தாலிக்கயிறு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

tblSambavamnews_83910769225

தாலிக்கயிறு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் தாலிக்கயிறு பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

தாலிக்கயிறு ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

தாலிக்கயிறு பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to தாலிக்கயிறு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. Samuvel says:

    திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

    தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

    திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

    திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

    புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.க. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

    ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

    மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:
    சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை.

    ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

    சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

    இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

    ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

    அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

    கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

    * இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
    * என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
    * தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
    * எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
    * தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
    * ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
    * நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

  2. Samuvel says:

    மதுரையில் நடைபெறும் முக்கியமான விழா சித்திரைத் திருவிழா. கோடைகாலமான ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களும், யாத்ரீகர்களும் வருவது வழக்கம். இந்த மாதத்தில்தான் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் முடிக்கும் விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு மட்டுமே மதுரைக்கு சுமார் பத்து லட்சம் மக்கள் வெளியூரிலிருந்து வருவார்கள். “கோவிந்தா” என்று லட்சக்கணக்கான மக்கள் முழங்க அழகர் ஆற்றில் இறங்குவார். மதுரையில் நடந்த வைணவ மற்றும் சைவ மதத்தினருக்கு இடையேயான சண்டையை தவிர்க்க திருமலை நாயக்கரால் முதல் முதலாக இரு மதத்தினருக்கும் பொதுவான திருவிழாவாக சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். மீனாட்சி அம்மன் திருகல்யாணம், எதிர் சேவை, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குவது என்று நீண்ட நாட்களாக நடைபெறும். இந்த விழாவின் உச்சகட்டம் அழகர் ஆற்றில் இறங்குவது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். எதிர் சேவையின் போது அழகர் அணிய ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.

    அழகர் தங்க குதிரையில் மதுரைக்கு தன் தங்கை கல்யாணத்திற்காக பவனி வருவார். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை வரை வருவார். வரும் வழயில் இருக்கும் 18 மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வலம் வருவார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அழகர் வருவதற்கு முன்னால் அவரது உண்டியல்கள் வரும். அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த சில வருடங்களாக பச்சை பட்டு உடுத்தி இறங்கியும் வைகை அணையில் தண்ணீர் இல்லாததால் அழகர் வாய்காலில் இறங்குகிறார் என்பது வேறு விஷயம்.

    அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில். அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் அழகரைக் காண வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க. சற்று வசதியானவர்கள் ரஸ்ணா கூட வழங்குவார்கள். இந்த வருட விழாவில் தாகம் கொண்ட யானை ஒன்று ஒரு பந்தலுக்குள் சென்று ஒரு ரஸ்ணா அண்டாவையே காலிசெய்தது. பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின்மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும். அழகர் திருவிழா நடைபெறும் பொழுது மட்டுமே மதுரையில் சீரணி விற்கப்படும். அதிலும் கருப்பட்டி சீரணி அமிர்தமாக இருக்கும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சி நடைபெறும். கோடைகாலத்தில் மதுரைச் சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு சித்திரைப் பொருட்காட்சி.

    அழகர் வரும்பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்.”சாமி இன்னிக்கு எங்க இருக்குது” என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.

    மதுரையை சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு திருவிழா காண வருவார்கள். சிறு வயதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய வண்டி அது. அதில் எல்லா வசதிகளும் இறக்கும். மாடு மட்டும் சுமார் எட்டு அடி உயரம் இருக்கும். சமையல் செய்ய பாத்திரம், அடுப்பு மற்றும் தூங்கும் வசதி எல்லாமே அதில் இருக்கும். மதுரையில் பொங்கல் அல்லது சித்திரைத் திருவிழாவிற்கு மட்டுமே வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள். ஊரே புத்தம் புதிதாக மாறி இறக்கும். சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழா சித்திரைத் திருவிழா.

  3. Samuvel says:

    வாசலில் கோலமிடுதல், கோலத்தின் நடுவே பரங்கிப்பூவை
    வைத்தல், திண்ணையையும் தெருவையும் சாணமிட்டு மெழுகுதல்,
    தரையோடு போடப்பட்ட அடுப்பு, பெரும்பாலும் மண்பாண்டங்கள், புளியிட்டுத் துலக்கிய பித்தளைக் குடம் தவலைகள், சுரைக்கொடி படர்ந்த கூரைவீடுகளுக்கிடையே ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள், மாலையில் திண்ணை மாடத்தில் விளக்கேற்றுதல், பெண்கள் தலையைப் பின்னலிட்டுப் பூச்சூடிக் கொள்ளுதல், மகளிர் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளிலும் ஆடவர் புதன் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் முழுக்கு
    ஆடல், மகளிர் காது மூக்குக் குத்திக் கொள்ளுதல், உடம்பிற்குச்
    சீயக்காய், ஆவாரந்தூள், செம்பருத்தி இலை ஆகியவற்றைத்
    தேய்த்து நீராடல், காலில் மணமான மகளிர் மெட்டி அணிதல்,
    கழுத்தில் தாலிக்கயிறு, காலில் கொலுசு, கையில் வளையல்
    அணிதல், மாமன், மாமன் மகன், அத்தை மகன் என
    உறவுமுறையில் திருமணம் செய்தல், திருமணத்திற்குமுன் பரிசம்
    போடுதல், திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளுதல், தாலி
    கட்டுதல், மெட்டியிடுதல், அம்மி மிதித்தல், நலுங்கு வைத்தல்
    ஆகிய சடங்குகள் நடைபெறும். இவையெல்லாம் இன்றைக்கும்
    மிக உள்ளொடுங்கிய சிறிய கிராமங்களில் தவறாது காணப்படும்
    பண்பாட்டுக் களங்களாகும்.

    5.6.1 கிராமியப் பழக்கங்கள்

    கிராமத்திற்கென்று அமைந்த சில பழக்கங்கள் இவைதாம்
    தமிழர் பண்பாடு என்று நமக்குக் காட்டுகின்றன. இங்கே
    திருமணத்தின்போது கூறைப்புடைவை சட்டை அணிந்து பெண்
    நெற்றியில் திலகம் தீட்டிக் கொள்வாள். ஆடவன் எட்டு
    முழத்தில் கரையிட்ட வேட்டியும் சட்டையும் அணிவான்.
    திருமணத்தில் உறவினர்களும் நண்பர்களும் பணத்தை
    அன்பளிப்பாக வழங்குவர். அதை மொய் எழுதுதல் என்பர்.
    திருமண விருந்தில் பெரும்பாலும் சைவ உணவே இடம்பெறும்.
    சில இடங்களில் இறைச்சி உணவும் உண்டு. இசுலாமியர்
    திருமணத்தின் போது இறைச்சி கலந்த சோற்று விருந்து
    படைப்பர். பின்னால் மகப்பேறு தாய்வீட்டில் ஊர் மருத்துவச்சி
    துணையோடு நிகழும். குழந்தைக்கு அரைஞாண் பூட்டும்
    வழக்கம் உண்டு. பூப்பெய்துதல் சடங்கு, வளைகாப்புச் சடங்கு,
    தாலி பெருக்கிக் கட்டும் சடங்கு ஆகியன இன்றும் மாற்றமின்றி
    நடைபெறுகின்றன.

