கட்டில் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

 

Simran 5

கட்டில் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கட்டில் பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

கட்டில் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

கட்டில் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to கட்டில் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. Jothi says:

    பெஞ்ச் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    பெஞ்ச் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் பெஞ்ச் பற்றி அறிவேதுமில்லாதவன்.

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    மெத்தை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    மெத்தை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  2. கட்டில் (Bed) என்பது நித்திரை கொள்வதற்கான அல்லது ஓய்வெடுப்பதற்கான ஒரு தளபாடம் ஆகும். கட்டில்கள் பல அளவுகளிலும் வடிவங்களிலும் காணப்படுகின்றன. கட்டில்கள் சொகுசாக இருப்பதற்காக மெத்தைகள் பயன்படுகின்றன.

    கட்டிலின் சமதளமான பகுதியானது கயிற்றினாலோ, மரத்தினாலோ, அல்லது இரும்பினாலோ செய்யப் பட்டு இருக்கலாம்.

  3. கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து, என்னைக் கொண்டுபோய்க் கிடத்தினார்கள்.

    எனது இரண்டு பக்கங்களிலும் என்னைப் போல் பல நோயாளிகள். முக்கலும் முனங்கலும் நரகத்தின் உதாரணம் மாதிரி.

    ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம்.

    ஹாலின் மத்தியில் ஒரு மின்சார விளக்கு; தூங்கும்பொழுது கண்களை உறுத்தாதபடி அதற்கு மங்கலான ஒரு ‘டோம்’.

    அதன்கீழ் வெள்ளை வர்ணம் பூசிய ஒரு மேஜை, நாற்காலி.

    அதில் வெள்ளுடை தரித்து, ‘ஆஸ்பத்திரி முக்கா’டிட்ட ஒரு நர்ஸ் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறாள்.

    ஒன்றையும் பற்றாமல் சலித்துக்கொண்டிருக்கும் மனம்.

    ஐயோ! மறுபடியும் அந்த வயிற்றுவலி. குடலையே பிய்த்துக் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! ஒரு கையால் வயிற்றை அமுக்கிக் கொண்டு ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தேன். சீ! ‘ஸ்பிரிங்’ கட்டிலாம்! என்னமாக உறுத்துகிறது!

    சற்று அயர்வு…

    என்ன வேடிக்கை! கட்டில் என்னுடன் பேசுகிறது!

    “என்ன வோய்! என் ‘ஸ்பிரிங்’கிற்கு என்ன குறைச்சல்? நீர் நாளைக்கு ரொம்ப… என்னிடம் வருகிறவர்களை, மரியாதையாக நாலு பேரோடு, சங்கு சப்தம் அல்லது வேத மந்திரம் சகிதமாகத்தான் நீண்ட பிரயாணமாக அனுப்புவது! என்ன, அர்த்தமாச்சா? உமக்கும் அந்த வழிதான்!

    “ஹி! ஹி! ஹி!…”

    என்ன கோரமான பிசாசுச் சிரிப்பு!

    மறுபடியும்…

    “இன்னும் சந்தேகமா? நம்ம ‘டயரி’யை வாசிக்கிறேன், கேளும்!”

    “உம்…”

    “ஒரு ரஸமான காதற் கதை சொல்லட்டுமா?

    “ஒரு வாலிபன். நல்ல அழகன். விஷம் உள்ளே போனதால் குடல் வெந்து புண். என் மடியில்தான் கிடத்தினார்கள். எங்கள் டாக்டர் பெரிய அசகாய சூரர்; இரண்டாவது பிரம்மா. புண் குணப்பட்டுத் தான் வருகிறது. ஆள்தான் கீழே போய்க் கொண்டிருக்கிறான். டாக்டர் முழிக்கிறார். எனக்குத் தெரியும் அவன் கதை; அவருக்குத் தெரியுமா? இரண்டு வாலிபர்கள், ஆனால் பெண் ஒருத்தி, இருவருக்கும் அவள் பேரில் ஆசை. அதிர்ஷ்டச் சீட்டு இவனுக்கு விழுந்தது. ஆனால் பெண் அவனைக் காதலிக்கிறாள்.

