தூத்துக்குடி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

tuticorin

 

தூத்துக்குடி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் தூத்துக்குடி பற்றி அறிவேதுமில்லாதவன்.

[எப்பொருளையும் பற்றி நீ அறியக்கூடியதெவை? Download For Offline Use]

தூத்துக்குடி ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

தூத்துக்குடி பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தூத்துக்குடி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. தினமலரிலிருந்து (சுட்டது) says:

    தூத்துக்குடி முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம், தமிழகத்தின் மற்ற நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலிக்கு சரக்குகளை கொண்டு வர அருகாமையில் உள்ள துறைமுகமாகும். ஆறாம் நூற்றாண்டில் இருந்தே தூத்துக்குடி கப்பல்கள் வந்து செல்லும் இடமாக விளங்கியுள்ளது.

    தூத்துக்குடி பழங்காலத்திலேயே முத்துக் குளித்தலுக்கு பெயர் பெற்றதாகும். 19ம் நூற்றாண்டில் சுதந்திர போராட்டத்தில் தூத்துக்குடி முக்கிய பங்கு வகித்தது. மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் என்பவரே உலகின் முதல் மனித வெடிகுண்டு ஆவார். மகாகவி சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், முதல் பெண் மனித வெடிகுண்டு வடிவு, வெள்ளையதேவன், வ.உ.சிதம்பரனார், ஆகியோர் இந்த மாவட்டத்தில் பிறந்தவர்களாவர். 1906ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார், பால கங்காதர திலகரின் உதவியுடன் முதல் இந்திய கப்பலை இயக்கினார். எஸ்.எஸ். காலியா என்ற அந்த பயணிகள் கப்பலே, ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவின் முதல் இந்திய கப்பலாகும்.

    தூத்துக்குடி, சென்னைக்கு தென்மேற்கில் 540 கி.மீ. தொலைவில் உள்ளது. வரைபட அமைப்பு படி மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 5, 2008ல் தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது

    தூத்துக்குடி முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம், தமிழகத்தின் மற்ற நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலிக்கு சரக்குகளை கொண்டு வர அருகாமையில் உள்ள துறைமுகமாகும். ஆறாம் நூற்றாண்டில் இருந்தே தூத்துக்குடி கப்பல்கள் வந்து செல்லும் இடமாக விளங்கியுள்ளது.

    பரப்பளவு : 4621 சதுர கிலோமீட்டர்
    மக்கள் தொகை : 1,5,72,273
    மழை அளவு : 6548.8 மிமீ (ஆண்டிற்கு)

    பனிமய மாதா சர்ச்:
    பனிமய மாதா சர்ச் 1714ம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழகத்தின் புகழ் பெற்ற சர்ச்களில் இதுவும் ஒன்றாகும். பழமையான பனிமய மாதா பேராலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை 26ல் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை இங்கு திருவிழா நடக்கும். இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்று தூத்துக்குடியில் உள்ளது.

    துறைமுகம்
    இந்தியாவின் 10வது முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் கருதப்படுகிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம். மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய கன்டெய்னர் டெர்மினலும் இதுவாகும்.1974ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி துறைமுகம் அமைக்கப்பட்டது.

    பாஞ்சாலங்குறிச்சி
    பாஞ்சாலங்குறிச்சி ஒட்டப்பிடாரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையர்களுக்கு எதிரான குரலை இங்கிருந்தே எழுப்பியுள்ளார்.