    (அரைஞாண் பூட்டுதல் என்பது பச்சிளம் குழந்தைக்குத் தெய்வப்
    பாதுகாப்பு கருதித் தெய்வத்தின் படைக்கலன்களைப் பொன்னால்
    உருவாக்கிக் கயிற்றில் கோர்த்து அணிவித்தல் ஆகும்.

    பூப்பெய்துதல் ஆவது பெண் பருவம் அடைகின்ற நிகழ்ச்சியைக்
    கொண்டாடும் சடங்கு ஆகும்.

    வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்ணுக்குத் தெய்வம்
    பாதுகாப்புத் தர வேண்டி, தெய்வத்தை வாழ்த்தி வணங்கி,
    வளையல் இடுவதாகும்.

    தாலி பெருக்கிக் கட்டுதல் ஆவது புது மணப்பெண் ஆடி
    மாதத்தில் தாலியைப் புது மஞ்சள் கயிற்றில் சேர்த்துக் கட்டிக்
    கொள்வதாகும்.)

    மகளிர் எட்டுமுழம், பதினாறுமுழம் கொண்ட
    நூற்சேலைகளை உடுத்துவர்; சிறப்பு நாட்களில் பட்டுச்சேலை
    உடுத்துவர். திருமணம் போன்ற நாட்களிலும், சிறப்பு
    விருந்துகளிலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளுதலும்
    உண்டு.

    இதுபோலப் பல பழக்கங்கள் கிராமத்திலிருந்து இன்றும்
    விடைபெறவே இல்லை.

    5.6.2 கிராமியச் சடங்குகள்

    வழிவழியாகக் கிராமத்தில் வரும் சடங்குகள் பலப்பல
    இருக்கின்றன. பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான சடங்குகளில்
    கடைப்பிடிக்கப்பெறும் சில பழக்கங்களுக்குக் காரண காரியம்
    இன்று அறியப்படவில்லை.

    கணவன் இறந்தபின் கிராமங்களில் மகளிர் பூச்சூட்டுதலோ
    பொட்டிட்டுக் கொள்வதோ இல்லை. பிணத்தைப் பெரும்பான்மை
    எரித்தலும், சிறுபான்மை புதைத்தலும் மேற்கொள்ளப்படும்.
    இறந்த மறுநாள் பால் தெளிப்பு, பதினாறாம் நாள் காடாற்று
    கருமாதி ஆகியன நிகழும். பிணத்திற்கு மூத்த மகனே
    தீயிடுவான். நீர்க்குடம் உடைத்தல், எலும்புகளை ஆற்றில்
    கரைத்தல் ஆகியன குறிக்கத்தக்க இறப்புச் சடங்குகளாகும்.
    இறந்தவரின் நினைவு நாளைப் போற்றுதல், அவர்களுக்குப்
    படையலிடுதல் ஆகியன இன்றும் வழக்கிலிருக்கும்
    சடங்குகளாகும்.

  4. Samuvel says:

    திருமங்கலக்குடி அன்னை மங்கனாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள் புரிகிறார். அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கும். அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.

    இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

    சுமங்கலி பெண்கள் அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்துகொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர்.

    இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்கிறனர்.

  5. Samuvel says:

    அண்மைச் சுட்டு

    கண்ணீர்த் தீவுகளில்,

    நம் தமிழர் இனம்
    தவிக்க – வெற்றுப்
    பேனா க்களில்
    அவர்களின் அவலத்தை
    நிரப்பி,
    இதழியல் படைப்பு!

    பரிதாபச் சொற்களில்
    வாய்ப் பந்தல் !

    இன்னும் எத்தனை
    நாடகங்கள் அரங்கேற்றமோ?

    ஈழத் தமிழர் ரத்தம் குடித்து
    எத்தனை தல விருட்சங்கள் -அந்தத்
    தேசத்தில் தலை விரிய,

    பேசிக்கொண்டே,
    உறுமிக்கொண்டே,
    முழக்கமிட்டே,
    வீணே மேடைகள்
    விளம்பர ஊடகங்களாக,
    பாசாங்கு நட்பு.

    முற்றுப்பெறாத புள்ளிக்
    கோலங்களாய் தொடங்கிய
    இடத்திலேயே
    சிக்கலாகிப்போன
    நம் முயற்சி!

    விடியலுக்காக அவர்கள்-
    விழிகளில் இன்னமும்
    நம்பிக்கையைத் தேக்கிக்கொண்டு

    விரைந்திட வேண்டும்
    நம் தலைமுறைகள்
    மிச்சமுள்ளதே!

    – எழிலி

  6. Samuvel says:

    புத்துயிர் கொண்ட புதிய பூமி

    மேற்க்கே விழுந்து
    மரித்துப்போன கதிரவன்;
    வெள்ளை உடுத்தி விதவைகோலம்
    பூண்டிருக்கிறாள் நிலா!
    உடைத்து போட்ட
    நட்சத்திர வளைத் துகள்கள்;
    கண்ணீர் பெருக்கு மழை;
    கருப்பு கொடிபிடித்த கார்மேகம்;
    அலை எழுப்பும் அழுகுரல் ஒப்பாரி;
    இருளின் மடியில் இறந்துபோன பூமி!

    எதிர்காலம் விளக்கேற்றுகிறது கிழக்கில்;
    சீர் வரிசையாய் தங்கமுலாம் பூசிய
    பாடும் பறவைகள்;
    சுபமுகூர்த்த வேளை;
    சுடர்விடும் சூரிய மாப்பிள்ளை;
    முகில் வெட்கம் மூடிய நிலாப்பெண்;
    கண்பட்டுவிடாமல் கவர்ந்துகொண்ட கார்மேகம்;
    புது வாழ்வு புணர அட்சதை தூவும் ஆனந்தமழைச் சாரல்;
    ஏழு வர்ண்ணம் எடுத்து பூசிய வானவில் தாலிக்கயிறு;
    எட்டு திக்கும் இடி(ந்து) விழும் கெட்டி மேளம்;
    கடல் பாடும் வாழ்த்தொசை;

    முதல் ராத்திரி!
    அம்மாவாசையின் கருப்பு அறைக்குள்
    காணாமல் போன காதல் ஜோடி;
    சின்ன சின்ன சிமிலி விளக்கு பிடிக்கும்
    நட்சத்திர கூட்டம்.
    பிரபஞ்ச கருவறையில்
    புத்துயிர் கொண்ட புதிய பூமி.