    “பிறகு என்ன! அவனுக்குக் காதல், பெண், பஞ்சணை; இவனுக்குச் சோகம், விஷம், நான்! இவன் காதல் தெய்வீகமானது. காரியம் கைகடந்த பின் தெரிந்திருந்தாலும், திருமணம் என்று சொல்லுகிறார்களே அந்த மாற்றமுடியாத உரிமை, அதையுங்கூட விட்டுக் கொடுத்திருப்பான் – அவள் வாழ்க்கையின் இன்பத்தைப் பூர்த்தியாக்க, ‘அவள் கை விஷத்தால் சாகிறோம்’ என்ற குதூகலம் இருந்தால், பாரேன்! பிறகு… அன்று ராத்திரி மூடிய கண் சிறிது திறந்தது. ஒரு புன்சிரிப்பு. உதட்டின் மேல் அவள் பெயர். காற்றிற்கு ஒரு முத்தம். அவ்வளவு தான்!

    “நன்றாயிருக்கிறதா?

    “பிறகு… அவன் சிறு பையன். சத்தியாக்கிரகி வயிற்றில்… தடிக் கம்புக் குத்து. அவனுக்கும் வைத்தியம் நடந்தது. பாவி எமனும் அவனைப் பாத்துத்தான் அன்ன நடை நடக்கிறான்! பையனுக்குச் சாவின் மேல் எவ்வளவு ஆசை! நெஞ்சில் குண்டுபடவில்லையே என்ற பெரிய ஏக்கம். அதே புலம்பல்தான். என் கையில் ஒரு துப்பாக்கி இருந்தால்… சாவைக் கண்டதும் என்ன உற்சாகம்! காதலியைக் கண்டது போலத்தான். என்னமோ, ‘ஸுஜலாம், ஸுபலாம்’ என்று ஆரம்பித்தான். குரல்வளையில் கொர்ர் என்றது… பிறகு என்ன? அவன் தாயாராம், ஒரு விதவை; என்ன அழுகை அழுதாள்! – கருமஞ் செய்யத் தனக்கு ஆள் இல்லை என்றோ!

    “ஹி! ஹி!! ஹி!!!

    “இன்னும் ஒன்று சொல்லுகிறேன், கேள்…

    “ரத்த பேதி கேஸ். அவன் ஒரு மில் கூலி. அப்பொழுது ‘ஸீஸன் டல்’ என் மேல்தான் கொண்டு வந்து கிடத்தினர். கூட நஞ்சானும் குஞ்சானுமாக எத்தனி உருப்படி! இத்தனைக்குமேல் இவனுடைய ஆயா ஒரு கிழவி. டாக்டர் வந்தார். வந்துவிட்டதையா கோபம்! ‘கழுதையை இழுத்துக் கீழே போடு!’ என்று கத்தினார். நானா விடுகிறவன்? ஒரே அமுக்கு ஆளை ‘குளோஸ்’ பண்ணித்தான் விட்டேன்!

    “வேறு என்ன?

    “நான் யார் தெரியுமா? சூ! கோழை, பயப்படாதே!

    “நான் ஒரு போல்ஷிவிக்கி (அபேதவாதி)!

    “ஹி! ஹி! ஹி!…”

    மறுபடியும் அந்தக் கோரமான கம்பிப்பல் சிரிப்பு! யாரோ என்னை எழுப்பினார்கள்.

    “ஏன் முனங்குகிறாய்? தூக்கம் வரும்படி மருந்து தரவா?” என்றாள், என் மேல் குனிந்து கொண்டிருந்த நர்ஸ்.

    எங்கோ டக், டக், டக் என்ற பூட்ஸ் சப்தம். டாக்டரோ?