    திருச்செந்தூர் கோயில்
    தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள ஊர்களில் ஒன்று திருச்செந்தூர். கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவர்வதாகும். அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் முருகன் கோயில்கள் மலை அல்லது குன்றின் மீது அமைந்திருக்கும். இந்த கோயில் வித்தியாசமாக கடற்கரையில் அமைந்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. இந்த ஊர் முந்தைய வரலாற்றில் சீரலை வாயில் என்று அழைக்கப்பட்டது. புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து சமயத்தினரால் வழிபடப்படும் முருகப்பெருமான் தமிழ்மொழிக்கான கடவுளாகவும், தமிழர்களது கடவுளாகவும் கருதப்படுகிறார். இந்தக் கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் கோயில்கள் சிறப்புடையதாகும். இந்த அறுபடை கோயில்களில் ஒன்றான அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் திருச்செந்தூரில்தான் இருக்கிறது.
    கோயில் வரலாறு
    வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அதிக தெய்வபக்தியுள்ள சூரபத்மனுக்கு, பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். சூரபத்மன் அராஜகமான செயலைத் செய்யத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார். முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன், பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது. சூரபத்மனின் ஒரு பாதி ‘நான்’ எனும் அகங்காரம், மறுபாதி ‘எனது’ எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.
    சிறப்புக்கள்
    * திருச்செந்தூர் கோயில் கடற்கரையோரம் அமைந்திருப்பதால் பார்வைக்கு அழகாக இருக்கிறது.
    * திருச்செந்தூர் கோயிலில் அருகில் இருக்கும் பகுதியில் கடலில் பாதுகாப்பாகக் குளிக்க முடிகிறது.
    * திருச்செந்தூர் கோயிலின் அருகில் கடற்கரையோரம் அமைந்துள்ள பகுதி நாழிக்கிணறு. இந்த நாழிக்கிணற்றில் இருக்கும் தண்ணீர் உப்பு சுவையாக இல்லாமல் குடிப்பதற்கு ஏற்ற நல்ல தண்ணீராக இருப்பது இங்கே சிறப்பு.
    * இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.
    * இந்தப்பகுதியில் கிடைக்கும் பனைமரங்களின் ஓலைகளில் இருந்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அதிகமாக இங்கு கிடைக்கிறது.
    * திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையிலுள்ள கடற்கரைப் பகுதியில் கடல் நீரிலிருந்து உப்பு உருவாக்கப்படும் உப்பளங்கள் நிறைய இருக்கின்றன.
    பயண வசதி
    தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூரில் சுப்ரமணியசாமி கோவில் இருப்பதால் இந்தக் கோயிலில் வழிபடும் பக்தர்களின் வசதிக்காக மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் பயண வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    அய்யனார் சுனை
    திருச்செந்தூர் கோயிலில் இருந்து 10 கி.மீ தொலைவில் அய்யனார் சுனை அமைந்துள்ளது. இங்கு உள்ள சுனையில் நல்ல நீர் கிடைக்கிறது. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் இங்கு கட்டாயம் செல்வர்.

    எட்டயபுரம்
    தேசிய கவி மகாகவி பாரதியார் தூத்துக்குடியில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். உமறு புலவரின் நினைவிடம் இங்கு உள்ளது. பாண்டியர்களின் ஆட்சியில் சித்தூர் அருகே உள்ள சந்திரகிரி மக்கள் திசைக்காவலர்களாக இளசநாட்டில் நியமிக்கப் பட்டனர். பின்னர் இந்த ஊர் எட்டயபுரம் என அழைக்கப்பட்டது. எட்டயபுரம் 1565ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    கயத்தாறு
    கயத்தாறு : கயத்தாறு திருநெல்வேலியில் இருந்து 23 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 17 மதுரை சாலையில் அமைந்துள்ளது. கட்டபொம்மன் இந்த இடத்தில் தான் தூக்கிலிடப்பட்டார். இந்த இடம் நினைவு சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    கழுகுமலை
    ஜைனர்களின் முக்கிய இடமாக கழுகுமலை விளங்குகிறது. ஜைனர்களின் கல் வெட்டுக்கள் இங்கு காணப்படுகிறது. குகைக் கோயிலான வேட்டுவன் கோயில், இங்கு பார்க்கத்தக்க இடமாகும்.

    குலசேகரபட்டினம்
    குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் நடைபெறும் தசரா விழா சிறப்பானதாகும். பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் இதில் பங்கேற்பர். குலசேகரபட்டினம் சிறிய கடற்கரை கிராமமாகும்.

    மணப்பாடு
    திருச்செந்தூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் மணப்பாடு அமைந்துள்ளது. மணப்பாடு வங்கக்கடலில் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள கத்தோலிக்க சர்ச்சில் உள்ள சிலுவை ஜெருசலேமில் இருந்து கொண்டு வரப்பட்டது என கூறப்படுகிறது. இந்த சர்ச் மேற்கத்திய நாடுகளில் உள்ளள செயின்ட் சேவியர் மிஷினரியுடன் இணைந்ததாகும். இங்கு பல சிறிய சர்ச்களும் உள்ளன. எனவே இந்த இடம் சின்ன ஜெருசலேம் என அழைக்கப்படுகிறது.

    வ.உ. சிதம்பரனார் இல்லம்
    ஒட்டப்பிடாரம் விடுதலை போராட்ட வீரர்களின் முக்கிய இடமாக கருதப்படுகிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளை இங்கு தான் பிறந்தார். அவரது வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு டிசம்பர் 12, 1961ம் ஆண்டு முதல் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 167.12 சதுர மீ., பரப்பளவில் நினைவு இல்லம் அமைந்துள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்
    ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் கண்ணபிரான் வீற்றிருக்கிறார்

    வாஞ்சி மணியாட்சி
    இதன் மூலபெயர் மணியாட்சி என்பதாகும். வாஞ்சிநாதன் என்ற சுதந்திர போராட்ட வீரர் இந்த இடத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தீரச்செயலுக்காக அந்த ஊருக்கு வாஞ்சி மணியாட்சி என பெயரிடப்பட்டது.