    – சீமான்கனி

  7. Samuvel says:

    கேள்வி : திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?

    முன்பின் அறிமுகமில்லாத இரண்டு ஜீவன்கள் இணைவதுதான் உண்மையான திருமணம், இத்திருமணத்தை (1) இறைவன் சாட்சியாகவும் (2) பெரியவர்கள் சாட்சியாகவும் (3) தன்னுடைய மனசாட்சியைக் கொண்டும் ஓர் ஆண் மகன் தாலியைக் கட்டுகிறான், இந்த மூன்று சாட்சிகளை மூன்று முடிச்சுகளாக உருவகப்படுத்துவதே தாலி கட்டுவதன் அர்த்தமாகும்.

    கேள்வி : திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

    கோமதி திருச்சி

    திருமணமானவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிப்பதற்கு மட்டுமன்றி கால் கட்டை விரலுக்கு அடுத்ததாக உள்ள விரலில் உள்ள நரம்பு மூளையோடு இணைந்து பாலுணர்வைத் தூண்டுகிறது என்பதற்காகவும் அணியப்படுகிறது, அந்த நரம்பு வெள்ளி உலோகத்தால் தூண்டப்படுமத் போது கணவன் – மனைவி இடையேயான தாம்பத்ய உறவை நெறிப்படுத்தி அவர்களைத் திருப்தியுறச் செய்கிறது.

  8. Samuvel says:

    அன்புள்ள அம்மாவுக்கு!

    காசு இருக்கிறவர் மட்டுமே
    படிக்கும் கல்லூரியில் எனக்கும்
    இடம் கிடைத்தது உனது புண்ணியம்

    கல்லூரி பணம் கட்ட
    அம்மா தந்தது தாலிக்கயிறு – வறுமை
    தாளாது அப்பா எடுத்தது தூக்குக்கயிறு

    இங்கு
    டிசெர்ட்டும் ஜீன்சும் தான்
    சொல்லாத சீருடை
    எனக்கு மட்டும் தான் ஓருடை!
    விடுதிக்கு பணம் கட்டணுமாம்
    எப்படி சொல்வேன் – பக்கத்து
    வீட்டு பாத்திரத்தோடு போராடும்
    உன்னிடமும்
    நாலு பேருக்கு முன்னால் கேட்கும்
    காப்பாளரிடமும்.

    வறுமையை வரிசையாக
    அமர்ந்து
    உணவு உண்ணும் போதெல்லாம்
    ஒருவேளை உணவுகூட ஒழுங்காக
    கிடைக்காது போராடும் உன் ஞாபகம் ….
    டம்ளரில் தண்ணீருக்கு பதிலாக
    கண்ணீரே நிரம்புகிறது

    அம்மா !
    வரும் தேர்வு விடுமுறைக்கு
    வருகிறேன் ஊருக்கு
    கொடிக்கம்பத்தில் தொங்கும்
    இலவச வேட்டியை
    இரண்டாக கிழி
    உன்
    ஈரத்துணி போராட்டத்திற்கு
    இன்னுமொரு ‘புதிய பங்காளி’…!

  9. Samuvel says:

    சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை.
    15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
    11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 – 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)

    மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை.
    ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 – 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
    துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்;பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.

    கிரக சர்ப்ப சாந்தி.

    பாம்பினை அடிப்பதால் வரும் தோசம்;, முன்னோர்களினால் வந்த நாக தோசம்; நீங்க செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்து வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதிற்க்கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளிற்கு அன்னதானம் செய்ய வேண.டும்.
    1. ராகு கால பௌர்ணமி பூஜை – பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
    2. ராகு கால கிருத்திகை பூஜை – புகழ் தரும்.
    3. ராகு கால சஷ்டி பூஜை – புத்திரப்பேறு கிடைக்கும்.
    4. ராகு கால ஏகாதசி பூஜை – பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
    5. ராகு கால சதுர்த்தி பூஜை – துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
    எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    கேது பகவான்.

    ராகுவின் உடற்பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும். கேது ஞானம், மோட்சம் தருபவர். ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.
    கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வர்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.

    ராகு, கேது ஸ்தலங்கள் திருப்பதி அருகிலுள்ள திருக்காளஹஸ்தி, கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் ஆகும்.

    விளக்குத்திரி தரும் பலன்கள்.

    1. பஞ்சுத்திரி – வீட்டில் மங்களம் நிலைக்கும்.
    2. தாமரைத்தண்டுத்திரி – முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.
    3. வாழைத்தண்டுத்திரி – தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.
    4. வெள்ளெருக்கன் பட்டைத்திரி – வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.

    விளக்கேற்றும் திசைகள்

    1. வடக்குத்திசை – தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
    2. கிழக்குத்திசை – சகல சம்பத்தும் கிடைக்கும்.
    3. மேற்குத்திசை – கடன்கள் தீரும். நோய் அகலும்.
    4. தெற்குத்திசை – இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது

    விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.

    1. பசு நெய் – மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
    2. விளக்கெண்ணெய் – குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
    3. இலுப்பையெண்ணெய் – குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
    4. நல்லெண்ணெய் – கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.
    5. தேங்காயெண்ணெய் – வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.
    6. முக்கூட்டு எண்ணெய் – பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும். இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.

    ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது. பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்
    ==========

    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)

    துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
    துன்பம் பறந்தோடும்
    தர்மம் காக்கும் தாயும் அவளே
    தரிசனம் கண்டால் போதும்
    கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும்(ஜெய )

    பொற் கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
    நெற்றியிலே குங்கும பொட்டும் வெற்றி பாதையை காட்டும்
    ஆயிரம் கரங்கள் உடையவளே
    ஆதிசக்தி அவள் பெரியவளே
    ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
    தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)

    சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
    மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
    தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மா …
    சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
    திங்களை முடி மேல் சூடி நிற்பாள்
    மங்கள வாழ்வும் தந்திடுவாள்
    மங்கையர்க்கரசியும் அவளே
    அங்கையர்கண்ணியும் அவளே (ஜெய..)