  4. * நான் குளிக்கவில்லை.
    * சரியான களைப்பாக இருக்கிறது.
    * குழந்தை இன்னும் தூங்கவில்லை.
    * மாத்திரைகள் தீர்ந்து விட்டது.
    * எனக்குத் தலையிடிக்கிறது.
    * சரியான வெக்கையாக இருக்கிறது.
    * மூடி இருக்கிறது மறந்து விடுங்கள்.
    * இந்த நேரத்திலா?
    * முதுகு வலிக்கிறது.
    * மாமிக்கு கேட்டுவிடும்.
    * நேரம் சென்று விட்டது.
    * கொஞ்ச நேரத்தால்
    * சரியாக குடித்து இருக்கிறீர்கள்.
    * குழந்தைக்கு நோகும்.
    * விடிகாலை நேரத்திலா?
    * முதுகுப்பக்கம் திரும்பிப்படுத்தால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

  5. நான் கட்டில் மெலே கண்டேன் வென்னில
    ஏன்னை கட்டிகொண்டு பெசும் பெண்ணில
    நான் கட்டில் மெலே கண்டேன் வென்னில
    ஏன்னை கட்டிகொண்டு பெசும் பெண்ணில

    ஓஹ்ஹ் விழிகலில் தாபம்
    படம் எடுதாடும்
    விழிகலில் தாபம்
    படம் எடுதாடும்
    ஒஹொஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
    வெளயில் நான் வர சீருது
    சிணுங்குது யீன்

    நான் கட்டில் மெலே கண்டேன் வெண்ணில
    ஏன்னை கட்டிகொண்டு பேசும் பெண்ணில

    ப்ஸ்:காலமெல்லம் கண்ணா நான் காதிருந்தேன்
    கதை முடிக நன்னாளை பார்திருந்தேன்
    காலமெல்லம் கண்ணா நான் காதிருந்தேன்
    கதை முடிக நன்னாளை பார்திருந்தேன்

    ஸ்ப்ப்:ஆது புரியததா நான் அரியாததா
    ஆது புரியததா நான் அரியாததா
    உன் உள்ளம் என்னென்று தெரியாததா

    ப்ஸ்:ஏங்கே உன் தேன் கிண்ணம் இந்த என் பூ முத்தம்
    ஏங்கே உன் தேன் கிண்ணம் இந்த என் பூ முத்தம்

    ப்ஸ்:நான் கட்டில் மெலே காணும் வென்னில
    உன்னை கட்டில் கொண்டு பெசும் பெண்ண் நில

    ப்ஸ்:ஒரெ இடத்தில் நிலாமல் நான் மிதக்க
    வானகத்தில் எங்கேயோ நான் பரக்க
    ஒரே இடத்தில் நிலாமல் நான் மிதக்க
    வானகத்தில் எங்கெயூ நான் பரக்க
    ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வெண்டும
    ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வெண்டும
    ஒன்றான பின்னலே எரண்டகுமா

    ஸ்ப்ப்:அம்மாடி உன் ஆசை பொல்லாத பெரசை
    அம்மாடி உன் ஆசை பொல்லாத பெரசை

  6. வேப்பமரத்தடியில் கிடக்கும் அந்த கயிற்றுக்கட்டில் !

    விடுமுறைக்காக ஊருக்குச் செல்லும் எனக்காக

    அப்பச்சியுடன் காத்திருக்கும் கயிற்றுக்கட்டிலும் !!

    கட்டில் யாருக்கு என பேரன்களுக்குள்

    எப்பொழுதும் இருக்கும் ஒரு சண்டை !!!

    .

    .

    கம்பளமும் போர்வையும் போர்த்தி மிக அழகாக !!

    எத்தனையோ இலவ மரங்கள் வைத்து இருந்தும்

    அப்பச்சியின் தலையணையில் எப்பொழுதும் நெல் தவிடு தான் !!

    தலையணைக்கு அடியில் ஒளிந்திருக்கும் சுருக்குப் பையில்

    எப்பொழுதும் இருக்கும் வெற்றிலையும் பாக்கும்!!

    சுண்ணாம்பு குப்பி எப்பொழுதும் தனியாக கட்டிலின் இடது காலருகில் !!

    தாத்தாவுக்கு இடது கைப்பழக்கம் !!

    .

    .

    எப்பொழுதும் எதையும் அப்பச்சிக்கு புரிய வைப்பதில்

    எனக்கு சிரமம் இருந்ததில்லை !!

