகொண்டும்
    அடித்திடுவாய்….

    நல்லூர் முருகனை மறந்துவிட்டு
    உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன்
    முழு கண்கள் பார்க்கமுதல்
    இருளாக மறைந்திடுவேன்….

    சில திருவிழாக்கள் ஓடி
    உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட
    ரோசாப்பூ சேலைகட்டி
    என்மனதை ஜோராக இழுத்தவளே…!

    சிறுவயதில் நீ தந்த
    பொரிகடலை சுவையும் போய்….
    நீ சிறிதாக வாங்கித்தரும்
    கரம்சுண்டல் கசந்தும் போய்….
    உன் காந்த இதழ் மட்டும்
    கொக்கின் கண்களிலே மீனாக…..
    கோவில் வீதியெங்கும்
    அலைந்திடுவேன் உன்
    இதழ் சுவைக்க தேனாக…..

    இருளான பக்கத்தில்
    கொப்பருக்குத் தெரியாமல்
    கிஸ் அடிக்கத் துடித்திடுவேன்…..
    கொப்பர் நான் தொடர பார்த்துவிட்டால்
    கொட்டக்கொட்ட முழித்திடுவேன்….

    என் முயற்சியின் பலனை
    எனக்கு முழுவதுமாய் தந்தவளே…!
    என் மூச்செல்லாம் நீயாகி
    என்னை முழுதாகத் தின்றவளே…..

    நம் மனதெல்லாம் சேர்ந்து
    மகிழ்வாக வாழ முதல்
    உன் கூட்டை சிதைத்துவிட்டான்
    எம்மை கொன்றொளிக்கும் சிங்களவன்…..

    அன்றுமுதல் கோவில் வீதியிலே
    என் குளிர் நிலவை காணவில்லை
    நான் பெற்றிருந்த முத்தத்தின்
    நினைவுகளும் நீங்கவில்லை…..

    கூடு இழந்த குருவியாய்
    நீ எங்கோ சென்றுவிட….
    சிங்களவன் கொடுமையினால்
    நானும் புலம்பெயர்ந்தேன்
    இங்கே வந்து விட….

    சிலகாலம் சென்றறிந்தேன்
    என் செல்லம் நீ வன்னியிலே…..
    தொடர்பின்றி இருந்தாலும்
    உன் நினைவெல்லாம் என் மனதினிலே…..
    என் பாசமென்னும் பட்டினிக்கு
    உணவழித்த ராசாத்தி…..
    எத்தனை நாள் அம்மா
    நீ உணவருந்தி நாளாச்சு…….

    கொஞ்சம் பொறுத்துக்கொள்
    வந்திடுமே நம்
    வணங்கா மண் அங்கே….
    உங்களை வாழவைக்கும் உணவினிலே
    என் அன்பும் கலந்திருக்கும்
    பார் அங்கே….
    கடலிலே எதிரியதை அழித்தாலும்
    என் அன்புணவு உனைச்சேரும்
    கடல்மீன்கள் வழயாக
    என் கரைந்த உயிர்
    உன் உடல் சேரும்…..

    என் உணவுத் துளிகளிலே
    பழைய முத்தத்திற்கு பதில்
    முத்தமொன்று வைத்திருக்கேன்
    முழுவதுமாய் ஏற்றுவிடு…..
    திருமணம் முடிந்திருந்தால்
    என் முத்தத்தை கடலிலே கரைத்துவிடு…….

    கலங்காதே என் கண்மணியே
    உன் கண் நீங்கா காதலன் நான்; நீ
    என் கனவெல்லாம் ஆட்சிசெய்யும்
    என் அன்புத் தேவதை தான்…..

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?