    ராகு கால துர்க்கா அஷ்டகம் (ஹரிவராசனம் மெட்டில் பாடவும் )
    வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
    வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
    தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
    தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    உலகை ஈன்றவள் துர்க்கா உமையு மானவள்
    உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
    நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
    இலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்
    அம்மையான்வல் அன்புத் தந்தை யானவள்
    இம்மையான்வல் துர்க்கா இன்பமான்வல்
    மும்மை யானவள் என்றும் முழுமை துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    உயிருமானவள் துர்க்கா உடலுமான்வல்
    உலக மானவள் எந்தன் உடமை யானவள்
    பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
    பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
    துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
    அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
    நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    குருவுமானவள் துர்க்கா குழந்தையானவள்
    குலமுமான்வல் எங்கள் குடும்ப தீபமே
    திருவுமான்வல் துர்க்கா திருசூலி மாயவள்
    திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    ராகுதேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
    ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
    ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டிநீன்
    ராகுதுர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
    கருணை துர்க்கையே வீரக்ககனத் துர்க்கையே
    அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
    அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
    தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

    ( “தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே” என்ற நாமம் வரும்போது விரதம் இருப்பவர்கள் நமஸ்க்காரம் செய்வது மிகவும் நல்லது )

  10. Samuvel says:

    ஸ்ரீ விநாயகர் துணை,
    ஸ்ரீ ராமச்சந்த்ர பரப்ப்ரம்ஹனே நமஹ

    ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக சர்க்கம்.

    ஸிரஸ்யஞ்சலி மாதாய கைகேயாநந்த வர்த்தன
    முபாஷே பரதோஜ்யேஷ்டம் ராமம் சத்ய பராக்ரமம்

    பரதன், தலை மேல் கைகூப்பி மஹா பானுவரான தன் தமையனைப் பார்த்து பின் வருமாறு சொன்னார். கைகேயி, அந்த வார்த்தைகளைக் கேட்டு முகம் மலர்ந்து பரமானமடைந்தாள்.

    ஸ்வாமி, தாங்கள், இந்த ராஜ்யத்தை வேண்டாமென்று வனவாசம் செய்ததால் என் மாதாவின் மனத்தை சந்தோஷப்படுத்தினீர்கள். பிறகு சித்திரக்கூடத்தில் இதை என்னிடத்தில் ஒப்புவித்தீர்கள்.ஆகையால் தாங்கள் என்னிடத்தில் அடைக்கலமாக வைத்த கோசல ராஜ்யத்தை இப்போது தங்களிடத்தில் மறுபடியும் கொடுத்து விட்டேன்.

    ஆனால், நான் கேட்ட போது நீ கொடுக்கலாம், அது வரையில் நீயே வைத்துக் கொண்டிரு, நான் அயோத்யையில் சகல போகங்களையும் அனுபவித்துக் கொண்டு சுகமாய் வசிக்கிறேன். நீயே ராஜ்யத்தை ஆண்டு வா என்று சொல்வீர்கள்.

    பூரண பலமுள்ள ஒரு எருது தனியாய், சஹாயமில்லாமல், சுமந்து வந்த பாரத்தை சிறு கன்றுக்குட்டி சுமக்குமா?!!!

    அப்படியானால், இது வரையில் எப்படி ஆண்டு வந்தாய்?!!! என்று கேட்பீர்கள்!!! ஆற்றில் ஜலத்தில் வேகத்தை தடுப்பதற்கு மரக்கிளைகள், வைக்கோல் , மரம், முதலிய பதார்த்தங்களால் உறுதியாய் அணை கட்டிவிட்டால் அங்கங்கே சிறு துவாரங்கள் ஏற்பட்டு ,அவைகளின் வழியாய் ஜலம் ப்ரவாஹித்து முடிவில் அணையை அடித்துக்கொண்டு போவது போல், இந்த ராஜ்ய பாலனம் சுலபமல்ல…

    ஆளுகிறவனுக்கு உத்தம குணங்களென்ற பலமான அணையில்லாவிட்டால், ராஜ்ய ரகசியங்கள் சீக்கிரத்தில் வெளிப்படும்.

    ஆனால், என்னைப்போல நீயும் பிரஜைகளை உத்தம குணங்களால் வசப்படுத்தக் கூடாதா?!!! என்பீர்கள்.

    உத்தம அசுவத்தின் நடைக்கும், கழுதையின் நடைக்கும் உவமையுண்டோ?!!! காக்கை ராஜ அம்சத்தை போலாகுமா?!!!

    தாங்கள் போகும் வழியில் வேறொருவர் அடியெடுக்க முடியுமோ?!!!

    ஆனால், நானும் உனக்கு சஹாயமாயிருக்கிறேன், நீயே ராஜ்யத்தை ஆண்டுவா !!! என்பீர்கள்.

    ஒரு வீட்டில் வளர்த்த மரம், விசாலமான கிளைகளுடன் அதை வளர்த்தவனுக்கு என்ன பிரயோஜனம்?!!!

    நமது பிதா, அறுபதாயிரம் வருஷங்கள் வரையில், புத்திரனில்லாமல் அசுவமேதம், புத்திர காமேஷ்டி யாகம் முதலிய யாகங்களைச் செய்து தங்களைப் பெற்றார். தாங்கள் லோகோத்தமமான அனந்த கல்யாண குணங்களுடன் வளர்ந்து வந்தீர்கள். இந்த ராஜ்யத்தை தங்களிடம் ஒப்புவித்து தான் செய்த பிரயத்தினங்களின் பலனை, அனுபவிக்கலாமென்று அவர் நினைத்தார்.

    இப்போது சகல பூமண்டலத்தையும் தர்மமாகப் பரிபாலனம் செய்யத் தகுந்த உத்தம குணங்கள், தங்களிடத்தில் இருந்தும் வம்ச பரம்பரையாய் ஜ்யேஷ்ட புத்திரர்களால்,ஆளப்பட்டு வந்த ராஜ்யத்தை, தாங்கள் ஆளாவிட்டால், தங்களைப் பெற்று வளர்த்ததி பிரயோஜனமென்ன?

    சூரியன், மத்யான காலத்தில், ஆகாசவீதியில் , பூர்ண கிரஹங்களுடன் , சகல ஜகத்திற்கும் , பிரகாசத்தையும், ஆயுளையும் கொடுத்துக் கொண்டு விளங்குவது போல், தாங்கள் பட்டாபிஷேக, மஹோத்சவம், பெற்று சிம்மாசனத்திலிருந்து, எங்களெல்லோருக்கும், ஷேமத்தை கொடுப்பதை நாங்கள் பார்த்து மகிழ்கிறோம். விடியற்காலத்தில் மதுரமான கானங்களாலும், வாத்ய சப்தங்களாலும், தங்கச் சலங்கைகளாலும், அலங்கரிக்கப்பட்ட உத்தம ஸ்திரிகளின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்படுவதை, நாங்கள் கண்டு மகிழ்கிறோம். சகல போகங்களையும் அனுபவிக்கத் தகுந்தவர்கள் தாங்களே.!!!