    “உனக்கெல்லாம் இது புரியாது அப்பச்சி ”என்று

    ஒரு வாக்கியத்தில் முடித்துவிடுவேன் !!

    .

    .

    “அது சரி ! எங்க காலம் வேற ! உங்க காலம் வேற ! “என

    சமாதனமாகி விடுவார் !!

    யாராலும் என்னை சமாதனம் செய்ய முடியாத விஷயம்

    அப்பச்சியின் இறப்பு !!

    .

    .
    அப்பச்சி இறந்த பொழுது அந்தக் கட்டிலை இடுகாட்டிலும்

    அப்பச்சியை சுடுகாட்டிற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார்கள்

    இன்னும் கொஞ்ச நாளே இருக்கப் போகும் பெருசுகள் !

    .

    .

    “அந்தக் கட்டிலையாவது விட்டு போங்கள் ! “

    அந்தக் கட்டிலை ஒன்றும் செய்யக் கூடாதென அழுது புரண்டேன் !!

    .

    .

    என்னை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள

    அப்பச்சி சுடுகாட்டிற்கும் , கட்டில் இடுகாட்டிற்கும்

    பயணம் தொடங்கியது !!

    .

    .

    .

    இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடவில்லை !!

    அப்பச்சிக்காகவும் , அந்த கயிற்றுக் கட்டிலுக்காகவும் !!!

  7. உயிரை பூமியில் உருவாக்கி
    உதிரம் மட்டும் சிகப்பாக்கி
    உறவை அதிலே பலமாக்கி
    ஆணும் பெண்ணும் இரண்டாக்கி
    ஆண்டவர் இணைத்தார் துணையாக்கி.

    ஆதியில் படைத்த சோடிகளை
    ஆண்டவர் சேர்த்தார் கூடியதை
    கணவன் மட்டும் சொந்தமிட
    கட்டளை இட்டார் சாட்சியிட
    கட்டில் சொந்தம் புனிதமிட.

    மஞ்சம் அசுசிப் படாமலே
    மனதில் வஞ்சம் தொடாமலே
    அன்பின் பலத்தை விடாமலே
    ஆக்கும் சொந்தம் மஞ்சமே
    அதுதான் கட்டில் பந்தமே.

    கட்டிலின் உறவை பலமாக்கி
    கருத்தினில் ஒற்றுமை இனிதாக்கி
    தொட்டிலின் வரவை உருவாக்கி
    தொடர்ந்திட உயிர்கள் பலவாக்கி
    தொடுத்தான் இறைவன் மணமாக்கி.

    உயிர்கள் எத்தனை வகையுண்டு
    உறவுகள் எத்தனை தரமுண்டு
    உணர்வுகள் எத்தனை பலமுண்டு
    கட்டிலின் மஞ்சம் கணவனுக்கே
    கட்டளை ஆண்டவன் மனிதனுக்கே.

  8. கட்டில் மீது மெத்தை இருக்கு
    மெத்தை மீது நம் கனவு இருக்கு
    நம் இருவரின் இடையே
    இடைவெளி எதற்கு

    வெட்க்கப்பட்டு தலைகுனிய தேவை இல்லை
    என் அருகில் வர தயக்கம் எதற்கு
    பொங்கிவரும் ஆசைகளை மறைப்பது எதற்கு
    நம் இருவருக்கும்
    கணவன் மனைவி என்ற
    உறவு இருக்கு

    உன்னை
    தொட்டுக்கொள்ள
    நான் எத்தனிக்கும் போது
    நீ கையை தட்டி விட்டு
    விலகுவது எதற்கு

    உன்
    இஷ்டதுக்கே உன்னை
    விட்டு விடவா அல்லது
    என் கஷ்டத்துக்கு
    உன்னை அள்ளிக்கொல்லவா

    ஆனாலும்
    உன் விருப்பம் இல்லாமல்
    உன்னை தொட்டுக்கொள்ள
    மனம் மறுக்கிறது

    தனித்தே வாழ்கிறோம்
    நானும்…….நீயும்…….நம் வீட்டு கட்டிலும்

    இப்படிக்கு …………………..உன்னவன்

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?