    திருப்புளியன்குடி
    திருப்புளியன்குடி பெருமாள் கோயில் திவ்யதேசமாக கருதப்படுகிறது. இது மூன்று திருப்பதி என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் ஸ்ரீ வைகுண்டம் – தூத்துக்குடி பஸ் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

  2. தூத்துக்குடி மருத்துவமனை says:

    தொழுநோய் மருத்துவமனை
    தூத்துக்குடி.
    2320733

    அமெரிக்கன் மருத்துவமனை
    தூத்துக்குடி.
    2325438

    ஏ.வி.எம்., மருத்துவமனை
    தூத்துக்குடி.
    2325461

    சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை
    145/5பி, ஜெயராஜ் ரோடு, தூத்துக்குடி-628002.
    (461) 2320061/ 2322661
    2331509

    சிட்டி மருத்துவமனை
    106, ஜி/8, பாளை மெயின் ரோடு, தூத்துக்குடி-628008.
    (461) 2311349/ 2392547

    காசநோய் மையம
    காசநோய் மையம, தூத்துக்குடி.
    233128

    காயல்பட்டிணம் அரசு மருத்துவமனை
    தூத்துக்குடி.
    250273

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனை
    தூத்துக்குடி.
    242242

    கோவில்பட்டி அரசு மருத்துவமனை
    தூத்துக்குடி.
    220040

    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
    தூத்துக்குடி.
    2321051

  3. தூத்துக்குடி கல்வி நிறுவனங்கள் says:

    விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2322505

    வி.வி.பள்ளி
    தூத்துக்குடி.
    2328402

    சுப்பையா வித்யாலயம் (பெண்கள்)
    தூத்துக்குடி.
    2322911

    செயின்ட் ஜோசஃப் பெண்கள் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2322665

    செயின்ட் சேவியர் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2321505

    செயின்ட் தாமஸ் மேல்நிலை பள்ளி
    வீரபாண்டியபட்டிணம், தூத்துக்குடி.
    244350

    செயின்ட் தாமஸ் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2321686

    செயின்ட் அலோய்சிஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2320504

    சாத்தான்குளம் புலமடம் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    266346

    மனோரா விகாசா பள்ளி
    தூத்துக்குடி.
    2325111

    கரப்பேட்டை நாடார் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2320391

    கரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2326971

    ஜான்சன் இங்கிலீஸ் பள்ளி
    ஜான்சன் இங்கிலீஸ் பள்ளி, தூத்தக்குடி.
    2322711

    ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ
    தூத்துக்குடி.
    2321557

    ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2321303

    ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன
    தூத்துக்குடி.
    2321607

    காட்வெல் மேல்நிலை பள்ளி
    தூத்துக்குடி.
    2320408

    நேஷனல் பொறியியல் கல்லூரி
    நளத்தின்புதூர், தூத்துக்குடி.

    ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி
    தூத்துக்குடி.

    டாக்டர் ஜி.யு. போப் பொறியியல் கல்லூரி
    தூத்துக்குடி.

    இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி
    தூத்துக்குடி.

    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி
    தூத்துக்குடி

  4. தூத்துக்குடி ஹோட்டல்கள் says:

    கீதா இன்டர்நேஷனல் ஹோட்டல
    1/9, போல்பேட்டை, தூத்துக்குடி-628002.
    +91 0461 2346874
    +91 461 2346014

    விஷாகா ஹோட்டல
    74/7, பழைய பஸ்நிலையம் அருகில், தூத்துக்குடி.
    2329603

    ஜானி இன்டர்நேஷனல் ஹோட்டல
    264, வி.இ.ரோடு, தூத்துக்குடி-628003.
    +91 461 2328350

    சத்யா பார்க் அன் ரிசார்ட
    பாளையங்கோட்டை ரோடு, மறவன்மடம், தூத்துக்குடி-628101.
    +91 461 5534985

    சித்ரா ஹோட்டல்
    54, தொழிற்சாலை ரோடு, தூத்துக்குடி.
    2325075

    ராம் ஹோட்டல
    273/டி-1, எட்டயபுரம் ரோடு, தூத்துக்குட.

    பெல் ஹோட்டல்
    23, தெற்கு கடற்கரைச் சாலை, தூத்துக்குடி

    சோமா ஹோட்டல
    102, டபிள்யூ.ஜி.சி.ரோடு, தூத்துக்குடி.
    2324590

    ஹோட்டல் அஸ்வின
    167, தேவர்புரம், தூத்துக்குடி.

    ஹோட்டல் பவுல்சன்ஸ
    182, எட்டயபுரம் ரோடு, தூத்துக்குடி-628002.
    2320839

    ஹோட்டல் சுகம
    207, வி.இ.ரோடு, தூத்துக்குடி-628003.
    +91 461 2328172
    +91 461 2328162

    ஹோட்டல் ஆல்வின
    புது காலனி, தூத்துக்குடி-628003.
    +91 461 2328780
    +91 461 2329210
    alwinhtl@vsnl.net

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?