    ஆனால், உங்களுக்கு ராஜ்யபாலனம் செய்ய ஆசையில்லையோ?!!! என்று கேட்பீர்கள், சூரியன், சந்திரன், கிரஹங்கள், நட்சத்திரங்கள் முதலியன உள்ளவரையிலும், தாங்கள், எங்களை பரிபாலனம் செய்ய வேண்டுமென்பதே எங்கள் பிரார்த்தனை , என்றார்.

    ராமன் பரதனுடைய சரணாகதியை அங்கீகரித்து, உத்தமமான ஆசனத்தில் உட்கார்ந்தார். பிறகு சுகமாயும், சீக்கிரமாயும். சாதுர்யமாயும், ஷவரம் செய்யக் கூடியவர்களை சத்ருக்கனர் தருவிக்க, அவர்கள் ராம, லட்சுமண, பரத சத்ருக்கனர்களுடைய ஜடைகளை நீக்கினார்கள்.

    பரதன், லட்சுமணன், சுக்ரீவன், விபீஷணன், முதலியவர்கள் ஸ்நானம் செய்த பிறகு, விசித்திரமான மாலைகளாலும், பரிமளங்களாலும், வஸ்திரங்களாலும், ஆபரணங்களாலும், ராம லட்சுமணர்களை சத்ருக்கணன், அலங்காரம் செய்வித்தார். தசரதருடைய பத்தினிகள் சீதைக்கு சகல அலங்காரங்களையும், தாங்களே செய்தார்கள்.

    தாரை, முதலிய வானர ஸ்த்ரீகளுக்கு அலங்காரங்களையும், ராமனிடத்தில் எல்லையற்ற வாத்சலயத்தை வைத்த கௌசல்யை செய்வித்தாள். பிறகு சத்ருகனருடைய உத்தரவால், இஷ்வாகு குல சாரதியான. சுமந்திர், உத்தம அசுவங்கள் பூட்டிய ராஜ ரதத்தை கொண்டு வந்து நிறுத்தினார்.

    சூரிய மண்டலத்தைப் போல் பிரகாசிக்கும் அந்த ரதத்தில் ராமன் ஏறினார். சுக்ரீவனும் , ஹனுமானும் மஹேந்திரனைப் போல் தேஜசால் ஜ்வலித்துக் கொண்டு நேர்த்தியான வஸ்திராபரனங்களால் அலங்கரிக்கப்பட்டு, ராமனுடன் போனார்கள். சுக்ரீவனுடைய பார்யைகளும், சீதையும், திவ்யாலங்காரங்களுடன் அயோத்யையைப் பார்க்க அவர்களுடன் போனார்கள்.

    பிறகு, அயோத்யையில் , தசரதருடைய மந்திரிகளும், வஷிஷ்டரும், ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய மங்கள திரவியங்களை சம்பாத்தித்தார்கள்.

    அசோகன், விஜயன், சுமந்திரன், முதலியவர்கள் ராமனுக்கு, சுகமும் ஐசுவர்யமும், விருத்தியாவதற்கும் , இந்த நகரமும் ராஜ்யமும் , எப்போதும் மஙகளத்தை அடைவதற்கும், வேண்டிய சகல சுபக் கிரியைகளையும் குறைவில்லாமல் செய்ய வேண்டியது , என்று வஷிஷ்டரை பிரார்த்தித்து, ராமனைப் பார்ப்பதற்காக திரும்பி வந்தார்கள்.

    திவ்ய அசுவங்கள் பூட்டிய ரதத்தில், மாதலி சாரத்யம் செய்ய, தேவ கனங்கள் புடை சூழ , இந்திரன் வருவது போல் திவயமான ரதத்தில் , சுமந்திரன் சாரத்யம் செய்ய, சகோதரர்களும், வானரர்களும், ராக்‌ஷசர்களும், பிரஜைகளும், புடை சூழ, ராமச் சந்திரன் விளங்குவதைக் கண்டார்கள்.

    பரதன் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு சுமந்திரருக்குப் பக்கத்திலிருந்து சாரத்யம் செய்து வந்தார். சத்ருக்கனன் இஷ்வாகு சக்ரவர்த்திகளுடைய வெண்குடையைப் பிடித்தார். லட்சுமணன் ராமனுக்கு முன் நின்று வெண் சாமரத்தை வீசினார். ராஷசபதியான விபீஷனன் மற்றொரு வெண்சாமரத்தை வீசினான்.

    அப்போது ஆகாச வீதியில் , தேவர்களும் ,ரிஷிகளும், மருத் கணங்களும், ராவணாதி ராஷசர்களை, நாசம் செய்து தங்களுக்கு, எல்லையற்ற சுகத்தையும், ஷேமத்தையும், கொடுத்ததைப் பற்றி, ராமனைக் கொண்டாடும், மதுரமான த்வனி கேட்கப்பட்டது, மஹா பர்வதத்தைப் போல், மத ஜலத்தைப் பெருக விட்டுக் கொண்டிருக்கும், சத்ருஞ்செயன் என்ற பட்டத்து யானையின் மேல் விளங்கும், இந்திரனைப் போல் பிரகாசித்தான்.

    இதர வானரர்கள், மனுஷ்ய ரூபத்துடன் , சர்வாபரண பூஜிதர்களாய், ஒன்பதாயிர மத யானைகளின் மேல் ஏறி வந்தார்கள். இப்படி, சங்கம், பேரீ, துந்தபி, வீணை, மிருதங்கம், முதலிய வாத்ய கோஷங்களுடன் ரகுவீரன் அயோத்யையை நோக்கிப் போனார்.

    மந்திரிகள் அவரை, ஜய விஜயீ பவ, என்று வாழ்த்தி அவரால் உபசரிக்கப்பட்டு, அவரைப் பின் தொடர்ந்து வந்தார்கள். பிரஜைகளாலும் , பிராமணர்களாலும், மந்திரிகளாலும் சூழப்பட்டு, ராகவன் ஆகாச வீதியில் , நட்சத்திரங்களால், சூழப்பட்ட சந்திரனைப்போல பிரகாசித்தார்.

    அவருக்கு முன் அநேகர், மங்கள வாத்தியங்களை கோஷித்துக் கொண்டு சென்றார்கள். ஸ்வஸ்திகம் முதலிய மதுரமான வாத்தியங்களை, அநேகர் வாசித்துக்கொண்டு போனார்கள். கன்யைகளும் பிராமணர்களும், மஞ்சள் கலந்த அட்சதைகளை, எடுத்துக் கொண்டு முன்னே போனார்கள்.

    உத்தம லட்சணங்களுள்ள பசுக்கள் சென்றன. ராமனுக்கும் சுக்ரீவனுக்கும், நேர்ந்த ஸ்நேகத்தையும், வாயு புத்திரனுடைய பிரபாவத்தையும், வானரர்களுடைய , பராக்கிரமத்தையும், ராஷசர்களுடைய பலத்தையும், விபீஷனனுடைய, சஹாயத்தையும், ராமன் மந்திரிகளுக்கு விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டு, நகரத்து ஜனங்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.

    இப்படிப் பேசிக் கொண்டே சகல சௌக்கியங்களும் பொருந்தின, ஜனங்களால், அலங்கரிக்கப்பட்ட, அயோத்யையில் ராமன் பிரவேசித்தார். ஒவ்வொரு வீட்டிலும் மாலைகளாலும், ஹாரங்களாலும், தோரணங்களாலும், கொடிகளாலும், த்வஜங்களாலும், விசித்திரமாய், அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராமன் பிரஜைகளால் வாழ்த்தப்பட்டு, இஷ்வாகு வம்சத்தார்கள் வசிக்கும், அரண்மனையில் பிரவேசித்தார்.

    கௌசல்யை, சுமித்திரை, கைகேயி முதலிய ராஜ பத்தினிகளை நமஸ்கரித்து, பரதனை நோக்கி, அழகான அசோகத் தோட்டத்துடன் விளங்கும் உத்தமமான என் அரண்மனையில், சுக்ரீவன் தங்கட்டும் என்றார்.

    அவருடைய அபிப்ராயத்தை, பரதன் அந்த வார்த்தைகளால் அறிந்து கொண்டு, சுக்ரீவனுடைய கையைப் பிடித்து அந்த அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்.

    பிறகு, பரிசாரகர்கள், சத்ருக்கனனுடைய உத்தரவால், தீபங்களையும், ஆசனங்களையும், விரிப்புகளையும், படுக்கைகளையும், அந்த அரன்மனையில் கொண்டு போய் வைத்தார்கள். பிறகு சத்ருக்கனன், சுக்ரீவனைப் பார்த்து, பிரபோ!!!, ராமனுடைய அபிஷேகத்திற்காக வானரர்களை அனுப்புங்கள் என்றார். நான்கு வானர சிரேஷ்டர்களை அழைத்து ரத்தினங்களிழைத்த, நான்கு ஸ்வர்ன கடங்களைக் கொடுத்து,

    வானரர்களே!!!!, பொழுது விடியும் முன், நான்கு திக்குகளிலுள்ள, சாகரங்களிலிருந்தும், புன்ய தீர்த்தங்களிலிருந்தும், பரிசுத்தமான ஜலத்தைக் கொண்டு வந்து சித்தமாக இருக்க வேண்டும் என்று ஆக்ஞாபித்தான், உடனே மத யானைகளைப் போன்ற வானர வீரர்கள், ஆகாசத்தில் கிளம்பி கருடனைப் போல அதிவேகமாய்ப் போனார்கள். தங்கக் கலசங்களில் ஐநூறு நதிகளிலிருந்து ,புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்தார்கள்.

    சுஷேஷனண், கிழக்கு சமுத்திரத்திலிருந்தும்,
    ரிஷபன் , தெற்கு சமுத்திரத்திலிருந்தும்,
    கவயன், மேற்கு சமுத்திரத்திலிருந்தும்,
    நளன், வடக்கு சமுத்திரத்திலிருந்தும்,
    ஜலத்தைக் கொண்டு வந்தார்கள்.

    வானரர்கள் ராமனுடைய அபிஷேகத்திற்காகப், புண்ணிய ஜலங்களைக் கொண்டு வந்தார்களென்றறிந்து, சத்ருக்கனனும், மந்திரிகளும், வஷிஷ்டருக்கும், இதர ஸ்நேகிதர்களுக்கும் தெரிவித்தார்.

    ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-

    தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ

    ராமம் ரத்னமயே பீடே ஷஹஸீதம் ந்யவேசயத்

    வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப

    காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா

    அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா

    ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா

    ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா

    யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை

    பிறகு இஷ்வாகு குல சக்கரவர்த்திகளுக்குக் குருவும் தீர்க்காயுள்ளுள்ளவருமான வஷிஷ்ட மஹரிஷி இந்திரியங்களையும், மனத்தையும், சமாதானம் செய்து, சகல பிராம்மணர்களுடைய , அனுமதியைப் பெற்று , ஸ்ரீ ராமனை சீதா தேவியுடன் ரத்ன மயமான சிம்மாசனத்தில் உட்காரச் செய்தார்,

    தேவேந்திரனை அஷ்ட வஸுக்கள் அபிஷேகம் செய்தது போல் வாமதேவர் ஜாபாலி , காஷ்யபர், காத்யாயனர், சுயஞ்சர், கௌதமர், விஜயர் என்ற எட்டு மஹாத்மாக்களும், வேதோக்த மந்திரங்களை ஜபித்து , ஸ்ரீ ராம சந்திரனை பரிமளத் திரவியங்கள், கலந்த புண்ணிய தீர்த்தத்தால், விதிப்படி, பட்டாபிஷேகம் செய்தார்கள்.

    பிறகு சகல ஔஷதிகளும் ரசங்களும் கலந்த புண்ணிய ஜலத்தால், ரித்விக்குகளும் யுத்த வீரர்களும், வர்த்தகத் தலைவர்களும் ரகுவீரனை அபிஷேகம் செய்தார்கள்.

    ஆகாச வீதியில் லோக பாலகர்களும், தேவ கணங்களும், நின்று ஆனந்தமாய் கொண்டாடினார்கள். சத்ருக்கனன் வெண் குடை பிடித்தார். சுக்ரீவன் வெண்சாமரம் போட்டார். இந்திரனால் அனுப்பப்பட்ட வாயு பகவான் , எண்ணிறந்த தங்கத் தாமரைப் புஷ்பங்களால் , அமைக்கப்பட்ட ஒரு பிரகாசமான மாலையையும், நவரத்தினங்கள் கலந்த ஒரு முத்து ஹாரத்தையும், கொண்டு வந்தார்.

    தேவ கந்தர்வர்கள் அந்த மஹோத்சவ சமயத்தில் மதுரமாய் பாடினார்கள். அப்சரஸ் கனங்கள் சாதுர்யமாய் நாட்டியம் செய்தார்கள். சமஸ்த பயிர்களால், பூமி செழித்தது. விருஷங்கள் பழங்களால் நிறைந்தன, புஷ்பங்களிலிருந்து நேர்த்தியான பரிமளங்கள் வீசிற்று. எண்ணிறந்த பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும், குதிரைகளையும், முப்பது கோடி தங்க நாணயங்களையும், பலவித ஆபரணங்களையும், வஸ்திரங்களையும், ரகுநாதன் பிராமணர்களுக்கும், மற்ற ஜாதியர்களுக்கும் கொடுத்தார்.

    நவரத்தினங்களிழைத்து, சூரியனைப் போல் பிரகாசிக்கும் ஒரு தங்க ஹாரத்தை ராகவன் சூரிய புத்திரனான, சுக்ரீவனுக்கு கொடுத்தார். வாலி புத்திரனான அங்கதனுக்கு, நவரத்தினங்களிழைத்த இரண்டு அங்கதங்களை [அதாவது தோள் வளைகளைக்] கொடுத்தார்.

    சந்திர கிரணங்களைப் போல ஒளி வீசும் ரத்தினங்கள் கலந்த ஒரு முத்து ஹாரத்தை சீதைக்கு கொடுத்தார். அவள் இரண்டு உத்தமமான வஸ்திரங்களையும், அநேக ஆபரணங்களையும், பர்த்தாவின் அனுமதியை கண்ஜாடையால் அறிந்து ஆஞ்சநேயருக்கு கொடுத்தாள்.

    பிறகு தன் கழுத்திலிருந்து அந்த ஹாரத்தை கழற்றி, சகல வாணரர்களையும் தன் பர்த்தாவையும், சீதை அடிக்கடி பார்த்தாள். ராமன் அவளுடைய கருத்தை அறிந்து. சீதே!!! எவனிடத்தில் உனக்கு விஷேஷ திருப்தி இருக்கிறதோ? எவனிடத்தில் ஆண்மையும், பராக்கிரமும் , புத்தியும், எல்லையற்று விளங்குகின்றனவோ?, அவனுக்கு இதை வெகுமானமாகக் கொடு, என்றார்.

    உடனே சீதை, அந்த ஹாரத்தை ஆஞ்சநேயருடைய கழுத்தில் போட்டாள். ஆதலால், சந்திர கிரணங்கள் சூழ்ந்த வெண்மையான மேகங்களால் விளங்கும், பர்வதத்தைப் போல் அவர் பிரகாசித்தார். மைந்தன் , த்விவிதன், நீலன், முதலிய சகல வாணரர்களுக்கும், அவரவர்களுடைய உத்தம குணங்களுக்குத் தகுந்த படி, வஸ்திரங்களையும், பூஷணங்களையும் அபரிதமாகக் கொடுத்தார்.

    விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான் முதலிய வானர வீரர்கள், ரத்தினங்களாலும் வெகுமதி செய்யப்பட்டுத் தங்கள் இருப்பிடம் போனார்கள். வானரர்கள் அந்த பட்டாபிஷேக மஹோத்சவத்தைக் கண்டு களித்து, ராமனிடத்தில் உத்தரவு பெற்றுக் கொண்டு கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள்.

    ராஷசாதிபதியான விபீஷணன் , இஷ்வாகு வம்சத்தவர்களுக்குக், குலதனமான ஸ்ரீ ரங்க விமானத்தை, ராமனிடத்திலிருந்து பெற்று, லங்கைக்குப் போனான். விபீஷனன் சகல சத்ருக்களையும் ஜயித்து மஹா கீர்த்திசாலியாய் தர்ம ராஜ்யம் செய்து வந்தான். ராமன் பிரஜைகளைத் தன் குழ்ந்தைகளைப் போல் பாதுகாத்து துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரி பாலனம் செய்து வந்தார்.

    பிறகு,
    லட்சுமணா!!!, தர்ம ரஹஸ்யங்களை அறிந்த புத்திமானே!!! நமது முன்னோர்களால் ஆளப்பட்டு வந்த இந்த ராஜ்யத்தை, என்னுடன் நீயும் பரிபாலனம் செய்!!!. உன்னை யுவராஜாவாக நியமிக்கிறேன்,. என்றார்.

    அவர் எவ்வளவு சொல்லியும், லட்சுமணன் கொஞ்சமாவது சம்மதிக்காததால் பரதனுக்கு யௌவராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்தார். பௌண்டரீகம் , அஸ்வமேதம், வாஜபேயம், முதலிய, யாகங்களைக் கணக்கில்லாமல் செய்தார். பதினோராயிர வருஷங்கள் வரையில் ராஜ்யத்தை ஆண்டார்.

    அபரிதமான தக்‌ஷிணைகளுடன் எண்னிறந்த அசுவமேத யாங்களைச் செய்தார். முழங்கால் வரையில் நீண்ட திருக்கைகளுடனும் மேருமலை போன்ற திருமார்புடன், மஹாப் பிரதாபசாலியாய் லட்சுமணால் எப்போதும் உபசரிக்கப்பட்டு லோகத்தை ஆண்டார். பந்துக்களுடனும் மித்திரர்களுடனும் பலவகை ய்க்ஞங்களைச் செய்து முடித்தார்.

    அவருடைய ராஜ்யத்தில் ஸ்த்ரீக்கள் புருஷனை இழந்து வருத்தப்பட்டதில்லை. துஷ்ட மிருகங்களால். உபத்திரவமில்லை. வியாதியால் பீடிக்கப்பட்டவர்களில்லை. திருடர்களால் பயமில்லை. ஒருவனுக்கும் கஷ்டமென்பது நேரவில்லை. அகாலத்தில் ஒருவரும் மரணமடையவில்லை. எல்லோரும் சந்தோஷமாய் காலம் கழித்தார்கள். எல்லோரும் தர்மத்திலேயே நாடின மனமுடையவர்களாக இருந்தார்கள்.

    தர்ம ஸ்வரூபியான ராமனுடைய ஆசாரத்தையே, பிரஜைகளும் அனுசரித்து ஒருவரையொருவர் உபத்ரவிக்கவில்லை. அநேக ஆயிரம் வருஷங்கள் ஜீவித்திருந்து ஆநேக ஆயிரம் புத்திரர்களுடன் வியாதியில்லாமலும், சோகமில்லாமலும் வாழ்ந்தார்கள். ராமன் ராஜ்யத்தை ஆளும் போது, எங்கே பார்த்தாலும் ராமன், ராமனென்றே எல்லோரும் அவருடைய சரித்திரங்களை வர்ணித்து, அவரையே கொண்டாடினார்கள்.

    ஜகத் முழுவதிலும் ராம மயமாயிற்று, எந்த ருதுவிலும் விருஷங்கள் விசாலமான கிளைகளுடனும், பழங்களுடனும் செழித்தன. மேகங்கள் அந்தந்த காலத்தில் மழை பெய்தன. காற்று சுகமாய் வீசிற்று. பிராம்மணர்களும், சத்ரியர்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும், பேராசையவற்றவர்களாய் தங்களுடைய வர்ணாசிரம தர்மங்களை திருப்தியாயும், சந்தோஷமாயும் , நடத்தி வந்தார்கள். சகல பிரஜைகளும் தர்மத்தில் பிரியமுள்ளவர்களாயும் சுப லக்‌ஷணங்கள் பொருந்தியவர்களாயும் இருந்தார்கள், ஸ்ரீராமன் சகோதரர்களால் உபசரிக்கப்பட்டு பதினோராயிர வருஷங்கள், வரையில் நிகரற்ற காந்தியுடன் ராஜ்ய பரிபாலனம் செய்தார்.

    வாலிமீகி மஹரிஷியால், ஆதியில் செய்யப்பட்ட இந்த காவியம், தனத்தையும், கீர்த்தியையும், ஆயுளையும் அரசர்களுக்கு கொடுக்கும், இதைப் படிப்பவனும் கேட்டவனும், பாபத்திலிருந்து விடுபடுகிறான். ராமனுடைய பட்டாபிஷேக மஹோத்சவக் கதையை கேட்பவன். புத்திரர்களை விரும்பினால் , புத்திரர்களை அடைகிறான். தனத்தை விரும்பினால், தனத்தை அடைகிறான்.

    அரசன் சத்ருக்களை ஜயித்து லோகத்தை ஆளுகிறான். ஸ்த்ரீகளாயிருந்தால் கௌசல்யை, ராமனையும், சுமித்திரை லட்சுமண, சத்ருகனனையும், கைகேயி பரதனையும், அடைந்தது போல தீர்க்காயுளுள்ள உத்தம புத்திரர்களை அடைகிறார்கள்.

    இந்த ராமாயணத்தையும் ராமனுடைய விஜயத்தையும், கேட்கிறவன் தீர்க்காயுளைப் பெறூகிறான். வால்மீகி மஹரிஷியால் செய்யப்பட்ட இந்தக் காவியத்தை, காமக் குரோதங்களை அடக்கிச் சிரத்தையுடன் கேட்கிறவன். சகல கஷ்டங்களையும் தாண்டுகிறான், தூர தேசத்துக்குப் போயிருந்தால் தன் புத்திர மித்திர பந்துக்களுடன் சேருகிறான். ரகுநாதனிடத்திலிருந்து வேண்டிய வரங்களைப் பெறுகிறான்.

    இந்த ராமாயணத்தை கேட்பவனிடத்தில் சகல தேவதைகளும் ப்ரீதி வைக்கிறார்கள். அவனுடைய கிருஹத்திலிருக்கும், விநாயகர்களென்ற தேவதைகள் பிரசன்னமாகின்றன. அரசன் பூமியை ஜயிப்பான். தேசாந்திரம் போனவன் ஷேமமாய் வந்து சேருவான். யௌவன ஸ்திரிகள் உத்தமமான புத்திரர்களைப் பெறுவார்கள்.

    இதை பூஜித்துப் படித்தால், பாவங்கள் நீங்கி, தீர்க்காயுளை அடைவார்கள். சத்திரியர்கள், எப்போதும் இந்தப் புண்ணிய சரித்திரத்தை நமஸ்கரித்து பிராமணர்களிடமிருந்து கேட்க வேண்டியது!!!. அவர்களுக்கு அளவற்ற ஐஸ்வர்யமும் , புத்திரலாபமும் கிடைக்கும்.

    இந்த ராமாயணம் முழுவதையும் எப்போதும் ஒருவன் கேட்டாலும், படித்தாலும், ஸ்ரீ ராம மூர்த்தி அவனிடத்தில் அழிவற்ற ப்ரீதியை வைக்கிறார். அவர் அநாதியான மஹா விஷ்ணுவல்லவா?!!! ஆதி தேவனும் மஹானுபாவரும், சர்வேசுவரனுமான ஸ்ரீமந் நாராயணனே ஸாஷாத் ராமனாயும், அவருக்கு வாகனமான ஆதிஷேஷனே லட்சுமணணாயும் அவதரித்தார்கள்.

    இந்த மங்களகரமான காவியத்தைக் கேட்கிறவர்களுக்குக் குடும்ப விருத்தியும், தன தான்ய விருத்தியும், உத்தமமான சுகமும் கிடைக்கும்.சகல புருஷார்த்தங்களும், கைக்கூடும். சகல மனோரதங்களும் நிறைவேறும். உத்தமமான ஸ்திரீகளை அடைவார்கள். தீர்க்காயுளும் தேகாரோக்கியமும், கீர்த்தியும், சகோதரர்களின் ஒற்றுமையும், தீஷ்ணமான புத்தியும், அழிவற்ற சுகமும், கிடைக்கும், தேஜசைக் கொடுக்கும். இந்த கிரந்தத்தை ஐசுவர்யத்தை விரும்பும் , ஒவ்வொருவரும் நியமத்துடன் கேட்க வேண்டியது.

    வெகு காலத்திற்கு முன் நடந்த இந்தச் சரித்திரம் உங்களுக்கு மங்களகரமாக இருக்கட்டும். விஷ்ணுவினுடைய சக்தி லோகங்களில் விருத்தியடையட்டும் என்று நிச்சயமாய்ச் சொல்லுங்கள். ராமாயணத்தை படிப்பதாலும் கேட்பதாலும் சகல தேவர்களும், பித்ருக்களும், சந்தோஷமடைகிறார்கள். வேத சம்ஹிதைக்கு சமமான இந்த வால்மீகி ராமாயணத்தை பக்தியுடன் எழுதுகிறவர்கள், எந்நாளும் ஸ்வர்க்கத்தில் வசிப்பார்கள்.

    பக்த்யா ராம்ஸ்ய யே சேமாம் சம்ஹிதாம் ரிஷினாக்ருதாம்

    கேயந்தீஹ ச நரா தேஷாம் வாஸஸ் த்ரிவிஷ்டபே

    ராம ராம ராம
    ஜெய் ஸ்ரீராம்
    ===*****===

  11. Samuvel says:

    சங்கிலி – கைகாட்டி

    ‘சம்பளம் எப்போ வரும்?’
    25-ஆம் தேதியிலிருந்தே
    அப்பா போடும்
    கிடுக்கி,

    அடகிலே முழுகிப்போன
    பத்துப்பவுன் சங்கிலியைக் கேட்டு,
    பிய்த்தெடுக்கும்
    தாலிக்கயிறு,

    மருமகள் பற்றி
    தினமும் மகாபாரதம் பாடி
    பாச வலை போடும்
    தொப்புள் கொடி,

    ஒயிலாய் நடந்து வந்து
    பக்கத்து சீட் டைப்பிஸ்ட்
    போடும்
    பார்வைக் கொக்கி,

    ‘பத்தாயிரம் தாரேன்,
    பவிசாய்
    முடிச்சுக்குடுங்க’-
    மேசைக்கடியில் நீளும்
    தூண்டில்கள் ,

    எல்லாவற்றிலுமாய்ச்
    சிக்கி இழுபட்டு,
    சித்திரவதைக்காட்பட்டுச்
    செத்துப்போனதென்
    மனிதம்.

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?